தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதல் – தோழர் கொளத்தூர் மணி அவர்கள் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் திட்டவட்டம்

”தி.மு.க வின் மீது வைக்கப்படும் எந்த ஒரு விமர்சனமும் கூட அது தமிழ் மக்களுக்கே பாதிப்பாக வந்துவிடுமோ என்கிற அச்சம் எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.”

”தி.மு.க.வை கட்சியாக பார்க்காமல் தமிழர் நலன்,தமிழ்நாட்டு நலன் என இணைத்து பார்க்கிறோம்.”

”அரசியலைப்பொறுத்த வரை சூழலைப்பார்த்துதான் முடிவெடுக்க முடியும்.”

அழகிரியின் திடீர் பேட்டி குறித்து ”கழகத்தலைவர் கொளத்தூர் மணி” அவர்கள் நேற்று 13.08.2018 அன்று NEWS 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ‘காலத்தின் குரல்’ நிகழ்சியில் அளித்த பேட்டியின் சாரம் :

”அழகிரியின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது.அவர் திமுகவில் குழப்பத்தை எற்படுத்த முயற்சிக்கிறார்.பொது வெளியில் இப்படி பேசியதை ஏற்க முடியாது.இதனை கண்டிகிறேன்.இவரால் எந்த பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது எனினும் இதைக்கூட அனுமதிக்க கூடாத ஒன்று இப்படி அவர் நடந்திருக்க கூடாது.

இதனை கட்சி விவகாரமாகவோ,குடும்ப சிக்கலாகவோ பார்க்கவில்லை.இது ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர் காலத்தின் மீது வைக்கப்படுகிற ஒரு தாக்குதலைப்போலத்தான் உணர்கிறேன்.

பா.ஜ.க. தமிழகத்திற்கு நுழைய பெரும் முயற்சி எடுத்துவரும் இந்த வேளையில் அதை சரியாக எதிர்கொள்வதற்கும் அதை எதிர்த்து நின்று முகம் கொடுப்பதற்கும் சரியான இயக்கமாக கருதப்படுகிற தி.மு.க.வில் இப்படி ஒரு குழப்பம் விளைவிக்கிற முயற்சிக்கு வெறும் அழகிரி மட்டும்தான் காரணாமா?அதற்க்குப்பின்னால் யாராவது தூண்டுதல் காரணமாக இருக்கிறார்களா என்கிற பல்வேறு அய்யங்கள் ஏற்படுகிறது.

கலைஞர் அவர்களின் மறைவிற்கு பின் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் திராவிடர் இயக்கத்தின் மீது,தி.மு.க.வின் மீது மக்களுக்கு ஈர்ப்பை உண்டாக்கும் வகையில்தான் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் வேறூன்றாமல் தடுக்கக்கூடிய கட்சியாக திமுக மட்டுமே இருக்க முடியும் என்று பொதுவாக பலரும் கருதுகிற இந்த வேளையில் அழகிரி இப்படி பேசுவதை பார்க்கிறோம்.”

முழு காணொளி :

You may also like...