Category: தலைமை கழகம்

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன-பனியா-ஊடகங்கள் விலைபோகத் தயார்

‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை பார்ப்பன – பனியாக்களின் கட்டுப்பாட் டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப்ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி யிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். 2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி...

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனம் ! தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை விடுதலை செய் ! தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் தலைவர்கள் மீது ஒடுக்குமுறையை கைவிடு ! நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்களை இழிவு படுத்திய பார்ப்பான் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் காவல் துறை, நீதிமன்றம் உத்தரவிட்டும் சோடா பாட்டில் வீச்சு சமூக விரோதி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசின் காவல்துறை, வழக்குகளை கண்டு அஞ்சாமல், தலைமறைவாகாமல் காவல்துறை விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் பொது வெளியில் மக்களுக்காக இயங்கி வரும் தலைவர் ஆவார். எப்போதோ போடப்பட்ட வழக்கில் இப்போது அதுவும் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற நேரத்தில் தடுத்து கைது செய்வதற்கு என்ன அவசர அவசியம் வந்துள்ளது? மக்களுக்காக போராடுபவர்களையே குறிவைத்து இந்த காவல்துறை கைது செய்கிறது...

தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதி வழியில் தன்னெழுச்சியாக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலை செய்த தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும், கண்டித்தும்.தமிழக முதல்வரை உடனே பதவி விலக வலியுறுத்தியும்,இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, மற்றும் இயக்குனர்,திரு, பாரதிராஜா. அவர்களின் தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகியவற்றின் சார்பில் நாளை (24-05-2018) வியாழன், மாலை 3 மணியளவில், சேப்பாக்கம் அண்ணா சிலையிலிருந்து பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது,...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி ஊர்திப் பேரணி – சமூக நீதி ரதம்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி ஊர்திப் பேரணி – சமூக நீதி ரதம்

n             மே 9 காலை ஈரோட்டில் தொடங்குகிறது n             மே 12 – சென்னை கூடுவாஞ்சேரியில் நிறைவடைகிறது n             சேலம் – காவேரிப்பட்டினம் – வேலூர் – கூடுவாஞ்சேரியில் பொதுக் கூட்டங்கள் n             காலை முதல் மாலை வரை –  பறி போகும் தமிழக உரிமைகள் பா.ஜ.க. மதவெறித் திணிப்புகளை எதிர்த்து – பரப்புரை பெரியார்-அம்பேத்கர்-காமராசர் – சமூகநீதி ரதம் பேரணியாக வலம் வருகிறது. தமிழர்களே! ஆதரவு தாரீர்! பெரியார் முழக்கம் 03052018 இதழ்

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! திருமுடிவாக்கம் 19042018

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! திருமுடிவாக்கம் 19042018

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் அப்பகுதி மக்களின் முயற்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனையொட்டி 19-4-2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றச் செயலாளர் பாசறை செல்வராசு, தந்தை பெரியார் திரவிடர்க் கழகத்தின் தோழர் குன்றத்தூர் பரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு

கழகக் கொடி தேவைப்படுவோருக்கு

திராவிடர் விடுதலைக் கழகக் கொடி தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 – கொடி அளவு : 3 ஒ 2    விலை: ரூ.80/= (ரூபாய் எண்பது மட்டும்) பெரியார் முழக்கம் 19042018 இதழ்

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி” தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 கொடி அளவு : 3×2 விலை : ₹ 80/= (ரூபாய் எண்பது மட்டும்)

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது ! பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் பேட்டி. திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக….. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து…. இன்று 02.04.2018 (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. காணொளிக்கு

“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“5 நாட்கள் ” ‘முன் பதிவு ஆரம்பம்.’ வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் “தமிழ்நாடு அறிவியல் மன்றம்” நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’ (5 நாட்கள்) நடைபெற உள்ளது. குழந்தைகள் பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் ‘தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்’ கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள : தோழர் ஆசிரியர் சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம் அலைபேசி எண் : 87785 43882 வாட்ஸ் அப் எண் : 99437 48175

