Category: கன்னியாகுமரி

குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

குமரி மாவட்டக் கழகம் நடத்திய அம்பேத்கர் கருத்தரங்கு

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம் நடத்திய புரட்சியாளர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் 14.04.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00மணிக்கு அமைப்பாளர் தமிழ் அரசன் தலைமையுரையுடன் துவங்கியது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஸ்ணு ‘சாதியால் அம்பேத்கர் சந்தித்த பாதிப்புகள்’ என்ற தலைப்பிலும், முனைவர் டி.மத்தியாஸ், ‘அம்பேத்கரின் இன்றையத் தேவை’ என்ற தலைப்பிலும், தமிழ்மதி ‘அம்பேத்கரை விழுங்கும் இந்துத்துவா’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பின்பு கேள்வி பதில் நிகழ்வுகள் நடைப்பெற்றது. மஞ்சுகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் தோழர்கள் ரமேஸ்பாபு, இராஜேஸ்குமார், சஜிகுமார், முத்து, இரவி, சங்கர், இராஜேந்திரபிரசாத் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் 25042019 இதழ்

நாகர் கோயிலில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகர் கோயிலில் ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

சாலை மற்றும் வீதிகளிலும் அரசுஅலுவலகங்களிலும் சாதிப் பெயர்களை அகற்றக் கோரி தெற்கு எழுத்தாளர் இயக்கம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 28.01.2019 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தியது. திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மேற்கு மாவட்டம். சார்பாக தோழர்கள் தமிழ்மதி, நீதிஅரசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரியாரியல் கருத்துகளை எடுத்துரைத்தனர். பெரியார் முழக்கம் 07022019 இதழ்

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழாக்கள்

சென்னை : திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டாக தமிழர் திருநாள்…பொங்கல் விழா 13.01.2019 இராயப்பேட்டை வி.எம்.தெருவில் (பெரியார் சிலை அருகே) மாலை 6 மணிக்கு புதுவை அதிர்வு கலைக்குழுவினரின் பறை யிசை முழக்கத்தோடு தொடங்கியது. கிராமிய கலை பண்பாட்டு பாடல்களோடு பகுதி பொதுமக்களின் ஆரவாரத் தோடும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி, பேராசிரியர் சரசுவதி, மக்கள் நீதி மய்யம் சௌரிராஜன், மணிமேகலை மற்றும் திருநங்கைக்காண உரிமை மீட்பு இயக்கத்தைச் சார்ந்த அனுஸ்ரீ, ஆர்.என்.துரை (திமுக, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்), வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்வினை இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஒருங்கிணைத்தார். தொடர்ச்சியாக சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறுவர், சிறுமியர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியாக அருண் ரிதம்ஸின் சென்னை கானா, திரைப்படப் பாடல்களோடு மகிழ்ச்சியோடு விழா நிறைவுற்றது. திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்...

கருத்தரங்கம் – கேள்வி பதில்  “மதவெறியும் மனிதநேயமும்” மார்த்தாண்டம் 16122018

கருத்தரங்கம் – கேள்வி பதில் “மதவெறியும் மனிதநேயமும்” மார்த்தாண்டம் 16122018

அறிவுக்களஞ்சியம் நூலகம் 322வது நிகழ்வு கருத்தரங்கம் – கேள்வி பதில்  “மதவெறியும் மனிதநேயமும்” தோழர் கொளத்தூர் மணி உரை     இடம் : அறிவுக் களஞ்சியம் நூலகம் மார்கெட் ரோடு, மார்த்தாண்டம் தொடர்புக்கு 9487275631   நேரம் 16.12.2018 மாலை 6 மணி அனைவரும் வருக, அனுமதி இலவசம்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

