அடக்கு முறையில் திணிக்கப்படும் அணுமின் நிலையம்
எதிர்பார்த்தது நடந்து விட்டது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை அப்பகுதி மக்கள் எதிர்ப்பை யும் மீறி துப்பாக்கி முனையில் இயங்கச் செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவெடுத் துள்ளது. ஒரு அணுஉலை அமைப்பதற்கு மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படையான ஆய்வுகளைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு ஒப்பந்தத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மின்சாரம் தேவைக்காக இந்தியப் பார்ப்பன பனியா ஆட்சி, மக்கள் மீது திணிப்பதற்கு இப்போது மாநில ஆட்சியும் துணை போகிறது. அணு உலை தேவையா இல்லையா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; ஒரு அணு உலை அமையப் போகும் இடத்தின் நிலவியல் என்பது மிக முக்கியமாக ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். அதற்காக அணுசக்தித் துறை வி.ஆர். வென்குலேர்ச்சர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு 1972 ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. நிலவியல் அமைப்பு, அதன் நிலைத்த தன்மை (ழுநடிடடிபiஉயட ளவயbடைவைல) கட்டாயம் ஆராயப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்திய பல்வேறு அம்சங்களில் முக்கியமானதாகும்....