மேல்பாதி – திரெளபதி கோயிலில் பட்டியல் சமூகத்தின் நுழைவு உரிமை மறுப்பைக் கண்டித்து மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மேல்பாதி திரெளபதி கோவிலில் பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும், ஜாதி வெறியர்களை கண்டித்தும், இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமைகளை நிலை நிறுத்திட கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமை தாங்கினார்.மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தார்.
தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்தேசியப் புலிப்படைத் தலைவர் ஆ.முத்துப்பாண்டி, மக்கள் தமிழகம் கட்சி பொதுச்செயலாளர் நிலவழகன், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், நிலக்கோட்டை வீர லட்சுமி, “உயர்நீதி மன்றத்தில் தமிழ் போராட்டக்குழு” ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், தமிழ்தேச குடியரசு இயக்கம் மெய்யப்பன், தபெதிக தமிழ் பித்தன், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
யோகேஸ், வேங்கைமாறன், குமார், விஜய் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். புலிப்பட்டி கருப்பையா நன்றியுரை கூறினார்.
பெரியார் முழக்கம் 08062023 இதழ்