குமரி மாவட்டம் : திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் நடத்திய பெரியார்140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு, விண்ணரசு வித்யா கேந்திரா, அழகிய மண்டபத்தில் தக்கலை எஸ்.கே.அகமது (பெரியாரியலாளர்) தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஷ்ணு “பெரியார் பார்வையில் கடவுள் மறுப்பு” என்னும் தலைப்பிலும், நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழகம், மாவட்டத் தலைவர்) “பெரியார் பார்வையில் இடஒதுக்கீடு” என்னும் தலைப்பிலும், தமிழ் மதி (மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) “பெரியார் பார்வையில் நீட்” என்னும் தலைப்பிலும், போஸ் (மார்க்சியலாளர்) “பெரியார் பார்வையில் பொதுவுடைமை” என்னும் தலைப்பி லும், மகிழ்ச்சி (ஒருங்கிணைப்பாளர், பொது வுடைமை தொழிலாளர் கட்சி) “இளைஞர்கள் எதை நோக்கி பயணிப்பது” என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். பின்பு கலந்துக்கொண்ட அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சூசையப்பா (முன்னாள்மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) நன்றி கூறமுடிவுற்றது. கூட்டத்தில் மஞ்சு குமார் (மாவட்டப்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 22.05.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது. பேராவூரணி : 23.05.2018 அன்று மாலை அண்ணா சாலை பேராவூரணி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வில்லை? போராடும் மக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது ஆட்சியர் எங்கு போனார்? ஏன் அமைதியாகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? காவலர்களால் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது ஏன்? இராணுவ உதவி வேண்டுமானால் தருவதாக...

நாகர்கோயிலில் அம்பேத்கர்  நினைவு நாள் கூட்டம்

நாகர்கோயிலில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம்

அம்பேத்கர் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 14.4.2018 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நாகர்கோவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் வழக்குரைஞர் வே. சதா (மாவட்ட தலைவர்) தலைமையில் நடைபெற்றது. விஷ்ணு வரவேற்புரை யாற்றினார். தோழர்கள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சவகர், தமிழ் மதி, நீதி அரசர், ஜெயன், சூசையப்பா ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் மஞ்சுகுமார், சந்தோஸ், இராம சுப்ரமணியன், சுசீலா, சாந்தா உள்ளிட்ட தோழர்கள் கலந்துக்கொண்டனர். அனீஸ் நன்றிகூற கூட்டம் முடிவுற்றது. பெரியார் முழக்கம் 03052018 இதழ்

குமரியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பரப்புரைக்கூட்டம் !

குமரியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பரப்புரைக்கூட்டம் !

குமரியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பரப்புரைக்கூட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் சார்பில்புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்-127-வது பிறந்தநாளை முன்னிட்டு 14-04-2018,சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு,நாகர்கோவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் தோழர்.வழக்குரைஞர் வே.சதா (மாவ.தலைவர் தி.வி.க)தலைமையில் நடைப்பெற்றது. தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார். தோழர்கள் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்.சவகர், தமிழ் மதி,நீதி அரசர்,ஜெயன்,சூசையப்பாஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் மஞ்சுகுமார்,சந்தோஸ்,இராமசுப்ர மணியன்,சுசீலா,சாந்தா,ஆகியோர் கலந்துக்கொண்டனர். தோழர்.அனீஸ் நன்றிகூற கூட்டம் முடிவுற்றது.

குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

குமரி மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு ! பார்ப்பன வெறிப்பிடித்த பாரதீய சனதா கும்பல் திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலையை உடைத்ததுபோல் தமிழ் நாட்டில் பெரியார் சிலையை உடைப்போமென்றும், சாதியை ஒழித்து சமத்துவம் ஏற்படுத்தத் துடித்த பெரியாரை சாதி வெறியனென்றும் கூறிக் கொண்டு உடம்பு முழுவதும் சாதி,மத வெறிப்பிடித்துத் திரியும் ஆரிய வந்தேரி பார்ப்பான் எச்ச.ராஜாவை பிடித்து சிறையில் தள்ளி தமிழகத்தை மதவெறிக் கும்பல்களிடமிருந்து காப்பாற்ற வேண்டி; திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் சார்பாக இன்று 07-03-2017, புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீ நாத் அவர்களிடம் புகார் மனு தோழர்.வழக்குரைஞர்.வே.சதா(மாவட்டத் தலைவர்,)தலைமையில் தோழர்கள் தமிழ் மதி(மாவட்டச் செயலாளர்),நீதி அரசர்(தலைவர்,பெரியார் தொழிலாளர் கழகம்),சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி(வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர்,தி.மு.க),வைகுண்ட ராமன்,வின்சென்ட் ஆகியோரால் வழங்கப்பட்டது.

