தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மே 26, மாலை 6 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற உழைத்திட்ட அனைத்து தோழர்களுக்கும் கூட்டம் பாராட்டுதலையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.

மே 21-இல் சேலத்தில் கூடிய தலைமை செயலவை கூட்டத்தில் தலைமை அறிவித்த வைக்கம் போராட்டம் இன்னும் முடியவில்லை  . இன்றும் தொடரும் தீண்டாமையை கணக்கெடுக்கும் பணியை இரண்டு குழுவாக பிரிந்து ஜூன் 04,05 ஆகிய தேதிகளில் கிராமப்புரங்களில் நிலவும் தீண்டாமையை கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிப்பது.

“எது திராவிடம்? எது சனாதனம்?” என்ற தலைப்பில் ஈரோடு புறநகர் பகுதிகளில் 25 கூட்டங்களும், மாநகரப் பகுதிகளில் 25 கூட்டம் என 50 கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

தெருமுனைக் கூட்டங்களின் நிறைவுக் கூட்டம் ஈரோடு மாநகரில் பொதுக்கூட்டமாக கழகத் தலைவரை அழைத்து நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு வர இயலாத தோழர்களையும், நம்மோடு விலகியிருக்கும் தோழர்களையும் இணைத்துக்கொண்டு செயல்படவேண்டுமாய் இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

பெரியார் முழக்கம் 08062023 இதழ்

You may also like...