செங்கோட்டை போராட்டம் வெற்றி

செங்கோட்டை போராட்டம் வெற்றி

தோழர்களே! வணக்கம். கடந்த 06-03-2018 சென்னையில் நாம் திட்டமிட்டபடி, இராமராஜ்ஜிய இரத யாத்திரையை 20-03-2018 அன்று செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம் பெருந்திரளோடு நடந்து முடிந்துள்ளது. நாம் எதிர்பாராத அரசியல் விளைவுகள் மூலம் பலப்படுத்தியுள்ளது. பத்து மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாக்கப்பட்டது. #செங்கோட்டை_போராட்டம்_வெற்றி மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் கே.எம்.சரீப் – த.ம.ஜ.க தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டை மறியலுக்கு வரும் வழியில் செங்கல்பட்டு, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என முன்னெச்சரிக்கை எனும் பேரில் மார்ச் 19, 20 கைது செய்யப்பட்டனர். முதல் நாள் இரவு முதல் தமிழ்நாடெங்கும் முன்னெச்சரிக்கைக்...

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

மார்ச் 20 காலை 8மணி தமிழக எல்லை செங்கோட்டை_புளியரை_சந்திப்பில் இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை புளியரை சந்திப்பு மார்ச் 20 காலை 8 மணி இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் வை.கோ – ம.தி.மு.க தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் சீமான் – நாம் தமிழர் தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் எஸ்.எஸ்.ஆரூண்ரசீது – ம.ஜ.கட்சி தோழர் சரீப் – த.ம.ஜ.க தோழர் பாளை ரஃபீக் – ம.ம.மு.கழகம் தோழர் பாலன் – த.தே.ம.முன்னணி தோழர் அதியமான் – ஆ.த.பேரவை தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் தோழர் ஜக்கையன் – ஆ.த.கட்சி தோழர் பொழிலன் – த.ம.மு தோழர் வெண்மணி – ஆ.த.கட்சி தோழர் தமிழ்நேயன் –...

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு !

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு !

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ! நேற்று 17.3.2018. மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தின் கொள்கை வீரர் தோழர் ஃ பாரூக் அவர்கட்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றிய சான்றோர்கள். மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய தலைவர். மானமிகு ஐயா. எப்.காந்தராசு. மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவர். எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி. மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் மாநில தலைவர். மானமிகு தோழர். அன்பு இதயன். மருத்துவர். ஐயா. பாரி சுந்தரம். தோழர். ரபீக். மருத்துவர். விஜயப்பிரியா. மானமிகு தோழர். மக்கள் பிரதிநிதி சரவணன். மானமிகு தோழர். காஞ்சி அசோக். மலேசிய மேனாள் காவல்துறை துணை ஆய்வாளர். மானமிகு ஐயா. மதியழகன். மற்றும், தோழர்கள் .   படங்களுக்கு https://www.facebook.com/dvk12/posts/2096859697264586

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் சென்னை 06032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் சென்னை 06032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள் 20 அன்று இராஜபாளையம் வழியாக மதுரை வரும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – (சென்னை_06_03_2018) முடிவுகள். 1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது 2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல்! தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது. 3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது 4. காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது 5. தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் எனத் தீர்மானிக்கப்பட்டது. கூட்ட ஒருங்கிணைப்பு – தலைமை தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி பங்கேற்றோர்: தோழர் கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர்...

‘சுயமரியாதை திருமணம்’

‘சுயமரியாதை திருமணம்’

‘சுயமரியாதை திருமணம்’ திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 26.02.2018 பகல் 12 மணிக்கு சென்னையை சார்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நிவேதா ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தாலி மறுத்து சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தோழர்.தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), தோழர்.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர், தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்), தோழர்.இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தோழர்கள், இணையர்களின் நட்புறவுகள் வந்திருந்து வாழ்த்துகளை கூறினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார். நிமிர்வோம் ஏப்ரல் மற்றும் மே மாத புத்தகங்களை பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் “திராவிடம் தமிழ்தேசியம்” என்ற தலைப்பில் விரிவான ஒரு விளக்கத்தையும், ஆய்வுகளையும் தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  முக்கிய அறிவிப்பு

 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

  டிசம்பர் (2017) மாதத்தோடு சந்தா முடிவடைந்த வாசகர்களுக்குப் பிப்ரவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவைப் புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200   ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  வங்கிக் கணக்கு கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை, ‘கரண்ட்’ அக்கவுண்ட். எண் : 1257115000002041  – கைளஉ மஎடெ0001257 ஆண்டுக்கட்டணம்  ரூ.200 தொடர்புக்கு: ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,  திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. &9841489896   பெரியார் முழக்கம் 02022018 இதழ்