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர். சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப்...

பெரியார் நினைவு நாள் குமரி 24122017

தந்தை பெரியார்-ன் 44-வது,நினைவு நாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.தோழர்.நீதிஅரசர்(பெ.தொ.க தலைவர்)  தலைமைதாங்கினார். தோழர்.கேரளாபுரம் முருகன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி,நில மீட்பு இயக்கம்.மாநில துணைச் செயலாளர்)சத்தியதாஸ் (வி.சி.க,நி.மீ.இ,குமரி மே.மா.செயலாளர்)ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தோழர்.போஸ்(மார்க்சிய சிந்தனைமய்யம்,குமரி மாவட்டம்)பிரசாத்(தீண்டாமை ஒழிப்பு முன்னனி)செல்வி மேரி(பெ.தொ.க.)மற்றும் கழகத் தோழர்கள் அனீஸ்,விஸ்ணு,மஞ்சு குமார் ,இராஜேஸ் குமார்.ஆகியோர் கலந்துக்கொண்டு வீரவணக்க முழக்கங்கள் முழங்கினர்.

தமிழ் மதி இல்லவிழா குமரி மாவட்டம் பள்ளியாடி 10122017

குமரி மாவட்ட கழகச் செயலாளர் தோழர்.தமிழ் மதி-பிறேம லதா இணையர் மகன் தமிழ் நவிலன் முதல் பிறந்த நாள் விழா 10-12-2017,ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00மணிக்கு பள்ளியாடி திரு இருதய அரங்கில் வைத்து கொண்டாடப்பட்டது. விழாவில் தோழர் தமிழ் மதி-யின் உறவினர்கள்,கழகத் தோழர்கள்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள்,சமூக ஆர்வலர்கள் பெருவாரியாகக் கலந்துக் கொண்டனர். தோழர்.தமிழ் மதி அவர்கள் பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்றும், தமிழ் பெயர் ஏன்சூட்டினோம் என்றும் கூறி வரவேற்புரையாற்றினார். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் தோழர்.பேபி செபக்குமார் மந்திரமல்ல!தந்திரமே!எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பின்பு கழகத் தலைவர் தோழர்.கொளத்தூர் மணி தமிழ் நவிலன் பிறந்த நாளில் பெற்றோருக்குச் அறிவுரையாக சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், போன்ற மூடநம்பிக்கைகள் குறித்தும்,பிள்ளைகளை சமூகத்துடன் இணைந்து வாழக்கற்றுக்கொடுக்க வேண்டுமென்றும்,கூறி தமிழ் நவிலன் சமூகச் சிந்தனையுடன் வாழ, வளர, வெல்ல வேண்டுமென வாழ்த்துரையாற்றினார். நிகழ்வில் தமிழ் நவிலன் கேக் வெட்டி உறவுகளுக்கு ஊட்ட விழா...

திராவிடத்தால் எழுந்தோம் விளக்கப் பொதுக்கூட்டம் குமரி குலசேகரம் அரசமூடு 09122017

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம். நடத்திய “திராவிடத்தால் எழுந்தோம்”விளக்கப் பொதுக்கூட்டம். குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 09-12-2017,சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைப் பெற்ற”திராவிடத்தால் எழுந்தோம்” விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர். வழக்குரைஞர்.வே.சதா, குமரி மாவட்ட பெரியார் தொழிலாளர் கழக தலைவர் தோழர்.நீதி அரசர் ஆகியோர் தலைமைத் தாங்கினர். கழகத் தோழர்கள்,தமிழ் அரசன்,தமிழ் மதி,மஞ்சு குமார்,ஜாண் மதி,சூசையப்பா,இரமேஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்;கேரளாபுரம் முருகன்,மேசியா,சத்தியதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் தோழர்.பேபி செபக்குமார் மந்திரமல்ல! தந்திரமே! எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக்காட்டினார். கழகப் பரப்புரைச்செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்; அவர்தனது உரையில் திராவிடர் இயக்கத்தினால் உழைக்கும் மக்களான பிற்படுத்தப் பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்திருக்கும் நன்மைகள் மற்றும் வாழ்க்கைத் தர உயர்வையும், தமிழ்நாட்டிற்கு திராவிடர் இயக்கம் ஆற்றியப்...

