‘திராவிடத்தால் எழுந்தோம்’ குமரியில் விளக்கக்கூட்டம்
குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 09-12-2017, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குலசேகரம் அரச மூடு சந்திப்பில் நடைப் பெற்ற “திராவிடத்தால் எழுந்தோம்” விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா, குமரி மாவட்ட பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர் நீதி அரசர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கழகத் தோழர்கள் தமிழ் அரசன், தமிழ் மதி, மஞ்சு குமார், ஜான் மதி, சூசையப்பா, இரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்ணு வரவேற் புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்: கேரளாபுரம் முருகன், மேசியா, சத்திய தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அறிவுக்களஞ்சியம் நிறுவனர் பேபி செபக்குமார், ‘மந்திரமல்ல! தந்திரமே!’ எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.
கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
1913-ல்,கோயிலுக்கு நன்கொடையாக ரூ 10,000 கொடுக்குமளவிற்கு பணக்காரரா யிருந்தாலும் சர். பிட்டி. தியாகராயர் அவமானப்படுத்தப்பட்டதும், எவ்வளவுப் படித்திருந்தாலும் பொருளாதார மேதையானாலும் இந்தியா-பாகிஸ்தான் கணக்கை சரி செய்தவருமான சர். ஆர்.கே. சண்முகம் போன்றவர்களை பார்ப்பனர்கள் ஏளனம் செய்தார்கள். அந்த நிலையிலிருந்து இந்த சமூக மக்கள் மானமும் அறிவும் பெற திராவிடர் இயக்கம் ஆற்றியப் பணியினை பட்டியலிட்டு, தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து விரிவாக உரை யாற்றினார். நிறைவாக அனீஸ் நன்றியுரையுடன் முடிவுற்றது.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத் தலைவர் பால் வண்ணன், மார்க்சிய லாளர் போஸ், வைகுண்ட ராமன், இராஜேஸ் குமார், பொன். இராசேந்திரன், அருள் ராஜ், ஆர்மல், சிபு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பெரியார் முழக்கம் 11012018 இதழ்