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

கோபி இளங்கோவன்           –                 ரூ.1,00,000/- சென்னை கு. அன்பு தனசேகர்        –                 ரூ.1,00,000/- மேட்டூர் மார்டின்     –                 ரூ.50,000/- மேட்டூர் சம்பத்           –                 ரூ.50,000/- மயிலாடுதுறை இளையராசா      –                 ரூ.20,000/- மயிலாடுதுறை மகேஷ்    –                 ரூ.10,000/- சேலம் மேச்சேரி சூரி (எஸ். எஸ். சில்க்ஸ்)              –                 ரூ.10,000/- சூரிய குமார் (கொளத்தூர்)                 –                 ரூ.10,000/- வேணுகோபால்        –                 ரூ.10,000/- காவை சசி      –                 ரூ.10,000/- நல்லதம்பி மெடிக்கல்ஸ்                   –                 ரூ.10,000/- கோவிந்தராஜ்             –                 ரூ.5,000/- காவை இளவரசன்                   –                 ரூ.5,000/- விஜி    –                 ரூ.5,000/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வளர்ச்சி நிதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர், திருவரங்கம்டாக்டர்...

ஆண்டாள் ஆய்வுக்குரியவளே – கருத்தரங்கம் 03022018

திராவிடர்_விடுதலைக்_கழகம் நடத்தும் “ஆண்டாள் ஆய்வுக்குறியவளே” கருத்தரங்கம். இடம் : பெரியார் படிப்பகம் ( செக்போஸ்ட், கொளத்தூர்) நாள்: 03022018 மாலை 6 மணி ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா ? காமக் காவியமா ? கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமனியில்’ (08.01.2018) அன்று வெளிவந்தது. யார் -அவர் எத்தகையவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார். ” Andal was herself a devadasi who lived and died in srirangam temple” ஆண்டாள் என்பவர் ஒரு தேவதாசியா ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள் . இதனைச் சொல்பவர் வைரமுத்துவல்ல அமெரிக்காவின் இண்டியான பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சுபாஸ் சந்திர மாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட “Indian movement some aspects of dissent protest and reform” என்ற நூலில் இது காணப்படிகிறது என வைரமுத்து ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு அவர் மீது...

சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்

மாணவர்களிடையே விழிப்புணர்வு இயக்கம் சமூக நீதி மறுக்கப்பட்டு, கல்வி வேலை வாய்ப்புகளை இழந்து, இருண்ட எதிர்காலம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, அவர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தயார் செய்யும் பரப்புரை இயக்கங்களைத் தொடங்க சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவு செய்தது. கல்லூரிகள் மாணவர் விடுதிகளில் இந்த ஆபத்துகளை ஆதாரங்களோடு விளக்கும் வெளியீடு, துண்டறிக்கைகளை தயார் செய்து, மாணவர்களிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இந்த செயல் திட்டத்துக்கு கழகப் பொறுப் பாளர்கள் முழுமையாக அனைத்து உதவிகளை யும் வழங்குவது எனவும் தலைமைக்குழு முடிவு செய்தது. 29122017 வெள்ளியன்று, சேலம் விஜய ராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப் பட்டத் தீர்மானங்கள். சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர் காலத்தையே...

திவிக செயலவை தீர்மானம் சேலம் 29122017

29122017 வெள்ளியன்று, சேலம் விஜயராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள் தீர்மானம் 1 சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியா சராசரியைவிட அதிகமாகிவிட்டது என்றும், வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படாததே காரணம் என்றும் கூறியுள்ளது இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுப் பணி நியமனங்களுக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலத்தினரும், நேபாளம், பூட்டான் நாட்டவரும், வெளிநாடுகள் பலவற்றிலிருந்து நிரந்தரமாக குடியமரும் நோக்குடன் இந்தியா வந்துள்ளோரும் – தமிழ்மொழி தெரியாதோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பிற மாநிலத்தவர்களுக்கு பணி...