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களில் கழகம் களமிறங்கியது

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி,  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களிம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படுகிறது கோவை 26092017 காலை மாவட்ட ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் வைக்க கூடாது.சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை போன்ற மதப்பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்ற அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தகோரி மனு வழங்கப்பட்டது.. குறிப்பு: அரசு ஆணையை மீறும் காவல் நிலையங்கள் மீது வழக்கு போடப்படும் என்ற எச்சரிக்கையோடு...

பெரியார் பிறந்தநாள் பரப்புரைக் கூட்டம் குமரி 17092017

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் தந்தை பெரியார்-ன் 139-வது பிறந்த நாளை முன்னிட்டு மூவோட்டுக் கோணம் சந்திப்பில் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைப் பெற்றது. மாவட்டப் பொருளாளர், தோழர்.மஞ்சுகுமார் தலைமைத் தாங்கினார். தோழர்கள்.நீதி அரசர்,தமிழ் மதி ஆகியோர் பெரியார் பற்றிய கருத்துரையாற்றினர். தோழர்கள்.இராஜேஸ் குமார்,அணில் குமார்,ஜெயன்,பெரியார் பிஞ்சு.ஆர்மல்,சஜிக்குமார்,றசல் ராஜ்,சிக்கு,சரத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குமரி

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் நடத்திய தந்தை பெரியார்-ன் 139-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 16-09-2017 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு  நாகர்கோவில் அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர்.தோழர்.வழக்கறிஞர்.வே.சதா தலைமைத்தாங்கினார்.கழகத் தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார்.தோழர்கள் நீதி அரசர்,தமிழ் மதி,சூசையப்பா சிறப்புரையாற்றினர். கழகப் பரப்புரைச் செயலாளர் தோழர்.பால் பிரபாகரன் “வஞ்சிக்கப்பட்டத் தமிழர்கள்” என்றத் தலைப்பில் பார்ப்பனீய பாரதீய சனதா அரசின் துரோகங்களைப் பட்டியலிட்டு பொதுமக்களுக்குப் புரியும் வகையில் நீண்டதொரு உரையாற்றினார்.முடிவில் கழகத்தோழர் அனீஸ் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர். தோழர்.ச.ச.மணிமேகலை தொகுத்து வழங்கினார். கழகத் தோழர்கள்.மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,தமிழ் அரசன்,றசல் ராஜ்ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் 16092017

நாகர் கோவிலில், தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் சார்பில். நாள் : 16.09.2017 சனிக்கிழமை  நேரம் : மாலை 5 மணி. இடம் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம்,நாகர் கோவில். வஞ்சிக்கப்பட்ட தமிழர்கள் எனும் தலைப்பில் உரை முழக்கம் கழக பரப்புரைச்செயலாளர் ”தோழர் பால்.பிரபாகரன்” அவர்கள்.

அனிதா நினைவேந்தல் மற்றும் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் 05092017

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்கை அனிதா நினைவேந்தல், நீட் தேர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில், வடசேரி, அண்ணாச் சிலை அருகில் 05092017, செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு கொட்டும் மழையில் மாவட்டத் தலைவர் தோழர். வழக்குரைஞர்.சதா தலைமையில் நடைப் பெற்றது. தோழர் நீதி அரசர் மா தலைவர், (பெ.தொ.க)முன்னிலை வகித்தார், மாவட்டச் செயலாளர் தோழர்தமிழ் மதி கண்டன முழக்கங்கள் எழுப்பினார்.தோழர்கள் விஸ்ணு, சூசையப்பா ,மஞ்சுகுமார் ,சஜீவ், போஸ், றசல் இராஜ் ,சுகுமார்,குமரேசன்,மணிகண்டன்ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தொட்டிப் பாலத்துக்கு காமராசர் பெயர் சூட்ட கழகம் கோரிக்கை

