‘புலிப்பார்வை’ படவிழாவில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

‘லைக்கா’ நிறுவனம் தயாரிக் கும் ‘புலிப் பார்வை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மாண வர்கள் தாக்கப்பட்டதை திராவிடர் விடுதலைக் கழகம் கண்டிக்கிறது. சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம், தமிழ் நாட்டில் மிகப் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. பாலச்சந்திரனை விடுதலைப் புலியாகவே சித்தரித்தும், அவருக்கு புலிகள் சீருடை அணிவித் தும் இப்படத்தில் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன், நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்றனர். சத்யம் தியேட்டரில் நடந்த விழாவின்போது ஈழத் தமிழர்களுக்காக போராடி வரும் மாணவர் அமைப்பினர், விழாவில் இந்தப் படம் குறித்து தங்களுக்கு சில சந்தேகம் இருப்பதாகக் குரல் எழுப்பினர். ஈழத் தமிழர்களுக்கு எதிரான படம் என்று சந்தேகப்படுவதாகக் கூறினர். இதைத் தொடர்ந்து விழாவுக்கு வந்திருந்தவர்கள் மாணவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மாணவர்கள் மாறன், பிரபாகரன், செம்பியன், கணேசன், கவுதமன், பிரதீப் ஆகியோர் சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் முழக்கம் 21082014 இதழ்

You may also like...

Leave a Reply