Category: திவிக

பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது

பெரியார் விழா: திருப்பூர் தயாராகிறது

திராவிடர் விடுதலைக் கழக திருப்பூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09.09.2018 அன்று வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு மற்றும் மாவட்ட மாநகர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது பெரியார் 140ஆவது பிறந்தநாள் அன்று 17.09.2018 மாலை 4 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத் தில் இருந்து பேரணியாக புறப்பட்டு இரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பெரியார் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு. 24.09.2018 திங்கள் அன்று காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலையில் இருந்து இரு சக்கர வாகன ஊர்வலமாய் நகரில் 25 இடங்களில் கொடியேற்று விழா மிகச் சிறப்புடன் நடைபெற திட்டம் வகுக்கப்பட்டு கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைக்கிறார். கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம் வெற்றி பெற பங்கெடுத்து அனைவரும்...

தமிழ்க் குரிசில் படத்திறப்பு

தமிழ்க் குரிசில் படத்திறப்பு

09.09.2018 அன்று மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் நடந்த தோழர் தமிழ்க்குரிசில்  படத்திறப்பு நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் தொடங்கி யது. தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்க மணி  வரவேற்புரையாற்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார். தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியின் நிர்வாகியாக இருந்து செயல்பட்ட வரும் தமிழ்நாடு தாய்த் தமிழ் கல்வி யின் செயலாளராக இருந்தவரும், பெரியாரிய சிந்தனையாளரும், குடிஅரசு வெளியீட்டில் தொகுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தலைமை யேற்று நடத்தியவருமாகிய தமிழ்க்குரிசில்  படத்தை பேராசிரியர் கல்விமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் ஏற்பாடுகளையும், உணவு ஏற்பாடுகளையும் மேட்டூர் நகர கழகத் தோழர்கள் செய்தார்கள். நிகழ்ச்சியில் நினைவேந்தல் உரையாக கோபி தாய்த் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் குமணன், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் மூர்த்தி, தமிழ்வழி கல்விக் கழகத்தின் சார்பாக வெற்றிசெழியன், பல்லடம் தாய்த் தமிழ்...

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

ஈரோடு வடக்கு – ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 02.09.2018 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக பேச்சாளர் வேலுச்சாமி  தலைமையில் மாவட்ட செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.  கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் விழாவை கோபியில் அனைத்து இயக்கங்களும் இணைந்து ஊர்வலம் நடத்துவது எனவும், மாவட்ட முழுவதும் அய்யா பிறந்த நாள் விழாவினை தமிழர் கல்வி மீட்பு பரப்புரை பயணமாக வாரந்தோறும் ஞாயிறன்று ஒவ்வொரு ஒன்றியங்களாக நடத்துவது எனவும், பரப்புரை பயணத் தொடக்க நிகழ்வாக செப்டம்பர் 23 அன்று குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட கலந்துரையாடல் 02.09.2018 அன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி மாவட்ட...

மேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார்

மேட்டூர் தமிழ்க்குரிசில் முடிவெய்தினார்

மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி நிர்வாகியும், மேட்டூர் அனல் மின் நிலைய ஓய்வு பெற்ற முதுநிலை வேதியரும் பெரியாரியலாளருமான ப. தமிழ்க்குரிசில் (62) 3.9.2018 அன்று மேட்டூரில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். தாய்த் தமிழ்ப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பெரும் கவலை கொண்டு பணி ஓய்வுக்குப் பிறகு முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோது வெளியிட்ட போது தொகுப்புப் பணியில் பெரும் பங்காற்றிய பெருமைக்குரியவர் தமிழ்க்குரிசில். மேட்டூர் அருகே கொளத்தூரில் இரவு பகலாக பல வாரங்கள் தொகுப்புப் பணி நடந்த போது பணிகளை ஒருங்கிணைத்து ‘குடிஅரசு’ இதழ்களில் உள்ளது உள்ளவாறே அப்படியே வெளி வர வேண்டும். அப்போது தான் இது வரலாற்று ஆவணமாக எதிர்காலத்தில் நிற்கும் என்பதில் கவனம் செலுத்தி கவலையோடு பணியாற்றியவர் தமிழ்க் குரிசில். இறுதி வணக்கம் செலுத்திட கழகத்  தோழர்களும் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆதரவாளர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். கழகக்...

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மேற்கொண்ட சென்னைக் குழுவினருக்கு மக்கள் பேராதரவை வெளிப்படுத்தினர். தோழர்கள் இராவணன், முரளி, அருண், இரண்யா, தேன்ராஜ், செந்தில், பிரியா, ஓவியா – வெயில், மழை என்று பாராமல் கழக துண்டறிக்கையைக் கொடுதது கடைகளில் நிதி வசூல் செய்தனர். ஏழு நாளில் 16,000 துண்டறிக்கையை மக்களிடையே கொடுத்தனர். மக்களும் தாமாக முன் வந்து துண்டறிக்கை வாங்கி படித்தது மிகச் சிறப்பு. பயணத்தில் கடை வசூல் மட்டும் ரூ.60,000/- கிடைத்தது. இதில் சிறு வியாபாரிகளே அதிக ஆதரவு தந்தனர். கூடுவாஞ்சேரியைச் சார்ந்த நாடி ஜோதிடர் பழனிச்சாமி என்பவர், பயணச் செலவுக்கு ரூ.2000 நிதியளித்தார். கண்டிகையில் பிரச்சாரத்தைக் கேட்ட பக்தர் ஒருவர் ரூ.500 நன்கொடை வழங்கினார். இப்படி பயணத்தில் ஏராளமான பக்தர்கள் நிதி உதவி தந்தும், பழம், குளிர் பானம், தேநீர் என்று அவர்களால் இயன்ற அளவில் வழங்கி ஆதரவு தந்தனர். பெரியார் இயக்கத்தைச் சார்ந்த வர்கள் நம்...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