தோழர் ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு ! கோவை 27122017

தோழர் ஆ.ராசா அவர்களுக்கு வரவேற்பு ! இன்று 27.12.2017 காலை கோவை வந்த தோழர் ஆ.ராசா அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி,த.பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து….டிசம்பர் 2017

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “டிசம்பர் 2017” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 📝 திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்க கூடாது…. கவிக்கொண்டல் “மா.செங்குட்டுவன்” 🗿 கற்பிதங்களை கட்டுடைத்த “அவ்வை” 📚 பெரியார் எதிர்த்த “ஆண்மை”யும்” “கேட்டர்” பில்லர் நாயகியும்… 📑 பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு… 📃 “வருணமும் – சாதியும்”… இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- தொடர்புக்கு : 7299230363 (தோழர்.இரா.உமாபதி)

கழகம் எடுத்த பெரியார் நினைவு நாள்

பேராவூரணி : பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமையில் ஒன்றியப் பொறுப்பாளர் சீனி. கண்ணன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச்  செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மெய்ச்சுடர் நா.வெங் கடேசன், த.ம.பு.க. இரா மதியழகன், ஆயில் மதியழகன், தி.வி.க நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். குமரி : பெரியாரின் 44ஆவது, நினைவு நாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.  நீதிஅரசர் (பெ.தொ.க தலைவர்)  தலைமை...

தந்தை பெரியார் 44வது நினைவு நாள் சென்னை 24122017

தந்தை பெரியாரின் 44வது நினைவு நாளான இன்று 24.12.2017 சென்னை சிம்சன் பெரியார் பாலம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன்அவர்கள் தலைமையில் சென்னை மாவட்ட திவிக தோழர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். உடன் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன், தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், செயலாளர் தோழர் உமாபதி, வடசென்னை மாவட்ட தலைவர் யேசுகுமார், செயலாளர் செந்தில் FDL மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராய் உறுதியேற்றனர் பின்னர் தோழர்கள் 10.00 மணிக்கு தியாகராய நகரிலும், 10:30 மணிக்கு ஆலந்தூர், 11மணிக்கு இராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம்.

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

நமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்! டிசம்பர் 16, ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு.

சென்னையில் ஜாதி ஒழிப்புக்காக பெண்கள் அறைகூவல் விடுத்த அந்த எழுச்சி நிகழ்வுகள், தோழர்களின் உள்ளங்களில் இப்போதும் பசுமையாய் பதிந்து நிற்கிறது. அடுத்து, ஈரோட்டில் கூடுகிறோம்! மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள், பெண்களின் சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் சவால் விடும் ஒடுக்கு முறைகள், மதம் கட்டமைத்த கற்பிதங்கள் – – இவை அனைத்துக்கும் எதிராக விழிப்புணர்வு களம் நோக்கி பெண்களை அணி திரட்டும் மாநாடு இது. மாநாட்டுப் பணிகளில் நிதி வசூலில் பெண் தோழர்கள் முழு வீச்சில் களமிறங்கி செயல்படுகின்றனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடக்க விழாவை எழுச்சியுடன் நடத்திய அதே ஈரோட்டில்… மீண்டும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் ஒன்று கூட இருக்கிறார்கள். கொள்கை உறவுகளின் ஒன்று கூடுதலிலும் சந்திப்பிலும் நமக்கு நாமே நம் உணர்வுகளை கூர் தீட்டிக் கொள்கிறோம். மத விழாக்களும் மூடநம்பிக்கை சடங்குகளையும் முற்றாகப் புறந்தள்ளி, புதிய சமூகத்துக்கான பாதை அமைக்க களத்தில் நிற்கும் பெரியாரியலாளர்களுக்கு இந்த மாநாடுகளும்...

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் கழக தலைவர் உரை திருப்பூர் 06122017

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் கழக தலைவர் உரை திருப்பூர் 06122017

திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் புரட்சியாளரின் சிலைக்கு 06.12.2017, புதன் கிழமை காலை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆற்றிய உரை. உரை பார்க்க    

