சேலம் மாவட்டக் கலந்துரையாடல் : கழகத் தலைவர் தலைமையில் நடந்தது
சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 11.05.2023 வியாழன் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மேட்டூர் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற இரண்டு நாள் மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மாநாட்டு வரவு செலவு கணக்குகளை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் ஆகியோர் மாநாடு குறித்தும், மாநாட்டிற்காக உழைத்த தோழர்களைப் பற்றியும், தோழர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த மாநாடு சிறக்க உதவியாக இருந்தது என்று தமது உரையில் குறிப்பிட்டனர்.
அதன் பிறகு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும், மாநாடு குறித்தும் மாநாட்டிற்காக தங்கள் பகுதியில் திரட்டிய நன்கொடை மற்றும் செலவு விவரங்களை எடுத்து கூறினார்கள்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “மாநாடு மற்றும் பேரணிக் குறித்தும் மாநாட்டு அரங்க நிகழ்வில் போடப்பட்ட ஆவணப் படங்கள் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஆவணப்படத்தை தயார் செய்த பிரகாசு, இளவரசன், விஜி ஆகியோருக்கு பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்தார்.”
மேலும் “மாநாடு முடிந்தவுடன் நமது வேலை முடிந்து விடவில்லை இனி தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்” என்றும் தமது உரையில் குறிப்பிட்டார்.
மாநாடு சுவரெழுத்துப் பணிகளை சேலம் மாவட்டம் முழுவதும் செய்த குமரப்பா மற்றும் அண்ணாதுரை ஆகியோருக்கு கழகத் தலைவர் நினைவு கேடயங்களை வழங்கினார்.
நிறைவாக சூரியகுமார் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவடைந்தது. அனைவருக்கும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 18052023 இதழ்