பழந்தமிழர் பெருமை தேவையில்லை

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பது அந்நியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோ தான் பயன்படக்கூடியதாக ஆகிவிட்டன. இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாகி விட்டது.

 

பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது சமூகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஒரு ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதை பயன்படுத்திவிடக் கூடாது என்பதோடு அவ்வளவு மடையர்களாகவும் நாம் இல்லை. இன்று நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்கு காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை  பேச்சைப் பேசி இனி ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை

 

ஆதலால், பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும். அன்றியும் பழந்தமிழர் கொள்கை என்பது விவகாரத்திற்கு இடமாய்விட்டது.

குடிஅரசு 10.1.1943

பெரியார் முழக்கம் 01062023 இதழ்

You may also like...