தொட்டிப் பாலத்துக்கு காமராசர் பெயர் சூட்ட கழகம் கோரிக்கை

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக கல்வி வள்ளல் காமராசர், சாதி ஒழிப்பு போராளி இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் பள்ளியாடி சந்திப்பில் 15-07-2017 சனிக்கிழமை மாலை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா தலைமையில், பள்ளியாடி சி.இளங்கோ முன்னிலையில் கழகப் பெரியார் பிஞ்சு ஆர்மலின் கடவுள் மறுப்பு வாசகத்துடன் துவங்கியது. கழகத் தோழர் தக்கலை விஸ்ணு வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தமிழ் மதி, பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர் நீதி அரசர், தமிழ் நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர் மணிமேகலை,இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர், ஜெயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்புப் பேச்சாளராக மதிமுக மாநிலப் பேச்சாளர் அனல் கண்ணன் “காமராசரும் பெரியாரும்” என்றத் தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மஞ்சுகுமார், பெரியார் தொழிலாளர் கழக மாவட்டச் செயலாளார் ஜாண் மதி, முன்னாள் மாவட்டத் தலைவர் சூசையப்பா,...

தோழர் நீதி அரேசர் கைது குமரி 08072017

மக்களைச் சமதர்மம் அடையச் செய்யும் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்கத்துடிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத்தின் குமரி மாவட்ட வருகையைக்  கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி (08-07-2017.சனிக்கிழமை)காட்டச்சென்ற கழகத் தோழர் நீதி அரசர் அவர்களை காவல் துறை கைதுச்செய்து பிணை வழங்காமல் 15 நாள் காவலில் வைத்தது. தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களை மதத்தால் உசுப்பி சண்டைப் போடவைத்துவிட்டு அதில் குளிர் காயும் பார்ப்பன மத வெறியருக்கு பாதுகாப்பும்,மக்களுக்காக போராடும் போராளிகளுக்குச் சிறையும் வழங்கும் காவல் துறைக்கு குமரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இடஒதுக்கீட்டு முறையால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இடஒதுக்கீடை ஒழிக்கும் பார்ப்பனனுக்கு ஆதரவாக செயல்படுவது வருந்தத்தக்கது.  

குமரி மாவட்ட திவிக தோழர் செல்லம் மறைவு, உடல்தானம் 16062017

குமரி மாவட்ட விடுதலைக்காக மார்சல் நேசமணி தலைமையில்  போராடிய மொழிப்போர் போராளியும் தற்போதைய திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளருமான தோழர்.செல்லம், அகவை:80, தொடுகுளம், காஞ்சிரகோடு அவர்கள் 16062017 அன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் வீரவணக்க நிகழ்வு கழகத் தோழர் அனீஸ் தலைமையில்  நடைப்பெற்றது. தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, மணிமேகலை, மார்த்தாண்டம் மாலை பத்திரிகை ஆசிரியர் தோழர் செபக்குமார், கிறித்துதாஸ் ஆகியோர் உடல் தானம் பற்றிய அறிவியல் செய்திகளை இரங்கல் செய்தியாக பேசினர். தோழர்கள் இளங்கோ, விஸ்ணு, சூசையப்பா, கருணாநிதி, ஜான் மதி, அருள் ராஜ், பிரேமலதா, இராசேந்திரன், கம்யூனிஸ்ட் தோழர் ஜெயன் ஆகியோரின் வீரவணக்க முழக்கங்களுடன், அவரின் இறுதி விருப்பப்படி  ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ உடற் கூறியல்த் துறைக்கு வழங்கப்பட்டது. அவருக்கு எங்களின் வீரவணக்கங்கள்

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா குமரி மந்தாரம் புதூர் 23042017

