வினாக்கள்… விடைகள்…
ட 14 வயது சிறுமியை சீரழித்த போலி சித்தர் கைது. – செய்தி
குற்றச் செயல் புரிந்த சித்தர் – சாமியார்களை போலி என்று செய்தி போடும் பத்திரிகைகள் – குற்றச் செயல் புரிந்த காஞ்சி ஜெயேந்திரனை மட்டும் போலி சங்கராச்சாரி என்று செய்தி போடாதது ஏன்?
ட ‘தலைவா’ திரைப்படம் வெளியிட முடிவு; தலைப் புக்கு கீழே இடம் பெற் றுள்ள ‘தலைமை தாங்கும் நேரம் வந்துவிட்டது’ என்ற பொருள் கொண்ட ஆங்கில சொற்றொடர் நீக்கப்படு கிறது! – செய்தி
மகிழ்ச்சி! “தலைமையை பறி கொடுத்த தலைவா! வருக! வருக!” என்று ரசிகர்கள் சுவரொட்டி போட்டுக் கொண்டாடலாம்!
ட எனது மகள் காதலிக்கும் காதலன் நம்பத் தகுந்தவன் அல்ல. – இயக்குநர் சேரன்!
நீங்கள் இப்படிக் கூறு கிறீர்கள்; 20 ஆண்டுகள் நீங்கள் வளர்த்த மகளே எனது அப்பா நம்பத் தகுந்தவர் அல்ல என் கிறாரே!
ட மன்மோகன் சிங் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று மோடி – சுதந்திர நாள் கொடியேற்று விழாவில் சவால் விட்டார். – செய்தி
சரி; மேடையை எங்கே போடலாம்? பாகிஸ்தான் எல்லையிலா? சீனாவின் எல்லையிலா?
ட பகத்சிங் – ஒரு ‘தியாகி’ என்பதற்கு மத்திய அரசிடம் எந்த ஆவணமும் இல்லை. – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் தகவல்
இந்தத் தேசம் வழங்கும் தியாகிப் பட்டம்கூட அம் மாவீரனுக்கு, ஒரு அவ மானம் தான்!
ட நிலக்கரி தோண்டுவதற்கு அனுமதி வழங்கிய கோப்பு களை பிரதமர் அலுவல கத்தில் கண்டுபிடிக்க முடிய வில்லை. – செய்தி
சுரங்கம் தோண்டிய இடங்களிலேயே இன்னும் ஆழமாகத் தோண்டிப் பாருங்கள்!
ட ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை ஏன் வேறுபடுத்து கிறீர்கள்? – காஷ்மீர் முதல்வர் அப்துல்லா வேதனை!
என்ன செய்வது? வேறு படுத்திப் பார்க்காவிட்டால், நாங்கள் ‘தேசத் துரோகி’ யாகி விடுவோமே!
பெரியார் முழக்கம் 22082013 இதழ்