TNPSC முழக்கங்கள்

TNPSC முழக்கங்கள்

தமிழக அரசே.! தமிழக அரசே.! தாரை வார்க்காதே ! தாரைவார்க்காதே ! தமிழக வேலை வாய்ப்புகளை வெளி மாநில இளைஞர்களுக்கு தாரை வார்க்காதே ! தாரைவார்க்காதே !   உறுதி செய் .! உறுதி செய் .! அரசு வேலை வாய்ப்புகளை மண்ணின் மைந்தர்க்கு உறுதி செய்!   ரத்து செய் .! ரத்து செய் .! வெளிமாநிலத்தோர்க்கும் வாய்ப்பளிக்கும் தேர்வாணைய விதி திருத்தத்தை தமிழக அரசே ! ரத்து செய் .!   பறிக்காதே !பறிக்காதே ! தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தமிழக அரசே பறிக்காதே !   தேர்தல் அரசியல் கட்சிகளே ! வீதிக்கு வந்து போராடுங்கள் ! தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு வீதியில் இறங்கிப் போராடுங்கள் !   தமிழக அரசே .! தமிழக அரசே .! மண்ணின் மைந்தர்க்கு வேலைவழங்க மராட்டிய, கர்நாடக மாநிலம் போல் சட்டம் இயற்று ! சட்டம் இயற்று !   தமிழக அரசே ! தமிழக அரசே ! வேலை தராதே ! வேலை தராதே ! வெளிமாநில இளைஞர்களுக்கு தமிழக அரசே வேலை வழங்காதே !   தமிழக அரசே .! தமிழக அரசே ! தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கு...

நீடாமங்கலம் – நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் 25112017

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் *ரிவோல்ட்* நடத்தும் *நீடாமங்கலம்*நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது பெரியாரிய எழுத்தாளர் தோழர் பசு கவுதமன் அவர்கள் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர் வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி அவர்கள் இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார் நீடாமங்கலம் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் அவர்கள் தன்னுரையில் திவிக தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும் தான்...

சட்ட எரிப்பு மாவீரர்கள் நினைவை போற்றும் பொதுக்கூட்டம் சூலூர் 26112017

கோவை மாவட்டம் சூலூரில் 26112017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவை போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது. நிகழ்வு தோழர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ கே ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முதலில் மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியாக பறையிசை தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் அனைவரையும் சிந்தையும் கருத்தையும் ஈர்க்கும் வண்ணம் பாடினார்கள் சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்ட தலைவர் தோழர் முகில் ராசு, பொள்ளாச்சி தோழர் வெள்ளியங்கிரி, கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன், மந்திரமா தந்திரமா தோழர் மோகன், கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர் பின்னர் தோழர் கௌசல்யா சங்கர் அவர்கள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு...

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !” நாள் : 27.11.2017 திங்கட்கிழமை. நேரம் : மாலை 5.00 மணி. இடம் : தளபதி பன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர். சுடர் ஏற்றி வீரவணக்க உரை : பேராசிரியர் சரஸ்வதி, நாடாளுமன்ற உறுப்பினர்,நாடு கடந்த தமிழீழ அரசு. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்திட அணி திரள்வோம் ! நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு, கொளத்தூர்,சேலம் மாவட்டம். தொடர்புக்கு : 9443519234, 9443565503, 9003677717, 9842445964.

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

இதயத்தை பிசையும் மாணவர் பிரகாஷின் மரண வாக்குமூலம் !

மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், கடந்த 25.10.2017 அன்று மாலை தனது முகநூல் பதிவில் “ இனி கல்லூரிக்கு என்னால் வரமுடியாது. என்னை மிகவும் இழிவு படுத்துகிறார்கள். எனது படிப்பையும் முடிக்க விடமாட்டார்கள். நான் சாகபோகிறேன்” என கடிதம் எழுதிவிட்டு, தனது மரணவாக்குமூலத்தை வீடியோவாக தனது மொபைலில் பதிவிட்டிருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் சிராமிக் துறையில் (பீங்கான்) இறுதியாண்டு படித்து வந்த மாணவர் பிரகாஷ் கடந்த 25-10-2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் – சுயமாக வரைந்த ஓவியம். வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், தாமரை தம்பதியனருக்கு இரண்டு மகன்கள். பார்த்திபன் அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிகிறார். அவரது மூத்த மகன் பிரதாப், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது இளையமகன் தான் பிரகாஷ். சிறு வயது முதலே கலைகளில்...

தோழர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம் மதுரை 10112017

தோழர் மதுக்கூர் மைதீன் நினைவேந்தல் கூட்டம். நாளை மதுரையில்.. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்துகிறார்கள். நாள் : 10.11.2017 வெள்ளிக்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி. இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை.

