இராமன் அயோத்தியில் பிறந்தானா? ம.கி. எட்வின் பிரபாகரன்
அயோத்தியில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அயோத்தியில், அவுரங்கசிப் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் இராமனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சங் பரிவார் அமைப்பினர் முயன்று வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதல்களிலும், கலவரங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இத்தகைய சூழலில், அனைத்து கலவரங்களுக்கும் அடிப்படையான, “இராமன் அயோத்தியில் பிறந்தான்” என்ற நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. முதல் இராமாயணம் எது? இராமன் அயோத்தியில் பிறந்தான் என்ற நம்பிக்கைக்கு, கிமு 4 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணமே காரணம். எனவே இராமாயணங்களை ஆராய்வது அவசியமாகிறது. இராமாயணங்கள் மொத்தம் 48. இவற்றுள் புத்த இராமாயணங்கள் மூன்றும், ஜைன இராமாயணங்கள் மூன்றும் அடங்கும். முதலில் தோன்றிய இராமாயணம் வால்மீகி இராமாயணம் என்று தவறாக கருதுவோரே பெரும்பான்மை. ஆனால், முதல் இராமா யணத்துக்கு “தசரத ஜாதகம்” என்று பெயர். இது கிமு 500ஆம் ஆண்டைச் சேர்ந்த புத்தமத இராமாயணமாகும்....
