பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 11.02.2024 அன்று நெய்காரபட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், வயலூர், மிடாப்பாடி, குமாரபாளையம், குருவன்வலசு, தாழையூத்து, சின்னக்கலையம்புத்தூர், மானூர், நரிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, வாகரை, புளியம்பட்டி, அமரபூண்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுப்பாதை, கணக்கன்பட்டி, பொருளூர், கள்ளிமந்தயம், கொ.கீரனூர், I.வாடிப்பட்டி, சக்கம்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வெரியப்பூர், கேதையறும்பு, லெக்கயன்கோட்டை, அத்திக்கோம்பை, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் இரயில் நிலையம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆத்தூர், சித்தயன்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் பத்து நாட்களாக தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

புளியம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பெரியார் தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அனைத்துக் கூட்டங்களில் பெரியார் – மாக்சிம் கார்க்கி ஆகியோர் பரப்புரையை விளக்கிப் பாடினர்.

முனைவர் உஷாராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட இணையதள பொறுப்பாளர் ராஜா, ஆயக்குடி பேரூர் அமைப்பாளர் சங்கர், மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தேனி ராயன், நத்தம் குமார், தங்கமுத்து, சூர்யா, லோகேஷ், அலெக்ஸ், இளம்பரிதி, ஆரியா, லல்லு பிரசாத், சந்தோஷ் துர்க்கைராஜ், குமார், ஆயுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 14.02.2024 அன்று  திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் – அண்ணா சிலை அருகே தொடங்கியது.

இந்நிகழ்விற்கு  கழக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முகில் இராசு முன்னிலை வகித்தார்.

சிபிஎம் மாநகரச் செயலாளர் நந்தகோபால், விசிக மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.பி ஆர் மூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் துரைவளவன், ஆதித்தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் விடுதலைச் செல்வன், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் தமிழ் அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தெற்கு பகுதி பொறுப்பாளர் ராமசாமி, 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, பல்லடம் சண்முகம், ராஜ்குமார், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அவிநாசி பேருந்து நிலையம், திருப்பூர் புதிய பேருந்து நிலையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

இதில் சங்கீதா, திருப்பூர் மகிழவன், பரிமளராசன், முத்து ஆகியோர் பரப்புரையை விளக்கி உரையாற்றினர்.

தொடர்ந்து 15.02.2024 அன்று கூலிபாளையம் நால் ரோடு,  ராக்கியாபாளையம் பிரிவு, இடுவம்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும், 16.02.2024 அன்று பொங்கலூர், பல்லடம் என்.ஜி.ஆர் சாலை, காரணம்பேட்டை, பல்லடம் லட்சுமி மில் சாலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

கூட்டங்களில் மாதவன், அய்யப்பன், இராமசாமி, சரஸ்வதி, செம்பருதி, சண்முகம், கோவிந்தராஜ், பழனிச்சாமி, அஜீத், மாரிமுத்து, சிரீஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை : சென்னை மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை இயக்கத் தெருமுனைக் கூட்டங்கள் ஜாம் பஜார் தேவராஜ் தெரு, திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெரு, மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம், கோட்டூர்புரம் மார்க்கெட், கலிக்குன்றம் அம்பேத்கர் சிலை, ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி, அண்ணா நகர் எம்ஜிஆர் காலனி, திருமங்கலம் டிவி நகர் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19 வரை நடைபெற்றது.

உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் மக்களிசை பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. ஈரோடு பேரன்பு ராப் பாடல்களை பாடினார்.

அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், ஜெயபிரகாஷ், பெரியார் நம்பி, தேன்மொழி, எட்வின் பிரபாகரன், ஊடகவியலாளர் மாதூர் சத்யா ஆகியோர் கருத்துரையாற்றினர்.

சேலம் : சேலம் மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை இயக்கத் தெருமுனைக் கூட்டம் 18.02.2024 அன்று ஏற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட ஏற்காடு டவுன், ஒண்டிக்கடை அண்ணா சிலை, முளுவி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு கழக ஏற்காடு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார், சேலம் (கி) மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் வரவேற்புரையாற்றினார், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, ஏற்காடு தமிழ்ச்செல்வி, நான்சி, சரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏற்காடு திமுக ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜா (எ) ராஜேந்திரன், NP செந்தில்குமார் மாவட்ட துணை அமைப்பாளர் (நெசவாளர் அணி) திமுக, ஏற்காடு சுதந்திரா, நித்யஸ்ரீ, ஆசிரியர் தேவதாஸ் மற்றும் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.

தமிழினி நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் வெள்ளைக்கடை முன்னாள் கவுன்சிலர் ஈசுவரன், சேலம் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் சார்லஸ், ஏற்காடு ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் செஞ்சி மாணிக்கம், தகவல் தொழில்நுட்ப ஏற்காடு சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஆதி சங்கர், இளைஞர் அணி வெங்கடேஷ், திருமூர்த்தி, நிர்வாகிகள் கோபி மற்றும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் ஏற்காடு பகுதி செல்வமூர்த்தி, உலகநாதன், ஆனந்தராசு, சேகுவேரா, எழில், ஜாஸ்மின்ஸ்ரீ, சுதாகர், சுகாசினி, ராணி சந்திரா, இளம்பிள்ளை பகுதி தங்கதுரை, கோபி, திவ்யா, நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன், சந்திரசேகர், உமா சங்கர், பேரறிவாளன், அமுதன், மேட்டூர் பகுதி கிட்டு, முத்துராஜ், குமரப்பா, காளியப்பன், ஆர்.எஸ்.பகுதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை இயக்கத் தெருமுனைக் கூட்டம் 19.02.2024 அன்று மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டர் அருகில் ரங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.

RD தாம்பூலம் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி மற்றும்  புரட்சி தமிழன் – கிருஷ்ணன் ஆகியோரின் பரப்புரைப் பாடல்கள் மற்றும் நிர்மல் குமார் – புரட்சி தமிழன் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகளுடன் கூட்டம் தொடங்கியது.

திருப்பூர் மகிழவன், குட்டையூர் கந்தசாமி, திமுக நகரச் செயலாளர் முனுசாமி, மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், திராவிடர் கழக கோவை மாவட்ட தலைவர் வேலுச்சாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நிறைவாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் மோடி ஆட்சியை விரட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

மனோரஞ்சனி நன்றி கூறினார். மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், அமுல்ராஜ், நிர்மல்குமார் கூட்டத்தை ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 22022024

You may also like...