தலைமை செயலக முற்றுகைப் போராட்டம் சென்னை 30102017

#செய்துவிட்டது_கேரளம் #அறிவித்து_விட்டது_கர்நாடகம் #தமிழகம்_சோம்பிக்_கிடப்பதா? ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் எதையுமே சமூகநீதியால் அனைவருக்கும் உரித்தாக்குவதே ஜாதிய கட்டமைப்பை தகர்க்கும் எளிய வழி. அந்தவகையில் ஆகம விதி என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாகவும், மற்ற ஜாதியினருக்கு மறுக்கப்பட்டும் வருகிற சைவ, வைணவ ஆலயங்களுக்கான அர்ச்சகர் பணியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்ற பெரியாரின் இறுதிக் கனவிற்கு உயிர் கொடுத்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி. விரைவில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்த தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறது? ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம் என்று பெருமைகொள்ளும் இந்து மதத்தில் வேறு எங்கும் இல்லாத ஆகமவிதிகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி வந்தது? தமிழ்நாட்டில் உள்ள 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆலயங்களில் முறையாக ஆகம விதிகள் பின்பற்றப்படுவதே இல்லை. ஆகமத்தை பின்பற்றாத...

தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் ! ஈரோடு 18102017

ஆதித்தமிழர் பேரவை சார்பில்…. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை இயக்கத்தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். தலைமை : தோழர் அதியமான், நிறுவனத்தலைவர்,ஆதித்தமிழர் பேரவை. நாள் : 18.10.2017 புதன்கிழமை. நேரம் : மாலை 4.00 மணி. இடம் : மாநகராட்சி மண்டபம், ஈரோடு பேருந்து நிலையம் அருகில்.

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக  தோழர்களை சந்திக்கிறார்கள் !

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்டபயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’,‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள். சுற்றுப் பயண விவரம் : 26.10.2017 – காலை 10.00 – ஈரோடு வடக்கு – ஈரோடு மாலை 5.00 – ஈரோடு தெற்கு – கோபி 27.10.2017 – காலை 10.00 – சேலம் மேற்கு – மேட்டூர். மாலை 5.00 – கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி. 28.10.2017 – காலை 10.00 – தருமபுரி – தருமபுரி. மாலை 5.00 – சேலம் கிழக்கு – சேலம். 29.10.2017 – காலை 10.00 -நாமக்கல்-திருச்செங்கோடு. மாலை 5.00 – திருப்பூர்...

தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழக்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை திருச்சி 24092017

24-9-2017, ஞாயிறு, காலை 10-00 மணியளவில் திருச்சி, செய்ண்ட் ஜோசப் கல்லூரி நூலக அரங்கில், சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழ்க்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை நடைபெற்றது. இதனை தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளில் முனைப்பாகத் தலையிட்டு உரிய நீதி பெறுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், ஈடுசெய்நீதி ஆகியவற்றுக்காகவும் ஈடு இணையற்றப் பணியாற்றிவரும் எவிடன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. எவிடன்ஸ் முத்து வரவேற்புரையைத் தொடர்ந்து, எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பொது விசாரணையின் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 தலித்துகள் கொலையானதையும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தலித் செயல்பாட்டாளர்கள் 25 பேர் கொலையுண்டுள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் குறித்தும்,  அவற்றைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம், மாதாந்திர குடும்ப உதவிநிதி பெற்றுள்ளது குறித்தும், பாதிக்கப் பட்ட தரப்பினர்...

மக்கள் பொது விசாரணை – தமிழகமும் ஜாதிய படுகொலைகளும் – எவிடென்ஸ் 24092017 திருச்சி

நேற்று எவிடென்ஸ் அமைப்பு திருச்சியில் தமிழகமும் சாதிய படுகொலைகளும் குறித்த பொது விசாரணை நடத்தியது.இந்த விசாரணைக்கு என்று 600 பக்கங்கள் கொண்ட சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.வழி நடத்திய 8 நடக்குவர்களுக்கும் அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 வழக்குகளில் 20 வழக்குகள் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.அம்பேத்கர் படம் போட்ட கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.கபடி போட்டியில் கால் பட்டதனால் ஒரு தலித் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை நேரடியாக பார்த்த வெட்டியான் வேலை செய்ய கூடிய ஒரு தொழிலாளி தட்டி கேட்டதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிவிட்டு அன்று இரவே விமானம் பிடித்து வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடி இருக்கிறான் ஒரு சாதி வெறியன்.நடுவர்களின் ஒருவராக இருந்த அண்ணன் பவா செல்லத்துரை அழுது கொண்டே இருந்தார்.சவிதா...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                      அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி  தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்   விண்ணப்பங்கள் தரவிறக்க

