‘சுயமரியாதை திருமணம்’
‘சுயமரியாதை திருமணம்’
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 26.02.2018 பகல் 12 மணிக்கு சென்னையை சார்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் நிவேதா ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தாலி மறுத்து சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தோழர்.தபசி குமரன்(தலைமை நிலையச் செயலாளர்), தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), தோழர்.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர், தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்), தோழர்.இரா.செந்தில்குமார் (வடசென்னை மாவட்டச் செயலாளர்), ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தோழர்கள், இணையர்களின் நட்புறவுகள் வந்திருந்து வாழ்த்துகளை கூறினர்.
திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363