‘விநாயகன்’ ஊர்வலம் :  சென்னை மாவட்டக் கழகம் காவல் துறையிடம் மனு

‘விநாயகன்’ ஊர்வலம் : சென்னை மாவட்டக் கழகம் காவல் துறையிடம் மனு

விநாயகன் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் விநாயகர் சிலைகளை இரசாயன பொருட்களைக் கொண்டு தயார் செய்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரியும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 03.09.2018 காலை 11 மணிக்கு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கழகத் தோழர்கள் மனுவை அளித்தனர். பெரியார் முழக்கம் 06092018 இதழ்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள்

பெரம்பலூர் மாநாட்டு புகைப்படங்கள் சென்னை அணி புகைப்படங்கள் திருப்பூர் அணி புகைப்படங்கள் குடியாத்தம் அணி புகைப்படங்கள் மயிலாடுதுறை அணி புகைப்படங்கள்  

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு ! தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான 28.08.2018 அன்று கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு ! கேரளாவின் மழை வெள்ளத்திற்காக நிவாரண நன்கொடைகளை மக்களிடம் பெறும்போது இரயில் நிலையத்தில் காவல்துறை அநாகரீகமான செயலை கண்டித்தற்காக தோழர்.வளர்மதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தோழர்.வளர்மதி 01.09.2018 காலை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்பை சார்ந்த தோழர்கள் அவரை வரவேற்றனர். தோழர்.வளர்மதி புழல் சிறை அருகே உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கும், இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாமற் ஆக்கப்பட்டோர் நிலை குறித்து ஐ.நா விடம் இன்று ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை விடப்பட்டது To: ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில்  காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம்  ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்குசெய்யப்பட்டிந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன்,...

ஐநா பொதுச் செயலருக்கும்,  ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் கோரிக்கை மனு

தோழர் கொளத்தூர் மணி                                31.8.2018 தலைமை ஒருங்கிணைப்பாளர்   ஐநா பொதுச் செயலருக்கும், ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும்.  ஆகஸ்ட் 30 ஆம் நாளில் வலுக்கட்டாயக் காணாமலடிக்கப்பட்டவர்களை உலகம் நினைவுகூர்வது போலவே, தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாங்கள், இலங்கையில் காணாமலாக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை ஐ.நா.வின் வலுக்கட்டாயக் காணாமலடித்தல் பற்றிய குழுவில் எழுப்புமாறு வலுக்கட்டாயக் காணாமலடித்தலிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில்(ICPPED) கைசாத்திட்டுள்ள நாடுகளை வலியுறுத்துகிறோம். இலங்கையில் பத்தாயிரக்கணக்கானத் தமிழர்கள் இறுதிப்  போரின் போதும் அதற்குப் முன்பும் பின்பும் வலுகட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளானதோடு இறுதிப்போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகியும் அவர்களின் நிலை வெளிப்படாமலும் கண்டறியப்படாமலும் உள்ளது. ஐ.நா. கணக்குப்படி, உலகிலேயே காணாமலடிக்கப்பட்டோரை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் எண்ணற்ற குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் போரின் கடைசி நாட்களில் சிறிலங்கா அரசப்படைகளிடம் சரணடைந்த...

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான இன்று (28.08.2018)… கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

ஐ.நா அலுவலகம் முன்பு ஒன்றுகூடல் சென்னை 31082018

ஐ.நா அலுவலகம் முன்பு ஒன்றுகூடல் சென்னை 31082018

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நாளை (31.08.2018)காலை 10 மணிக்கு ஐ.நா அலுவலகம் முன்பு, கஸ்தூரிபாய் ரயில் நிலையம் அருகில்… #ஒன்றுகூடல்….. இலங்கை அரசால் ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 20,000க்கும் மேலான தமிழர்கள் எங்கே? திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

கழக வளர்ச்சிக்கு ரூ. 25,000 நன்கொடை: கோபி இராம இளங்கோவன்-க.ம. நாத்திகராணி புதிய இல்லம் திறப்பு

கழக வளர்ச்சிக்கு ரூ. 25,000 நன்கொடை: கோபி இராம இளங்கோவன்-க.ம. நாத்திகராணி புதிய இல்லம் திறப்பு

