வினாக்கள்… விடைகள்…
வினா: ஹன்சிகாவை காதலிக்கிறேன், எங்கள் திருமணம் நிச்சயம். – நடிகர் சிம்பு அறிவிப்பு
விடை : ஒன்றும் பிரச்சினை இல்லை. இது சினிமா திருமணம்தான் – நாடகத் திருமணம் என்றால் தான் எதிர்ப்பு வரும்!
வினா : சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் கொத்தடிமைகள் ஒழிப்புக்கு சட்டம் வந்து, 30 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கொத் தடிமை ஒழியவில்லையே. – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் வேதனை
விடை : கொத்தடிமைகள், கொத்தடிமை களாகவே வாழ்வதற்கு சுதந்திரம் வழங்கி யிருக்கிறோமே! இது சாதனையல்லவா!
வினா : கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு27 ரூபாயும், நகரங்களில் 33 ரூபாயும், சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வரமாட்டார்கள் என்று திட்டக்குழு கூறியுள்ளது. இவர்கள் என்ன அளவு கோலைப் பயன்படுத்துகிறார்கள் என்பது எனக்கு எப்போதுமே விளங்கு தில்லை. – காங்கிரஸ் செயலாளர் திக் விஜய்சிங்
விடை : உங்களுக்கு மட்டுமா? வறுமைக் கோட் டுக்கே விளங்கவில்லை, சார்!
வினா : ஆர்.எஸ்.எஸ். ஜாதி பாகுபாடு பார்ப்பது இல்லை. – பா.ஜ.க. தாழ்த்தப்பட்டோர் முன்னணி கூட்டத்தில் அத்வானி
விடை : அத்வானி ஜி, நீங்கள் இப்படிப் பேசியதே பா.ஜ.க.வின் ஜாதிப் பிரிவான தாழ்த்தப்பட்டோர் முன்னணிக் கூட்டத்தில் தான்; மறந்து விட்டீர்களா?
வினா : ஜூலை 27ஆம் தேதி அதிகாலை 3 மணி யிலிருந்து 6 மணி வரை 180 நிமிடங்களில் 46,120 பக்தர்கள் ஏழுமலையானை வழி பட்டார்கள். – தினமணி செய்தி
விடை : தரிசனம் எப்படி நடந்திருக்கும்? மாமா வந்திருக்காக… மச்சான் வந்திருக்காக… சித்தப்பா வந்திருக்காக… மின்னலு… வாம்மா… என்ற வடிவேலு காமெடி பாணியில்தான்!
வினா : பாலவாக்கத்தில் செல்வ வினாயகன் கோயிலில் வினாயகன் முன் இருந்த உண்டியலை பட்டப் பகலில் திருடிச் சென்றுவிட்டனர். நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். – செய்தி
விடை : மறக்காமல் திருட்டைப் பார்த்துக் கொண் டிருந்த விநாயகனை சாட்சியாகப் போடுங்கள்! திருடனைப் பிடித்து விடலாம்.
வினா : இந்து கோயில்களுக்கும் இந்து தலைவர் களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. – செய்தி
விடை : ஓ… ‘இந்து பாதுகாப்பு இயக்கம்’ என்பதற்கான அர்த்தமே இப்போதுதான் புரியுது!
வினா : மோடி பிரதமராவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னின் ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப் பெறவேண்டும். – பா.ஜ.க. எம்.பி. சந்தன் மித்ரா
விடை : திருப்பித் தரலாம். அதேபோல் மோடி ஆட்சி யில் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் உயிர்களை மோடி திருப்பித் தருவாரா?
வினா : கச்சா எண்ணெய் 108 அமெரிக்க டாலராக இருப்பதால்தான், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது 100 டாலராக குறையும் போது, உள்நாட்டில் எரிபொருள் விலை குறைந்து விடும். – மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்
விடை : இப்படித் தெளிவாகக் கூறினால்தானே புரியும். கச்சா எண்ணெய் 90 டாலரானால், நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும். அதுவே 80 டாலரானால், மேலும் குறையும். 70 டாலரானால் இன்னும் அதிகமாகக் குறையும். சரிதான், பொருளா தாரம் இப்பத்தான் நல்லாவே புரியுது!
பெரியார் முழக்கம் 01082013 இதழ்