மதவாத சக்திகளை முறியடிக்க சூளுரை பெரியார் பிறந்த நாள் எழுச்சி கம்பீரமாக எழுகிறார் பெரியார்

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாக்கள் முன் எப்போதும் இல்லாத உணர்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வழிந்தன. ராகுல் காந்தி, கருநாடக முதல்வர் சித்தராமய்யா, லாலு பிரசாத், தலைசிறந்த ஆய்வாளர் இராமச்சந்திர குகா என்று அனைத்து தரப்பினரும் பெரியாருக்கு வாழ்த்துக் கூறினர். பெரியார் வரலாற்றுத் தேவையாகி யிருக்கிறார். சமூகத்தில் பீடு நடை போடுகிறார். பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பெரியார் இயக்கங்களைத் தவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மே 17 உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் பெரியார்...

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு நாள் : 17.09.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு. இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 04 கண்டன உரை : #தோழர் விடுதலை க இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர் செந்தில் இளந்தமிழகம் தோழர் பிரவீன் மே 17 இயக்கம் தோழர் செல்வி மனிதி கோழையே உன்னிடம் தோட்டாக்கள்… என்னிடம் அழியா வார்த்தைகள்… எதற்கும் அஞ்ச மாட்டேன்…நான் #கவுரி_லங்கேஷ் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

விருதுநகரில் சுயமரியாதை மாநாடு ! 23092017

விருதுநகரில் சுயமரியாதை மாநாடு ! திராவிடர் விடுதலைக் கழகம் விருதுநகர் மாவட்டம் சார்பில், நாள் :23.09.2017 சனிக்கிழமை . நேரம் : மாலை 4.00 மணி  இடம் : விஸ்வேஸ்வரா அரங்கம்,135 புல்லக்கோட்டை, சாலை உழவர் சந்தை அருகில்,விருதுநகர். தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். சிறப்புரை : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தமிழச்சி தங்கப்பாண்டியன் மாநில துணை அமைப்பாளர் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப்பேரவை. தமிழ்ச் செல்வன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம். வரலாற்றுச்சுவடுகள் திறப்பு விழா ! நாள் :23.09.2017 சனிக்கிழமை . நேரம் : மாலை 3.00 மணி இடம் : பேரறிஞர் அண்ணா சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில்,விருதுநகர்.

தமிழகமும் சாதிய படுகொலைகளும்” மக்கள் பொதுவிசாரணை !

”தமிழகமும் சாதிய படுகொலைகளும்” மக்கள் பொதுவிசாரணை ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில்.. நாள் : 24.09.2017 காலை 9.30 மணி. இடம் : செயின்ட் ஜோசப் கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம் எதிரில்,திருச்சி. கழகத்தலைவர் அவர்கள் விசாரணையின் நடுவராக பங்கேற்கிறார்.பல் வேறு தோழமை அமைப்பின் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்  

ஈரோடு பெரியார் சிலை முன் கழக தோழர்கள் நீட் தேர்விற்கு எதிரான உறுதிமொழி 03092017

திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட தோழர்கள் 03092017 மாலை ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையத்தில் கல்வி உரிமை போராளி டாக்டர் அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் பன்னீர் செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து 60க்கும் மேற்பட்ட தோழர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பெரியாரிய வழியில் போராட்டம் நடைபெறும், ஓயமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர். நீட் தேர்வுக்கு எதிரான உறுதிமொழியை தோழர் கனல்மதி படிக்க அனைத்து தோழர்களும் உடன் சேர்ந்து உறுதியேற்றனர். தேர்வு உள்ளிட்ட தகுதி, திறமை என்று சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறிக்கும் எல்லாவித நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிப்போம், தமிழக மக்களின் கல்வி நலம் காப்போம் மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள்...

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை.

மாணவி அனிதாவிற்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று 02.09. 2017 மத்திய பா.ஜ.க.வின் நீட் தேர்வினால் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அரியலூர் அனிதாவின் இல்லத்திற்கு சென்று உடலுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். அவ்வமயம் கழகத் தோழர்கள்,நிர்வாகிகள் உடனிருந்தனர்.