கழக வெளியீட்டு செய லாளர் கோபி இராம இளங் கோவன், க.ம. நாத்திக ராணி இணையரின் புதிய பெரியார் இல்லத் திறப்பு விழா, ஆகஸ்ட் 11ஆம் தேதி பகல் 12 மணியளவில் கொளப் பலூரில் சிறப்புடன் நிகழ்ந்தது. தா.செ. பழனிச்சாமி, கோ. இராமகிருஷ்ணன் ஆகியோர் புதிய இல்லத்தைத் திறந்து வைத்தனர். நிகழ்வையொட்டி மதுரை வேம்பனின் தந்திரவியல் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் ஆசைத்தம்பி வரவேற்புரையைத் தொடர்ந்து கோபி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.பா. வெங்கிடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். இல்லத் திறப்பு விழா மகிழ்வாக கோபி. இளங்கோ கழக வளர்ச்சிக்கு ரூ.25,000 பொதுச் செயலாளரிடம் வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி,  பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கழகத் தோழர்கள் பெருமளவில் நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30082018 இதழ்

கழக மாநாடு தமிழக அரசுக்கு கோரிக்கை ‘நீட்’டுக்கு விலக்கு கோரி – தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்

கழக மாநாடு தமிழக அரசுக்கு கோரிக்கை ‘நீட்’டுக்கு விலக்கு கோரி – தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம்

2018 ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் நிகழ்ந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த தீர்மானங்கள்: கலைஞருக்கு வீர வணக்கம் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், சூத்திரர் இழிவு ஒழிப்பு இலட்சியத்தை நிறை வேற்றிட அனைத்து ஜாதியினரை யும் அர்ச்சகராக்க – இரண்டு முறை – தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் மற்றும் சட்டம் நிறைவேற்றியவரும்,  திராவிட இயக்கத்தின் அடிப்படையான சமூக நீதிக் கொள்கைகளைக் கட்டிக் காப்பாற்றி விரிவு செய்து – மேலும் செழுமையாக்கி இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை ஜன நாயகப்படுத்தியவரும், சூத்திரர் களுக்கான ஆட்சியை நடத்து கிறேன் என்று சட்டப் பேரவையில் முதல்வராகப் பிரகடனம் செய்தவரும், தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்று பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் புரட்சியை சட்டப் படி நடைமுறைக்குக் கொண்டு வந்தவரும், ‘சிலை வைக்க வேண்டிய தலைவர்’ என்று...

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?(2)

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?(2)

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) நில உரிமையாளர் தனது நிலத்தை திரும்பக் கேட்டால் குத்தகைதாரர் மிகக் குறைவாக கேட்பது மூன்றில் ஒரு பகுதி நிலமோ அல்லது அதற்கு ஈடான பணமோ. நில உரிமையாளர் அதிகாரம் மிக்கவராக இருந்தால், மூன்றில் ஒரு பகுதி நிலத்தை வழங்கிவிட்டு மீதி நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். நில உரிமையாளரின் அதிகார பலம் குறையக் குறைய குத்தகைதாரரின் பங்கு கூடும். நில உரிமையாளர் உள்ளூர்க்காரராக இல்லாமலும் சாதி மற்றும் இதர பலம் இல்லாதவராக இருந்தால் ஒரு சென்ட் நிலம் கூட பெற முடியாது. ஆக, இந்தப் பேரத்தை தீர்மானிப்பது இவர்கள் இருவரது பலங்கள்தான். பதிவுபெற்ற...

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும் கருஞ்சட்டைத் தோழர்களும் கடல்போல் திரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுக்குப் பொறுப்பேற்று செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை யிலான செயல் வீரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகரம் முழுதும் கழகக் கொடிகளும் மாநாட்டுக் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளும் கம்பீரமாகக் காட்சி அளித்தன. மாநாட்டு மேடைக்கு ‘சமச்சீர் கல்வி நாயகன் கலைஞர் மேடை’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாலை 3 மணியிலிருந்தே 6 பயணக் குழுக்களும் பறை இசை ஒலி முழக்கங்களோடு பெரம்பலூர் நோக்கி வந்து நகரையே குலுக்கின. சென்னை பயணக்குழு தனது நிறைவு பரப்புரையை பெரம்பலூர் கூட் ரோடு சந்திப்பில் நிகழ்த்தியது. மாலை 6 மணியளவில் பறை...

சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

“தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணத்தின்” சென்னை மாவட்ட பரப்புரைக் குழு 20.08.2018 அன்று காலை 9.30 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து பரப்புரைப் பயண முழக்கத்தோடு பயணத்தைத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து கிண்டி கத்திபாரா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மா.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்) மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பயணத்தின் முதல் பரப்புரைப் பயணக் கூட்டம் நங்கநல்லூர் சுரங்க பாதை அருகே காலை 11 மணிக்கு “விரட்டு” கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத் தோடு தொடங்கப்பட்டது. அருள்தாஸ், தமிழர் உரிமை பாடல்களைப் பாடினார். இரண்டாவது கூட்டம் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு பரப்புரைப் பயணம் தொடங்கியது. பரப்புரைப் பயண தோழர்களுக்கு நங்கநல்லூர் பகுதியை சார்ந்த குகனாந்தன் மதிய உணவை தோழர்களுக்கு  ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்பு, மாலை 3 மணிக்கு பரப்புரைப் பயணம் கோவிலம்பாக்கம் பேருந்து...

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலமாகச் சமீப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட போதும், நிலச் சீர்திருத்தம் இம்மாநிலத்தில் சரிவரச் செயல்படுத்தப் படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு ஒரு சாரரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இக்குற்றச் சாட்டின் அடிப்படையில் நோக்கினால், நிலப் பிரபுத்துவம் தமிழகத்தில் தொடர்கிறது என்றுதான் எவரும் ஊகிப்பர். அதன் விளைவாகப் பெரும்பான்மையான சாகுபடி நிலங்கள் குத்தகைக்கு அடைக்கப்பட்டும் வேளாண் வருமானத்தில் பெரும் பகுதி குத்தகையாக வசூலிக்கப்படும் சூழலும் நிலவ வேண்டும். குறிப்பாகக் காவிரி டெல்டா போன்ற செழிப்பான பகுதிகளில் இத்தகைய நிலச் சுவான்தார் முறை உக்கிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறை என்ன? நிலப் பிரபுத்துவம் பெருமளவு...

நன்கொடை

நன்கொடை

கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் வெங்கட் – இராஜேஸ்வரி இணையரின் குழந்தைக்கு “அறிவுக் கனல்” என கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெயரிட்டார். அதன் நினைவாக இயக்க நிதியாக ரூ. 1000 கொடுத்தனர். பெரியார் முழக்கம் 23082018 இதழ்

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பரப்புரைப் பயணத்தில் ‘நீட்’ பாதிப்புகளையும் தமிழ்நாட்டின் மத்திய அரசுத் துறைகளில் வடநாட்டார் குவிக்கப்படுவதையும் மக்கள் பேராதரவுடன் வரவேற்கிறார்கள். துண்டறிக்கைகளை, நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சென்னைக் குழு பரப்புரை செய்தபோது நெற்றி முழுதும் விபூதி-குங்குமம் அணிந்த தோழர், ஆர்வத்துடன் சைக்கிளில் வந்து இறங்கி கழக வெளியீடுகளை வாங்கி தோழர்களின் கரங்களைப் பிடித்து பாராட்டினார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகையில் பரப்புரை முடிந்து தோழர்கள் பயணப்பட்ட பிறகு, ஒரு தோழர் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பின் தொடர்ந்து வந்து வாகனத்தை நிறுத்தி ரூ.500 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23082018 இதழ்

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் தொடங்கியது. 20ஆம் தேதி சென்னை, மேட்டூர், மயிலாடுதுறை குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. 21ஆம் தேதி குடியாத்தம், திருப்பூர், சங்கரன்கோயில் பயணக் குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. முன்னதாக சென்னை பயணக் குழுவின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஆகஸ்டு 19 ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருவல்லிக்கேணி சேக்தாவூது தெருவில் அருண்குமார் தலைமையில் சி.இலட்சு மணன் முன்னிலையில் ப. பிரபாகரன் வரவேற்புரையுடன் தொடங்கியது. கலைஞர் நினைவு அரங்கம் என்று மேடைக்கு பெயர் சூட்டப்ப்டடிருந்தது. கலைஞர் உருவப் படத்தைப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தொடக்க உரையைத் தொடர்ந்து ‘விரட்டு’ கலை பண்பாட்டுக் குழுவினரின் பறை இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. சமூக நீதி காத்த தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் பாடல்கள், கல்வி உரிமைப் பயண நோக்கங்களை விளக்கம் பாடல்களைத் தொடர்ந்து...

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு  (Current a/c) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 i.f.c. Code : kvbl0001257 தொடர்புக்கு:  7299230363 பெரியார் முழக்கம் 16082018 இதழ்

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞர் மறைவுக்கு கழக சார்பில் சென்னையில் வீர வணக்கப்பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு ஊர்களில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை : திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞருக்கு 08.08.2018 காலை 11 மணிக்கு அண்ணாசிலையி லிருந்து இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞரின் உருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீர வணக்க உரையாற்றினர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் : கலைஞருக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட...

பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

பெரம்பலூர் – கருஞ்சட்டைக் கடலாகட்டும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலாற்றல் மிக்க தோழர்கள் தமிழர்களின் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதிக்கப் படும் கல்வி வேலை வாய்ப்பு உரிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். 2018 ஆக. 20இல் தொடங்கி 26இல் பெரம்பலூரில் நிறைவு விழா மாநாடு; 6 முனைகளிலிருந்து புறப்பட்டு 180 ஊர்களில் பரப்புரைக் கூட்டங்கள். எத்தனையோ தடைகளைத் தகர்த்து ‘மனு சாஸ்திரம்’ நமக்கு மறுத்த கல்வி உரிமையை மீட்டு நமது தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள் இப்போது பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கியது நமக்கான வகுப்புவாரி உரிமை. 1950இல் தமிழ்நாட்டில் பின்பற்றி வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும் பிறகு உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. பெரியார் போராடினார்; தமிழகம் கொந்தளித்தது. இந்திய அரசியல் சட்டம் பெரியார் நடத்திய போராட்டத்தால் முதன் முதலாக 1951இல் திருத்தப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக் கான போராட்டத்தையும் வடவர் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டத்தையும்...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரைப் பயணம்’

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று! • தமிழ்நாட்டில் ‘நீட்’டை விலக்கு! • மத்திய அரசுப் பணிகளில் வடநாட்டுக் காரர்களைத் திணிக்காதே!   • தமிழகத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வேலை கொடு; தேர்வுகளை  தமிழில் நடத்து! • தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வழங்கு! தோழர்களே! கல்வி – வேலை வாய்ப்பு – இதுவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நமக்கு இரண்டு கண்கள்: ஆனால், நமது கண்கள் இப்போது பிடுங்கப் படுகின்றன. மீண்டும் நமது தாத்தா, பாட்டி களின் ‘கைநாட்டு’க் காலத்துக்கே விரட்டப் பட்டுவிடுவோமோ என்ற அச்சம் சூழ்ந்து நிற்கிறோம். இதோ சில தகவல்கள்… இதைப் படியுங்கள். 1976ஆம் ஆண்டு வரை கல்வி நமது மாநில அரசுக்கு மட்டுமே உரிமையாக இருந்த நிலை மாறி மத்திய அரசு ‘நாங்களும் தலையிடுவோம்’ என்று குறுக்கிட்டுத் தானாகவே பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. அதன் விளைவு? இப்போது நமக்கு அடி மேல் அடி. ‘நீட்’ தேர்வு அப்படித்தான்...

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ –  ஜூலை 2018 இதழ்

தற்போது விற்பனையில் ‘நிமிர்வோம்’ – ஜூலை 2018 இதழ்

தலையங்கம்-ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம் ‘தலித்’துகளை புறக்கணிக்கும் கிரிக்கெட் வாரியம் ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறல்- ஒரு விரிவான அலசல் தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் மோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள் – அய்.நா வில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்… தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004. தொலைபேசி எண்: 044 24980745/7299230363 www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 09082018 இதழ்

மேட்டூர் பகுதியில்  விளக்கக் கூட்டங்கள்

மேட்டூர் பகுதியில் விளக்கக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தமிழர் கல்வி உரிமைப் பரப்புரை பயணம் வருகிற ஆகஸ்டு 20 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது. பரப்புரை பயணத்தின் நோக்கங் களையும், கோரிக்கைகளையும்  மக்களிடையே விளக்கும் விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம் சார்பில் பயண விளக்க தெருமுனைக் கூட்டங்கள் 4.08.2018 சனிக்கிழமை மாலை 4 மணி, சேலம் மாவட்டம் பொட்டனேரி மற்றும் 6.30 மணி மேச்சேரி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது.  மேட்டூர் டிகேஆர் இசைக்குழுவின் பறையிசை மற்றும் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அ.சக்தி வேல் (தலைமைக் குழு உறுப்பினர்),  பரத் ஆகியோர் பயணத்தின் நோக்கம் குறித்து மக்களிடையே விளக்க உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு கோ.தமிழரசன் தலைமை வகித்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

பரப்புரைப் பயணத்துக்கு  கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

பரப்புரைப் பயணத்துக்கு கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 03.08.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் நடைபெற்றது. இதில் வரும் ஆக°ட் 20 முதல் 26 வரை நடைபெறவிருக்கும் “கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தின்” நோக்கத்தை குறித்தும், பயணத்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வை இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செய லாளர்) ஒருங்கிணைத்தார். ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), அன்பு தனசேகர் (தலைமை செயற்குழு உறுப்பினர்) மற்றும் கழகத் தோழர்கள் தங்களுடைய கருத்துகளை கூறினர். இறுதியாக தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் ஆறாவது சந்திப்பு, 30.07.2018 அன்று மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அதைத் தொடர்ந்து ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் இமானுவேல் துரை, ‘யோகக் கலை’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் மற்றும் ‘திராவிடர் இயக்க சாதனைகள்’ குறித்து ஜெயபிரகாஷ் ஆகியோர் விரிவாகப் பேசினர். ‘நிமிர்வோம்’ டிசம்பர் 2017 மற்றும் சனவரி 2018 மாத இதழ்களை குறித்தும் தங்களது கருத்துகளையும் எடுத்துரைத்தனர். தொடர்ச்சியாக இந்த நிகழ்வுக்கு சிறப்புரையாற்ற வந்திருந்த கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “கலைஞரின் 50 ஆண்டு கால வரலாறு” குறித்து தனது ஆழமான கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதல் – தோழர் கொளத்தூர் மணி அவர்கள் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திட்டவட்டம்

தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதல் – தோழர் கொளத்தூர் மணி அவர்கள் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திட்டவட்டம்

”தி.மு.க வின் மீது வைக்கப்படும் எந்த ஒரு விமர்சனமும் கூட அது தமிழ் மக்களுக்கே பாதிப்பாக வந்துவிடுமோ என்கிற அச்சம் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.” ”தி.மு.க.வை கட்சியாக பார்க்காமல் தமிழர் நலன்,தமிழ்நாட்டு நலன் என இணைத்து பார்க்கிறோம்.” ”அரசியலைப்பொறுத்த வரை சூழலைப்பார்த்துதான் முடிவெடுக்க முடியும்.” அழகிரியின் திடீர் பேட்டி குறித்து ”கழகத்தலைவர் கொளத்தூர் மணி” அவர்கள் நேற்று 13.08.2018 அன்று NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ‘காலத்தின் குரல்’ நிகழ்சியில் அளித்த பேட்டியின் சாரம் : ”அழகிரியின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது.அவர் திமுகவில் குழப்பத்தை எற்படுத்த முயற்சிக்கிறார்.பொது வெளியில் இப்படி பேசியதை ஏற்க முடியாது.இதனை கண்டிகிறேன்.இவரால் எந்த பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனினும் இதைக்கூட அனுமதிக்க கூடாத ஒன்று இப்படி அவர் நடந்திருக்க கூடாது. இதனை கட்சி விவகாரமாகவோ,குடும்ப சிக்கலாகவோ பார்க்கவில்லை.இது ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதலைப்போலத்தான் உணர்கிறேன். பா.ஜ.க. தமிழகத்திற்கு நுழைய பெரும்...

கலைஞர் இரங்கல் நிகழ்வு திருச்செங்கோடு 12082018

கலைஞர் இரங்கல் நிகழ்வு திருச்செங்கோடு 12082018

கடந்த 7.8.2018 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் முன்னிலையில் இரங்கல் கூட்டம்  நடைபெற்றது. நிகவில், மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கலைஞரின் சாதனைகள் மற்றும் கலைஞரின் மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினர், மேலும், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த கழகத்  தோழர்கள் கலந்து கொண்டனர்.  ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் மாநில துணைப்பொதுச் செயலாளர்  தமிழரசு இரங்கல் உரை நிகழ்த்த,  ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் செல்வவில்லாளன் கலைஞரின் சமூக நீதி சாதனைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் நிறைவுரையாக தனது இரங்கல் கருத்தை பதிவு செய்தார். மேலும், நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர்...

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி !  பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை

https://www.facebook.com/dvk.chennai.5/videos/444132239438752/ கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! (காணொளி) பொதுச்செயலாளர் அவர்களின் இரங்கல் உரை ! 08.08.2018 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.facebook.com/dvk.chennai.5/videos/444132239438752/  

பா.ஜ.க. ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பொதுக்கூட்டம் மதுரை 13082016

பா.ஜ.க. ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பொதுக்கூட்டம் மதுரை 13082016

மதுரையில் பொதுக்கூட்டம் ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ”பா.ஜ.க. ஆட்சியில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு.”எனும் தலைப்பில் உரையாற்றுகிறார் ! நாள் : 13.08.2018.திங்கட் கிழமை. நேரம் : மாலை 6.00 மணி இடம் : பெத்தானியாபுரம்,குரு திரையரங்கம் எதிரில்,மதுரை. தோழமை அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்த்தேச மக்கள் முன்னணி.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு

“பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு” இன்றைய வாட்ஸ் அப்(12.08.2018)செய்தி அரசியல் பதவி வேட்டை லாபங்களுக்காக துணை போகாமல் எந்த பதவியும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் பெரியாரின் சமுதாய தொண்டை மக்களுக்கு ஆற்றப் போகிறோம் என்று சொந்த செலவில், சொந்த உழைப்பில் சமூகத்தில் கல்வி உரிமை, சுயமரியாதைக்காக பகுத்தறிவுக்காக பாடுபடுகின்ற பெரியார் தொண்டர்களை காவல் துறை ஏன் இப்படி அலைக்கழிக்கிறது. ஏன் இப்படி பொய் வழக்குகளை போடுகிறது என்பது நமக்கு புரியவில்லை. அதுவும் தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தமிழ் இன கொள்கைகளை மக்களிடையே கொண்டு சொல்வதற்கும், பறிக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை, தமிழ்நாட்டை மதவெறி பூமியாக மாற்றுகிற ஆபத்துகளை எதிர்த்தும், போராடி கொண்டிருக்கிற, களமாடி கொண்டிருக்கிற ஒரு சமுதாய புரட்சி இயக்கத்தை சார்ந்த தொண்டர்களை ஏன் காவல்துறை சமூக விரோதிகளாக பார்க்கிறது. பொய் வழக்குகளை புணைகிறது என்ற கேள்வியை இப்போது கேட்க வேண்டியிருக்கிறது....

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விடை பெற்ற திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு 08.08.2018) காலை 11 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்க உரையாற்றினார்கள். தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் புதுச்சேரி 13082018

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் புதுச்சேரி 13082018

திருமுருகன் காந்தியின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- மறியல் கடந்த 2017-ஆம் ஆண்டு ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தியை தமிழக அரசு தேசத் துரோக வழக்கில் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்- மறியல். நாள்: 13.08.2018, காலை 10 மணி. இடம்: ராஜா திரையரங்கு (நேரு வீதி சந்திப்பு), புதுச்சேரி. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறோம். இவண் லோகு.அய்யப்பன் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், புதுச்சேரி.

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !

தோழர் திருமுருகன் காந்தி கைதிற்கு திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் ! மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரில் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர் செய்த குற்றம் ஜெனிவாவில் நடந்த அய்.நா. கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்துப் பேசியதுதான்.” இது வன்மையான கண்டனத்துக்குரியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தினார்கள். உயிர்ப்பலி தந்து அரசைப் பணியவைத்து ஆலையை மூடினார்கள்.இப்போது ஸ்டெர்லைட் ஆலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “பசுமைத் தீர்ப்பாயம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தனது நிர்வாகப் பணிகளை தொடங்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. உற்பத்தியைத் தொடங்க கூடாதாம்; ஆனால் நிர்வாகப் பணியைத் தொடங்கலாமாம். உற்பத்தி தொடங்காமல் என்ன நிர்வாகப் பணி இருக்கப்போகிறது என்று நமக்குத் தெரியவில்லை.” பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது திடீரென்று எதனால் அதன் நிலையில்...

கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலி

50 ஆண்டுகாலம் ஒரு இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர், 18 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர், 80 ஆண்டுகாலம் தமிழகத்தின் பொதுவாழ்க்கையில் பயணித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமூகத்தின் கடைக்கோடி சமூக பிரிவிலிருந்து அதிகாரத்தின் உச்சிற்கு உயர்ந்த ஒரு மனிதர் கலைஞர் இன்றைக்கு விடைபெற்றுக்கொண்டுவிட்டார். 95 வயது வாழ்க்கை என்பது ஒரு முழுமையான நிறை வாழ்வுதான். அவர் விட்டுச்சென்ற கொள்கைகளை எப்படி அவர் கட்டி எழுப்பிய இயக்கம் பாதுகாக்க போகிறது என்பதுதான் கலைஞருக்கு செய்யக்கூடிய உண்மையான நினைவு அஞ்சலியாக இருக்கக் கூடும். திராவிடர் இயக்கத்தினுடைய அரசியல் கொள்கைகளை ஒழிப்பதற்கும் சீர்குலைப்பதற்கும் இன்றைக்கு திட்டமிட்ட சூழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த தடைகளை கடந்து இயக்கத்தை எப்படி முன்னெடுத்துச் செல்ல போகிறோம் என்பது தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முன்னிருக்க கூடிய மிகப்பெரிய சவால். அந்த சவாலை கடந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் திராவிட இயக்க அரசியலை தீவிரமாக முன்னெடுத்து செல்வது ஒன்று தான் கலைஞருக்கு...

விடை பெற்றார் கலைஞர் !

விடை பெற்றார்  ! கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும் ! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்!

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

6 ஊர்களிலிருந்து புறப்பட்டு 175 ஊர்களில் பரப்புரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘கல்வி உரிமை பரப்புரை’ப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கல்வி உரிமை பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 20இல் தொடங்கி ஆக. 26இல் முடிவடைகிறது. சென்னை, குடியாத்தம், சங்கரன் கோயில், மேட்டூர், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 6 ஊர்களிலிருந்து பயணக் குழுக்கள் தனித் தனியாகப் புறப்பட்டு பெரம்பூர் வந்து சேருகின்றன. பெரம் பூரில் பயண நிறைவு விழா மாநாடாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கிய தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட் டோருக்கான கல்வி வேலை வாய்ப்பு எனும் சமூக நீதித் திட்டங்கள் தமிழகத்தை இந்தியா விலேயே முதன்மை மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகக் கல்வி உரிமையில் நடுவண் கட்சியின் குறுக்கீடுகள் தமிழகம் கட்டி எழுப்பிய சமூக நீதிக் கட்டமைப்பைக் குலைத்து வருவ தோடு வேலை வாய்ப்புகளிலும் வட மாநிலத்தவரைக் குவித்து வருகிறது. இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உருவாக்குவதே இப் பயணத்தின் நோக்கம். மொத்தம் 140 ஊர்களில் பரப்புரை நடக்கிறது....

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம்

அஞ்சல் வழியாக ‘நிமிர்வோம்’ இதழ் பெற வேண்டியவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.300 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி : ‘நிமிர்வோம்’ 29, பத்திரிகையாளர் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை – 600 041. வங்கி வழியாக அனுப்ப: ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி அடையாறு கிளை நடப்புக் கணக்கு (Current A/C) வங்கிக் கணக்கு எண் : 1257115000002041 IFC Code : KVBL0001257 தொடர்புக்கு:  7299230363  

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம் கோவை 19082018

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம் கோவை 19082018

”திராவிட விழுதுகள்” கருத்தரங்கம். தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ”ஆரிய சூழ்ச்சியும் – திராவிட எழுச்சியும்” எனும் தலைப்பிலும், புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் ”இன்றைய சூழலில் திராவிடத்தின் தேவை” எனும் தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். நாள் : 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5 மணிக்கு இடம்- : அண்ணாமலை அரங்கம்,சாந்தி திரையரங்கம் அருகில், கோவை.

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! காஞ்சிபுரம் 03082018

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! காஞ்சிபுரம் 03082018

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! பேச்சுரிமை,கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறையை எதிர்த்து…… நாள் : 03.08.2018,வெள்ளி நேரம் : மாலை 4.00 மணி இடம் : பெரியார் சுடர் காந்தி சிலை,காஞ்சிபுரம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் பண்ருட்டி வேல் முருகன்,மதிமுக து.பொ.செயலாளர் தோழர் மல்லை சத்யா உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தன்னாட்சித் தமிழகம் அமைப்பு.

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! சென்னை 05082018

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! சென்னை 05082018

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! கழகத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு ”பெரியார் பிற்படுத்தப்ப்ட்டவர்களுக்கான தலைவர் என்பது சரியா?” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். மேலும் புத்தர் கலைக்குழு மணிமாறன் மகிழினி,சங்கர் சமூகநீதி அறக்கட்டளை தோழர் கவுசல்யா,ஊடகவியலாளர் தோழர் ஆசீப் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள். நாள் : 05.08.2018 ஞாயிறு நேரம் : மாலை 5.00 மணி. இடம் : இக்சா மையம்,பாந்தியன் சாலை,அருங்காட்சியகம் எதிரில்,எழும்பூர்,சென்னை.

தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

ஆகஸ்ட் 1ல், தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பை கண்டித்தும், போராடுவோர் மீது போடப்படும் பொய் வழக்குகளை நிறுத்த வலியுறுத்தியும், 8 வழிச்சாலை பிரச்சனையில் போராடும் மக்கள்,விவசாயிகள் உணர்வுகளை மதிக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி கோரியும் தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! நாள் : 01.08.2018 புதன் கிழமை. நேரம் : மாலை 3.00 மணி. இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில். பல்வேறு அரசியல்கட்சிகள்,சமுதாய அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழர் வாழ்வுரிமைக்கூட்டமைப்பு.

கழகத்தோழர் பிரபு அவர்கள் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ! காவேரிப்பட்டிணம் 31072018

கழகத்தோழர் பிரபு அவர்கள் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ! காவேரிப்பட்டிணம் 31072018

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 31.07.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : மாலை 3.00 மணி. இடம் : காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையம். கிருட்டிணகிரி மாவட்டம். கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒன்றிய அமைப்பாளர் தோழர் பிரபு அவர்கள் 17.07.2018 அன்று படுகொலை செய்யப்பட்டு காவேரிப்பட்டிணம் சந்தாபுரம் மேம்பாலம் கீழே உடல் கண்டெடுக்கப்பட்டது.இந்தக் கொலை குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கிறது.எனவே காவல்துறை இந்த கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தொடர்புக்கு : தோழர் குமார், மாவட்டத்தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், கிருட்டிணகிரி மாவட்டம். 9585887865.

தா.மோ. அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி தவறான முன்னுதாரணம் பிரார்த்தனை – வழிபாடுகள் நடத்தி கலைஞர் கொள்கையை அவமதிக்க வேண்டாம்

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள், கலைஞர் உடல்நலம் பெற பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற வேண்டுகோளை விடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் விடுக்கப்பட்டn வண்டுகோள் இது. வாழ்நாள் முழுதும் நாத்திகராக வாழ்ந்து வரும் ஒரு தலைவருக்காக இப்படி பிரார்த்தனை போன்ற மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது கலைஞரின் கொள்கைக்கு இழைக்கும் துரோகமும் அவமதிப்பும் ஆகும். சில பார்ப்பன ஊடகங்கள், இப்படிப்பட்ட ‘பிரார்த்தனை’கள் நடத்தப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செய்திகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு திருவாரூரில் கலைஞர் படித்த பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி மைதானத்திலேயே (கோயிலில்  அல்ல) ‘கூட்டு பிரார்த்தனை’யை அவர்கள் நம்பிக்கை அடிப்படையில் நடத்தியதை வெளியிட்டு தமிழகம் முழுதும் தி.மு.க.வினர் வழிபாடுகளை நடத்துவதாக ஒரு கற்பனையை செய்தியாக உருவாக்கிப் பரவ விட்டது. இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அர்ஜூன் சம்பத் என்பவர் கலைஞரை நலம் விசாரிக்கச் செல்வதாகக் கூறி கோயில் பிரசாதங்களை எடுத்துப்...

ஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம்

75 ஆண்டுகால பொது வாழ்க்கை; 50 ஆண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்துக்குத் தலைமை என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் ஒரு அபூர்வ நிகழ்வு. இந்து பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ஒடுக்குமுறை சமூக அமைப்பில் கடைக்கோடிப் பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு  சமூகத்தின் இளைஞர் – சமூகத் தடைகளைக் கடந்து அரசியல் அதிகாரத்தை எட்டிப் பிடித்ததே மகத்தான சாதனைதான். அந்த சாதனைக்குப் பெயர் கலைஞர்! இதையே தனது சமூகப் புரட்சித் தொண்டுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பூரித்தவர் பெரியார். அந்த சாதனையை சமூகத்துக்குப் பிரகடனப்படுத்தவே கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பெரியார், அதற்கு தனது சொந்த நிதியை வழங்க முன் வந்தார். இது சூத்திரர்களால் – சூத்திரர்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்திலே ஒரு முதல்வராக கலைஞர் பிரகடனம் செய்தபோது, அது ‘சூத்திர இழிவு’ ஒழிப்புக்கான பெரியாரின் களப்போருக்கு சூட்டப்பட்ட மகுடம் என்றே சொல்ல வேண்டும். அதே சூத்திர இழிவு...