வினாக்கள்… விடைகள்…!
எந்த அரசாலும் எல்லாப் பிரச் சினைகளையும் தீர்த்து வைத்திட முடியாது. அதை இந்தப் புதிய அரசும் விரைவில் உணரத் தான் போகிறது. – ப. சிதம்பரம் அரசு ரகசியங்களையெல்லாம் இப்படி அம்பலப்படுத்தினா அது தேசத் துரோகமாயிடாதா சார்? அடக்கி வாசிங்க! காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அந்த அரசுடனேயே சேர்ந்து வெளியேறிட வேண்டும். – அமைச்சர் வெங்கய்யா நாயுடு நியாயமான பேச்சு. விருந்தினர் மாளிகை களை அடுத்து வரும் பயணிகளுக்கும் வழிவிட வேண்டும். ஏதோ விலைக்கு வாங்கின மாதிரி, குத்தகை எடுத்துக்க முடியாது! முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், அரசு வீட்டைக் காலி செய்து, வாடகை வீட்டில் குடி யேறினார். மாத வாடகை ரூ.16 இலட்சம். – செய்தி அடேங்கப்பா… இப்படி சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத ஏழைப் பங்காளர்கள் காங்கிரசில் அமைச் சர்களாக இருந்திருக் கிறார்கள் என்ற செய்தி புல்லரிக்குது, போங்க! கங்கையில் முழுக்குப் போட்டால், புற்று நோய் வரும் ஆபத்து....
