“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

“நிமர்வோம்” வாசகர் வட்ட சந்திப்பு – சென்னை.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 04.03.2018 மாலை 6 மணிக்கு “நிமிர்வோம்” வாசகர் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டம் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர்.பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்தார்.

நிமிர்வோம் ஏப்ரல் மற்றும் மே மாத புத்தகங்களை பற்றிய தங்களுடைய கருத்துகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், எட்வின் பிரபாகரன், ராஜீ, சங்கீதா, ரவிபாரதி ஆகியோர் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் “திராவிடம் தமிழ்தேசியம்” என்ற தலைப்பில் விரிவான ஒரு விளக்கத்தையும், ஆய்வுகளையும் தோழர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

Image may contain: one or more people and indoor

You may also like...