பயணத்தின் வெற்றிக்கு நடந்த முன்னேற்பாடுகள்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சுயமரியாதை(சமதர்ம) சமத்துவ பரப்புரை 24.07.2013 அன்று மயிலாடுதுறையில் தொடங்கி திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்க நாளான 12.08.2013 அன்று புதுச்சேரியில் முடிகிறது. இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காகவும், பரப்புரை பயணம் செல்லும் வழியில் உள்ள மண்டல, மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்தித்து பயண ஏற்பாடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்காகவும் கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மதுரை மண்டல பொறுப்பாளர் இராவணன், வாகன ஓட்டுநராக பல்லடம் ஒன்றியச் செயலாளர் மணி கண்டன் ஆகியோர் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து முன்னேற்பாடுகளை செய்தனர்.
11.07.2013 காலை கோபி சென்ற தலைமைக் கழக நிர்வாகிகள் ஈரோடு மண்டலச் செயலாளர் தோழர் இராம. இளங்கோவனைச் சந்தித்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், காவல்துறை அனுமதி விவரம், பயணக் குழுவினர் தங்குவதற்கான வசதிகள் பற்றிக் கலந்துரையாடினர். பின்னர் அங்கிருந்து குருவ ரெட்டியூர் சென்ற தலைமைக் கழக நிர்வாகிகள் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திக சோதியைச் சந்தித்து பயணம் பற்றி விவாதித்தனர்.
அங்கிருந்து மேட்டூர் சென்ற நிர்வாகிகள், மேட்டூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் அங்குள்ள நிர்வாகிகளைச் சந்தித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், மாவட்டச் செயலாளர் சூரியகுமார், அண்ணாதுரை, கொளத்தூர் விஜி, மார்டின், ஈஸ்வரன், சித்துசாமி, டேவிட், கருப்பூர் சக்தி மற்றும் ஜி.பி ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு மேட்டூரிலிருந்து கிளம்பிய தலைமைக் கழக நிர்வாகிகள் அன்று இரவே மன்னார்குடி புறப்பட்டனர்.
12.07.2013 காலை மன்னார்குடியில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் காளிதாஸ், நீடாமங்கலம் முருகன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பாரி, புதுக் கோட்டை மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் ஆகி யோரைச் சந்தித்து பயணத்திற்காகச் செய்யப்பட் டுள்ள ஏற்பாடுகள், தோழர்கள் மற்றும் தலைவர்கள் தங்குவதற்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள் பற்றி கலந்துரையாடினர். பின்னர் மயிலாடுதுறை சென்ற முன்னேற்பாட்டுக் குழுவினர் அங்கு தஞ்சை மாவட்ட அமைப்பாளர் இளைய ராஜா, நாகை மாவட்டச் செயலாளர் மகேஷ், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் விஜய ராகவன், சங்கர் மற்றும் செந்தில் ஆகியோரைச் சந்தித்து கூட்டம் நடக்குமிடம், மேடை அமைப்பு பற்றி கேட்டறிந்தனர்.
இரவு புதுவையில், புதுவை மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பனைச் சந்தித்து, பயணத்தின் இறுதிக் கூட்டமாகவும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டாமாண்டு தொடக்க விழாவாகவும் பொதுக் கூட்ட நிகழ்வு நடைபெறும் இடமான அரியாங்குப்பம் பகுதியில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், பொதுக் கூட்ட அமைவிடம் குறித்து ஆலோசித்தனர்.
13.07.2013 காலை சேலம் வந்த தலைமைக் கழக நிர்வாகிகள், ஆத்தூரில் தோழர் மகேந்திரனைச் சந்தித்து முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசித்து, பிறகு ஈரோடு வந்தடைந்தனர். அங்கு கரூர் மாவட்டச் செயலாளர் காமராஜுயுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர்.
17.7.2013- இரண்டாம் சுற்றுப் பணம் தொடங்கியது.
கோவை மாவட்டம் மடத்துக்குளம் மோகனைச் சந்தித்து, கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி பெற்றுள்ள விபரம், தோழர்கள் தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் பற்றி ஆலோசித்து, பிறகு உடுமலையில் நகர பொறுப்பாளர் மலர் இனியனைச் சந்தித்து முன்னேற்பாடுகள்பற்றி ஆலோசித்து, அங்கிருந்து பழனி புறப்பட்டனர். அங்கு மாவட்டச் செயலாளர் நல்லதம்பி உள்ளிட்ட தோழர்களைச் சந்தித்து இயக்க வளர்ச்சி குறித்து விவாதித்தனர். அடுத்ததாக தாரா புரம் வந்த குழுவினர் அங்குள்ள நிர்வாகிகளைச் சந்தித்து பயண முன்னேற்பாடுகளைப் பற்றி விவாதித்தனர்.
பொள்ளாச்சியில் மண்டலப் பொறுப்பாளர் விஜயராகவன், கிணத்துக்கடவு நிர்மல்குமார் ஆகி யோரைச் சந்தித்தனர். கோவையில் மாநகரச் செய லாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து பயணம் பற்றி ஆலோசித்த நிர்வாகிகள், பின் மேட்டுப் பாளையத்தில் கோவை மாவட்டக் காப்பாளர் இராமச்சந்திரனைச் சந்தித்து பொதுக் கூட்டம் நடத்த செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் பற்றி விவாதித்தனர்.
தொடர்ச்சியாக 20 நாட்கள் 20 மாவட்டங்கள் வழியாக ஏறக்குறைய தமிழ்நாடு முழுதும் நடை பெறும் பயணம் என்பதால், இயக்கத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மதுரை மண்டல பொறுப்பாளர் இராவணன் ஆகியோர் செய்த இந்த முன்னேற்பாட்டுச் செயல்பாடுகளாலும், அந்தந்தப் பகுதியில் உள்ள நிர்வாகிகள் இயக்கத்தின் மேல் கொண்ட அர்ப்பணிப்பான ஈடுபாட்டாலும், பரப்புரையில் கலந்து கொள்ளும் தோழர்கள் எவ்வித சிரமமும் இன்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடங்களில் எவ்வித இடைஞ்சல்களும் இன்றி பரப்புரையில் ஈடுபட்டு வந்து கொண்டுள்ளனர். இதுவரை இல்லாத ஒரு எழுச்சியாக நடத்தப்படும் வீதி நாடகம் மற்றும் பறைமுழக்கம் ஆகியவை மக்களை திரும்ப வைத்துள்ளன. இயக்கம் தொடங்கப் பட்டு ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் கழகத்தின் இந்தப் பயணம், தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் சாதியத்திற்கெதிரான மனப்பான்மை யையும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல்களை பற்றிய ஒரு விழிப்புணர்வையும், இடஒதுக்கீடு பற்றிய தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. பரப்புரை குழுவினருடனேயே தொடர்ச்சியாக, கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், செயலவைத் தலைவர், பரப்புரைச் செயலாளர் உள்ளிட்டோர் வருவதும், அவர்களுடனேயே தங்குவதும், பரப்புரையில் ஈடுபடும் தோழர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் முழக்கம் 08082013 இதழ்