மோடி அரசு கொல்ல சதி : தொகாடியா அலறல்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகிலஇந்தியத் தலைவர் பிரவீன் பாய் தொகாடியா என்ற பார்ப்பனர் 15.1.2018 அன்று திடீரென மாயமானதாக கூறப்பட்டது. குஜராத் போலீசார்தான் அவரை கைது செய்திருப்பதாக விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.இந்நிலையில் தொகாடியா, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக, சுயநினைவில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே பிரவீன் தொகாடியா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது குரலை அடக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் தொகாடியா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீசார் தன்னை மிரட்டியதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்கவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தப்பித்து வந்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.  “அவர்கள் (மோடி அரசு) என்னை என் கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தனது நண்பர்களிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது” என்றார்.

பெரியார் முழக்கம் 25012018 இதழ்

You may also like...