திராவிடர் விடுதலைக்கழகம், பெரியார் தொழிலாளர் கழகம், குமரி மாவட்டம் சார்பாக அம்பேத்கர், காரல் மார்க்சு பிறந்த நாள் விழா மற்றும் தொழிலாளர் தினவிழா மந்தாரம் புதூரில் நடைப்பெற்றது. தோழர் பாரூக் வீரவணக்க கொடிக்கம்பம் நடப்பட்டு தோழர் பால்பிரபாகரன் கழகக்கொடியேற்றி வீரவணக்க முழக்கங்கள் எழுப்பினார். பொதுக்கூட்டத்தில் தோழர் நீதி அரசர், தலைமையுரையாற்றினார். தோழர் ஜாண் மதி வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தமிழ் மதி, ஜாண் முறே ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் பால் பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்) சாதி ஒழிப்பில் பெரியாரும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பால் பிரபாகன் பேசிய உரையிலிருந்து வினா விடைப் போட்டி நடைப்பெற்றது. அதில் முதல் பரிசு ரூ.1000-ம், பெரியார் கோப்பையும் ஆதிராவும், இரண்டாவது பரிசு ரூ.500-ம், பெரியார் கோப்பையும் அனுசிகாவும் பெற்றனர். கைப்பந்து போட்டிகளில் கலந்துக்கொண்டு திறமைகளை வெளிக்கொணரும் தோழர் சிவசங்கரி அவர்களைப் பாராட்டி பெரியார் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் புத்தகங்களும் பரிசாக வழங்ப்பட்டது. பள்ளிப்பிள்ளைகள் 10...

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை 04032017

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். தோழர் நீதி அரசர் (தலைவர் பெ.தொ.க) முன்னிலை வகித்தார். தோழர் விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் பால் பிரபாகரன்,கழக பரப்புரைச் செயலாளர் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,) போஸ் (சமூக ஆர்வலர்)  முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்) தோழர்கள்  இரமேஸ், இராஜேஸ் குமார், இராதா கிருஸ்ணன் MCUP(I), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆவேசத்துடன் முழங்கினர். தோழர் மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. ட

மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் ! குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்.. மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து. நாள் : 04.03.2017 சனிக்கிழமை,காலை 9 மணி. இடம் : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,அண்ணா சிலை அருகில்,தக்கலை,குமரி மாவட்டம். கண்டன உரை : தோழர் பால்.பிரபாகரன், பரப்புரைச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்

குமரி மாவட்ட தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

குமரி மாவட்டத்தில் அறிவுலகத் தலைவர் தந்தை பெரியாரின் 138 வது பிறந்த நாள் விழா குமரி மாவட்ட கழகம் சார்பாக மார்த்தாண்டம் ம.தி.மு.க அலுவலகத்தில் வைத்து கழகத் தோழர். சூசையப்பா தலைமையில் நடைப்பெற்றது. பொருளாளர் தோழர். மஞ்சுகுமார் வரவேற்புரையாற்றினார்.செயலாளர்.தோழர்.தமிழ் மதி ’பெரியாரியல் பற்றி கருத்துரையாற்றினார். கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெ.தொ.க தலைவர்.நீதி அரசர் நன்றி கூறி முடித்தார்.  

குமரி மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பு அருகிலுள்ள நகராட்சி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர்  வே.சதா தலைமை தாங்கினார். தோழர்கள் தமிழ் மதி, சூசையப்பா, நீதி அரசர், தமிழ் அரசன், மஞ்சுகுமார், ஸ்டெல்லா, விஸ்ணு, ஜாண்மதி, மற்றும்கழக தோழர்கள், ஆதரவாளர்கள், மக்கள்அதிகாரம் அமைப்பினர், சமூகநீதிக்கான சனநாயக பேரவை அமைப்பினர், மதிமுகவினர் கலந்துக்கொண்டு மத்திய அரசைக் கண்டித்து எதிர்ப்பு முழக்கம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

திவிகழக கூட்டங்கள்

திவிகழக கூட்டங்கள்

‘சித்தோடு’ கிளைக் கழகம் நடத்திய ஜாதி எதிர்ப்பு கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு (தெற்கு) மாவட்டம் சித்தோடு கிளைக் கழக சார்பில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்ற முழக்கத்துடன் மற்றும் “கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்” சித்தோடு அருகில் உள்ள ஜே.ஜே நகரில் 21.02.2016 மாலை 6.30 மணி யளவில் சங்கர் தலைமையில், எழிலன் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் முருகேசன் பெரியாரியல் பாடல்கள் பாடினார். காவலாண்டியூர் சித்துசாமி மற்றும் ஈசுவரன் ஆகியோர் கொள்கை விளக்க உரையாற்றினர். தொடர்ந்து காவை இளவரசன், “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதைத் தொடர்ந்து வீரன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார். நிறைவாக கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கூட்ட துவக்க முதல் இறுதி வரை மக்கள் திரளாக இருந்து நிகழ்ச்சியை கேட்டனர். கமலக்கண்ணன் நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது. ஈரோடு...

