சட்ட எரிப்பு மாவீரர்கள் நினைவை போற்றும் பொதுக்கூட்டம் சூலூர் 26112017

கோவை மாவட்டம் சூலூரில் 26112017 அன்று ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவை போற்றும் வகையில் மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியது.
நிகழ்வு தோழர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில், சட்ட எரிப்பு போராளி ஆனைமலை ஏ கே ஆறுமுகம் முன்னிலையில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
முதலில் மேட்டூர் டிகேஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியாக பறையிசை தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் அனைவரையும் சிந்தையும் கருத்தையும் ஈர்க்கும் வண்ணம் பாடினார்கள்
சட்ட எரிப்பு நாள் வீரர்களை நினைவு கூர்ந்து திருப்பூர் மாவட்ட தலைவர் தோழர் முகில் ராசு, பொள்ளாச்சி தோழர் வெள்ளியங்கிரி, கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன், மந்திரமா தந்திரமா தோழர் மோகன், கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்
பின்னர் தோழர் கௌசல்யா சங்கர் அவர்கள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்

நிகழ்ச்சியின் இறுதியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மிக நீண்ட உரையினை ஆற்றினார். சற்றேறக்குறைய 1.30 நிமிடங்கள் நீடித்த உரையில் தமிழக நீதிக்கட்சி ஆட்சியின் தொடக்கம், சமூக நீதி வரலாறு,  அரசியல் சட்டத்தின் உருவாக்கம், அதன் மீதான புரட்சியாளர் அம்பேத்கரின் பங்களிப்பு, பார்ப்பனர்களின் ஆதிக்கம், அரசியல் சட்டம் தமிழ்மக்களை இழிவாக குறிக்கும் பகுதிகள், அதை எரிக்க வேண்டிய காரணங்கள் ஆகியவற்றை விளக்கினார்

சட்ட எரிப்பு போராட்டம் நவ 3 தேதி தந்தை பெரியார் அவர்கள் அறிவித்தவுடன் அதை தடுக்கும் நோக்கில் எரிப்பவர்களுக்கு தண்டனை தர புதிய சட்டப்பிரிவை ஒரு வாரத்தில் உருவாக்கியபின்னும் ஜாதி ஒழிப்பு வீரர்களின் உறுதி, திண்மை காரணமாய் ஏறத்தாழ 10000 மேற்பட்டோர் கலந்துகொண்டு எரித்து கைதான வரலாறு, காவல்துறையாலும், உள்துறை மந்திரியாலும் அனைவரையும் கைது செய்ய முடியாத இயலாமை ஆகியவற்றிற்கிடையில் 4000 மேற்பட்டோர் கைதாகி 18 நாட்கள் முதல் 2 வருடம் வரை சிறையேகிய வரலாற்றினை எழுச்சியோடு எடுத்துக்கூறினார்.

கூட்டம் நடந்து கொண்டு இருக்கும்போது பெய்த மழையில் கூட சிறு சலசலப்பில்லாமல் பொதுமக்களும் தோழர்களும் அமர்ந்து உரையை கேட்டு வீரர்களின் தியாகத்தை போற்றினர்
இறுதியில் தோழர் பாபு நன்றியுரை ஆற்றினார்

image1

You may also like...