சுயமரியாதை – சமத்துவப் பரப்புரைப் பயணம் தலைமை : தோழர் கொளத்தூர் மணி
1932 ஆம் ஆண்டில் பெரியார் முன் வைத்தது சுயமரியாதை – சமதர்மத் திட்டம். இன்று அதே கோரிக்கைகளை திராவிடர் விடுதலைக் கழகம் சமுதாயத்தின் தேவை கருதி முன்னெடுக்கிறது. முதல் கட்டமாக 24.7.13 இல் மயிலாடுதுறையில் தொடங்கி 20 நாட்கள் 20 மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டு, 12.8.13இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க நாளில் புதுச்சேரியில் நிறைவடைகிறது.
சுயமரியாதை நோக்கில்…
- மக்களின் சுயமரியாதையை அவமதித்து அவர்களை பார்ப்பனியத்துக்கு அடிமைப்படுத்தும் பார்ப்பனிய திருமணம், பார்ப்பனர்கள் திணித்த சடங்குகள், பார்ப்பன வழிபாட்டு முறைகள் முதலியவற்றை சுயமரியாதை உணர்வோடு புறந்தள்ள வேண்டும்!
- கோவில் கருவறையில் பார்ப்பனரல்லாதோர் பூஜை செய்தால்
சாமி தீட்டாகிவிடும் என்ற கருவறைத் தீண்டாமை ஒழிக்கப்பட
வேண்டும்!
- ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும்!
- ஜாதி மறுப்பு இணையரின் குழந்iதைகளுக்கு ‘ஜாதியற்றோர்’ (சூடி ஊயளவந ணுரடிவய) ஒதுக்கீடு வழங்க வேண்டும்!
- ஜாதி – தீண்டாமைக் கொடுமைகள் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்த்து அகற்றப்பட வேண்டும்!
- ஜாதி மறுப்புக் காதலர்களைக் கொலை செய்யும் ஜாதி வெறியர்களைத் தண்டிக்க தமிழக அரசு தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும்!
- ஜாதி, மதம் கடந்த காதலர்களுக்குப் பாதுகாப்பு வழங்க காவல்துறையில் தனிப் பிரிவைத் தொடங்க வேண்டும்!
- அரசுத் திட்டங்களில், தலித்துகளுக்குரிய வீடுகளை ‘காலனி’, ‘சேரி’ என தனியாக ஒதுக்காமல், ஊருக்கு உள்ளேயே உள்ள காலி இடங்களில் – கட்டிக் கொடுக்க வேண்டும்!
- ஜாதிகளை வலுப்படுத்தும் கிராமத் திருவிழாக்கள் – குலதெய்வ வழி பாடுகளைப் புறக்கணிக்க வேண்டும்!
- ஜாதியை அடையாளப்படுத்தும் குலத் தொழில்களைவிட்டு வெளியேற வேண்டும்!
சமதர்மம் என்ற சமத்துவ நோக்கில்…
- நீதித் துறையிலும், மத்திய, மாநில அரசுத் துறைகள் அனைத்திலும், கல்வி, வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
- அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் மயமாகி வரும் சூழலில், தனியார் துறை வேலை வாய்ப்புகளிலும் தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப் பட்டோர் – சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- இடஒதுக்கீட்டு உரிமையை ஜாதியத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் சுயநல சக்திகளை வீழ்த்தி, ஜாதி ஒழிப்பை நோக்கி முன்னெடுக்க
வேண்டும்.
- கல்வி, வணிகம், சிறு வணிகம், விவசாயம், மருத்துவம், செலவு என அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட – சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவரும் உலகமயம் – தாராளமயம் – தனியார் மயங்களை எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டும்.
- தமிழர்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் வளங்களையும் அழித்து தமிழ்நாட்டை பன்னாட்டுச் சுரண்டல் காடாக மாற்றி வரும், பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டுக் கூட்டுக் கொள்கையை முறியடிக்க
வேண்டும்.
மத்திய – மாநில அரசுகளே! தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து!
ஜாதி மறுப்புத் திருமண இணையரின் குழந்தைகளுக்கு ஜாதியற்றோர்
(சூடி ஊயளவந ணுரடிவய) ஒதுக்கீடு வழங்கு!
திராவிடர் விடுதலைக் கழகம்,
95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம்,
மயிலாப்பூர், சென்னை-4. தொலைபேசி: 044-24980745
பெரியார் முழக்கம் 18072013 இதழ்