காதலர் தின விழா குமரி மாவட்டத்தில் சாதி ஒழிப்பு நாளாக கொண்டாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம்.சார்பாக மாவட்டத் தலைவர் வே.சதா தலைமையில் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை காலை10.00 மணிக்கு அவருடைய இல்லத்தில் காதலர் தின விழா சாதி ஒழிப்பு நாளாக கொண்டாடப்பட்டது. கழகத் தோழர்.தமிழ்மதி மற்றும் அவரின் வாழ்விணையர் தமிழ்ச் செல்வி ஆகியோர் கலந்துக் கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.தோழர்.தமிழ் மதி அவர்கள் ”சாதியை ஒழிக்கவே சாதி ஒழிப்பு நாள் என திராவிடர் விடுதலைக் கழகத்தால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது” என்று விளக்கி பேசினார். நிகழ்வில்; தோழர்கள் மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,சகிலா பொன் மலர்,அ.மணி கண்டன்,இராசேந்திரன்,சூசையப்பா ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா குமரியில்

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் குடும்ப விழாவாக கழக தோழர்  தமிழ் மதி,இல்லம் குன்னம்பாறையில் 15-01-2016.வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைப்பெற்றது. கழக தோழர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பொங்கல்  வைத்து சாப்பிட்டனர். பின்பு நடைப்பெற்ற கலந்துரையாடல் தோழர் சஜீவ் தலைமையுரையுடன் துவங்கியது.கழக தோழர் தமிழ் மதி வரவேற்று பொங்கல் தமிழ்புத்தாண்டு பற்றி விளக்கி பேசினார். தோழர்.சூசையப்பா வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் பரிணாம வளர்ச்சி, நாத்திகம், மூடநம்பிக்கைகள், பற்றி கருத்துரையாற்றினார்கள். பின்பு சிற்றுண்டியுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் பிரிந்து சென்றனர்.    

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போடாதே குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

13.9.2015 அன்று நடைபெற்ற கன்னியாகுமரி திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள கற்பனை கடவுளர் படங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அகற்றவும், ஆயுத பூஜைப் போன்ற மதப் பண்டிகைகளை கொண்டாடவும், தடைவிதித்த அரசாணையையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அமுல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 25.9.15 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் தமிழ் மதி, நீதி அரசர், சூசையப்பா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இராம. இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். ‘அரசு அலுவலகங்களை பூஜை மடங்களாக்காதே’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை மாவட்ட கழகம் சார்பாக மதியழகன், சாந்தா கலந்து கொண்டனர். குமரேசன் தலைமையில் ஆதித் தமிழர் பேரவையினரும், ஜான் விக்டர்தா° தலைமையில் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்....

0

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2015 அன்று காலை 09.30 மணிக்கு தக்கலை,ஜோஸ் அரங்கில் நடைபெற்றது. தோழர் நீதிஅரசர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தலைவர் தோழர் ஜா.சூசையப்பா தலைமை உரை நிகழ்த்த,மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா வாழ்த்திப் பேசினார். மாநில அமைப்புசெயலாலர் தோழர் ரத்தினசாமி அவர்கள் பெரியாரியல் எனும் தலைப்பில் 2 மணிநேரம் உரையாற்றினார்.பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் நிகழ்வாக மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதீயம்,நாத்தீகம்’ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார். புதிய பொறுப்பாளர்களாக, மாவட்ட தலைவர் : தோழர் சதா, மாவட்ட செயலாளர் : தோழர் தமிழ்மதி, மாவட்ட பொருளாளர் : தோழர் மஞ்சு குமார், பெரியார் தொழிலாளர்கழக மாவட்ட தலைவர் தோழர் நீதிஅரசர், குழித்துறை நகர தலைவர் கே.எஸ்.தாமஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இக்கலந்துயாடல் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் பெரியார் படம் அச்சிட்ட குறிப்பேடும் வழங்கப்பட்டது.