காவல்துறை திடீர் தடை: பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

காவல்துறை திடீர் தடை:  பரப்புரைப்பயணம் தள்ளிவைப்பு !

மண்ணிண் மைந்தருக்கு வேலை கொடு !
தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! என்கிற முழக்கத்தோடு திராவிடர்_விடுதலை_கழகம் ஆக. 26-31 வரை தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து தொடங்கிய பரப்புரைப் பயணம் முறையாக காவல்துறையின் அனுமதி பெற்று துவங்கப்பட்டது ஆனால் தற்போது ஆக. 25இல் தொடங்கிய கழகத்தின் பரப்புரைக் குழுக்களுக்கும்,ஆக. 26இல் தொடங்கிய பரப்புரைக் குழுக்களுக்கும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது. எனவே பரப்புரைப் பயணத்திட்டமும் பள்ளிப்பாளையம் நிறைவு விழா மாநாடும் தள்ளி வைக்கப்படுகிறது.
புதிய பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.

– கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

விடுதலை இராசேந்திரன்,
பொதுச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

பெரியார் முழக்கம் 29082019 இதழ்

You may also like...