பாஜகவும் பாலியல் குற்றச்சாட்டுகளும் ;

உத்தரகாண்ட் மாநிலத்தில்  பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் பல்காரியா கடந்த ஆண்டு அக்டோபரில் தனது அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.  இதை வெளியே சொல்ல கூடாது என தனது டிரைவரையும் கடுமையாக தாக்கினார். மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

  • கடந்த 2018ல் முன்னாள் ஒன்றிய பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது ஆறு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். கொல்கத்தாவில் பேட்டி தருகிறேன் என்று கூறி ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் மீது ஈரத் துண்டை போட்டு வெற்றிகரமாக மறைத்து விட்டது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.

 

  • அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. [இவரும் பாஜகவில் பொறுப்பில் இருந்தார்] தனது நண்பர் ஆசிஷ் குமாருடன் சேர்ந்து IAS அதிகாரியின் மகளை பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தி அடித்து உதைத்தார். இந்த சம்பவம் கடந்த 2017 ஆகஸ்ட் நடந்தது. அக்டோபரில் அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அந்த வழக்கு நீர்த்துப் போக செய்யப்பட்டது.
  • அரியானாவின் முன்னாள் பாஜக அமைச்சரும், மாநில ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனுமான சந்திப் சிங் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பரில் தடகள வீராங்கனைக்கு பயிற்சிக் கொடுத்த பெண் பயிற்சியாளரை பலாத்காரம் செய்து குற்றச்சாட்டில் சிக்கியதால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்
  • குஜராத் கலவரத்தில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்ட அனைவரையும் குஜராத் பாஜக அரசு முன் விடுதலை செய்தது.
  • உத்தர பிரதேச தில்ஹார் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த ரோஷன் லால் வர்மாவின் மகன் மனோஜ் வர்மா, தன்னை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார் கூறியிருந்தார்
  • கர்நாடகத்தில் நீர் பாசன துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி, இளம் பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்று வீடியோ வெளியானது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
  • இது போன்று பாஜகவை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது அபிமானிகள் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • பாஜகவும் பாலியல் குற்றச்சாட்டுகளும் என்ற தலைப்பில் பாகம் 1,2 என்று புத்தகமே போடலாம்.

பெரியார் முழக்கம் 08062023 இதழ்

You may also like...