குமரி மாவட்டம் – பள்ளியாடி – தமிழ் மதி இல்லவிழா
குமரி மாவட்ட கழகச் செயலாளர் தமிழ் மதி-பிரேம லதா இணையர் மகன் தமிழ் நவிலன் முதல் பிறந்த நாள் விழா 10.12.2017, ஞாயிற்றுக் கிழமை மதியம் 12.00 மணிக்கு பள்ளியாடி இருதய அரங்கில் கொண் டாடப்பட்டது. விழாவில் தமிழ் மதியின் உறவினர்கள், கழகத் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள், சமூக ஆர்வலர்கள் பெருவாரியாகக் கலந்துக் கொண்டனர். தமிழ் மதி பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்றும், தமிழ்ப் பெயர் ஏன் சூட்டினோம் என்றும் கூறி வரவேற்புரையாற்றினார். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் பேபி செபக்குமார் மந்திரமல்ல!தந்திரமே! எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பின்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் நவிலன் பிறந்த நாளில் பெற்றோருக்கு அறிவுரையாக சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம் மூடநம்பிக்கைகள் குறித்தும், பிள்ளைகளை சமூகத்துடன் இணைந்து வாழக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் கூறி தமிழ் நவிலன் சமூகச் சிந்தனையுடன் வாழ, வளர, வெல்ல வேண்டுமென வாழ்த்துரையாற்றினார். நிகழ்வில் தமிழ் நவிலன் கேக் வெட்டி உறவுகளுக்கு ஊட்ட விழா இனிதே முடிவுற்றது. பிறந்த நாளை முன்னிட்டு அரசு நூலகத்துக்கு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 5 ஆண்டுச் சந்தாவாக ரூ. 1000 வழங்கினார்கள்.
பெரியார் முழக்கம் 11012018 இதழ்