பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்
திருப்பூர் மாவட்ட திவிக ஆலோசனைக் கூட்டம் 12.06.2023 திங்கள் மாலை 4.30 மணி அளவில் மாஸ்கோ நகர் மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டம் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் தலைமையில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏப்ரல் 29,30 நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்துகொண்டு பேரணியில் இரண்டாம் இடம் பரிசு பெற்றமைக்கு பேரணியில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக செயலவையில் அறிவிக்கப்பட்ட படி தீண்டாமை நடக்கும் இடங்கள் கணக்கெடுப்பு மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள 1000 தெருமுனை கூட்டங்களில் திருப்பூர் மாவட்டத்தில் 50 கூட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன. மேலும் தாராபுரத்தில் நகராட்சி அரசு அலுவலகத்திற்குள் நிர்வாண அகோரி சாமியார்களை அழைத்து வந்து பூஜை நடத்திய நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி...