குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகம் வேலூர் மாவட்ட செயலாளர் இரா.ப.சிவா-ஜெ.பிரவினா ஆகி யோரது வாழ்விணை ஏற்பு விழா 01.09.2019 அன்று காலை 10 மணி யளவில் குடியாத்தம், அம்மணாங் குப்பத்தில் உள்ள மதுரா மஹாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஜெ.செந்தமிழ் வரவேற்பு கூறினார்.

மருத்துவர் நா.எழிலன் (இளைஞர் சங்கம்), பால்.பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்), ப.திலிபன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   நாடாளுமன்ற உறுப்பினர்

கவிஞர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 12092019 இதழ்

You may also like...