வினாக்கள்… விடைகள்…!

‘புனித’ நகரமான காசியை ‘நவீன நகரமாக்க’ ஜப்பான் நாட்டுடன், மோடி ஒப்பந்தம். – செய்தி
அப்படீங்களா… இப்பவாவது இந்தப் புரோகிதர்களையெல்லாம் ஒரு மேல் சட்டையை மாட்டச் சொல்லுங்க! நவீன நகரத்தில் சட்டை இல்லாம திரிஞ்சா, எப்படி?

தமிழக அரசியல் களத்தில் எங்களுக்கு எதிரிகளே இல்லாமல் போய் விட்டார்கள்.
– முதல்வர் ஜெயலலிதா
எப்போ, இப்படி சிந்திக்க ஆரம்பிச்சாங்களோ, இந்த சிந்தனையே இவங்களுக் கெல்லாம் மிகப் பெரிய எதிரியா வந்து நிக்கப் போவது உறுதி! வேற எதிரியே வேணாம்!

“இராமஜென்ம பூமி”யான அயோத்தியில் கங்கா பவன் கோயில் தலைமை நிர்வாகியான சாமியார் ஒருவரை கோயில் பார்ப்பன அர்ச்சகர் பாண்டேயும் அவரது சீடர்களும் வெட்டிக் கொலை செய்தார்கள்.- செய்தி
‘இராமராஜ்ய’த்தில் ‘சம்பூகன் வதை’ தொடங்கிடுத்து.

மு.க. ஸ்டாலின் முன் அனுமதி யின்றி, அவரது பெயரில் ‘விநாயகர் சதுர்த்தி’க்கு வாழ்த்துச் செய்தி வெளியிடப் பட்டுவிட்டது. – தி.மு.க. தலைமைக் கழகம்
இந்த மறுப்புக்காவது ஸ்டாலின் முன் அனுமதி கிடைத்துள்ளது என்று நம்பலாமா?

கோவா மாநிலத்துக்குள் நுழைய ‘சிறீராம்சேனை’க்கு மாநில முதல்வர் தடை. – செய்தி
எதுக்கும் எச்சரிக்கையா இருங்க… ஏதாவது பாலம் அமைச்சுகிட்டு ‘ராமன் சேனை’ நுழைஞ்சுடப் போவுது!

சமஸ்கிருத கீதையோடு ஜப்பானில் மொழி பெயர்க்கப் பட்ட கீதையையும் அந்நாட்டு பிரதமருக்கு பரிசாக வழங்கினார் மோடி. – செய்தி
ஜப்பான் நாட்டுக்குப் போனா அவுங்க தாய் மொழியை மதிப்பீங்க. ஆனால், எங்கள் மீது மட்டும் சமஸ்கிருதத்தை நேரடியா திணிப்பீங்களோ?

சென்னை புரசையிலுள்ள கங்காதரேசுவரர் கோயில் மூலவரான கடவுள் சட்டப்படி ஒரு தனி நபர். எனவே அவருக்கு சொந்தமான சொத்துகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க முடியாது. – அறநிலையத் துறை அதிகாரி
அப்போ, அந்த சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டால் “அந்த தனி” நபர் நேரில் வந்து புகார் கொடுத்தாத்தான் நடவடிக்கை எடுப்பீங்களா, சார்?

பெரியார் முழக்கம் 04092014 இதழ்

You may also like...

Leave a Reply