சிங்களக் கூட்டாளி ‘லைக்கா’
ஈழத் தமிழர் முதலீட்டில் நடக்கும் ‘லைக்கா’ என்ற தொழில் நிறுவனம் இலங்கை அரசுடன் கைகோர்த்து தமிழர்களுக்கு குழிப் பறிக்கிறது. நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது வழியாக தமிழ்நாட்டில் தனது மூலதனத்தை முதலிடத் துடிக்கிறது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத் தீர்மானத்தையும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் நசுக்குவதற்கு கொல்லைப்புற வழியாக நுழையும் இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன?
முதலாவது: சிங்கள இனவெறி அரசு நடத்திய காமன் வெல்த் மாநாட்டுக்கு பல மில்லியன் ரூபாய்களை வழங்கியது. அதாவது உலகத் தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் அம்மாநாட்டை புறக் கணிக்கக் கோரி போராட்டங்கள், உண்ணா விரதங்கள் நடத்தி வந்த வேளையில் அதுவும் ஈழத் தழிழர்களாக இருந்துகொண்டு அம்மாநாட்டை பலப்படுத்த அதி உயர்ந்த “கோல் °பான்சர்” செய்துள்ளது “லைக்கா மொபைல்” நிறுவனம்.
இரண்டாவது: பிரித்தானியாவில் உள்ள சிங்கள அரசின் நிதி உதவியுடன் இயங்கும் புத்த பிக்குகள் நடத்தும் புத்த கோவில் சார்பில் நடைபெற்ற சிங்கள சுதத்திரதினத்திற்கு, அதாவது தமிழர்கள் தங்களுடைய கருப்பு நாளாகவும், பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்திய தினமாக கருதும் அந்த சிங்கள சுதந்திர தினத்திற்கு தனித்துவமான ஆதரவு வழங்கி பெரும் பணத்தை வழங்கியுள்ளது “ஈழத் தமிழர் நிறுவனம்” என இப்போது கூறும் சிங்கள கைக்கூலியான “லைக்கா நிறுவனம்”.
மூன்றாவது: பிரித்தானியாவில் சென்ற ஆண்டு நடைபெற்ற சிங்கள அணிக்கும் இந்திய அணிக்குமான விளையாட்டுப் போட்டியில் சிங்கள அணிக்கு எதிராக தமிழ் இளையோர்கள் சிறு குழுவாக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு வந்த சிங்கள அணியின் ஆதரவாளர்கள் தமிழர்களை அடித்து பலத்த காயங்களுக்கு உட்படுத்தினார்கள், சிறு பெண்கள் என்றும் பாராமல் அவர்களையும் எட்டி உதைத்து விரட்டினார்கள். இது எதுவும் அறியாத வர்கள் போல் அடுத்த ஆண்டு அதே மைதானத்தில் நடந்த சிங்களர் அணிக்கும் பிரித்தானிய அணிக்கும் நடைபெற்ற போட்டிக்கு டிக்கட்டுகளை விற்றது மட்டுமல்லாது சிறப்பு சலுகைகளை தனது நிறு வனத்தின் சார்பாக தனது இணையத்திலேயே அறி வித்தது “லைக்கா மொபைல் நிறுவனம்”. லைக்கா டிக்கட் விற்ற அந்த போட்டி நடைபெற்ற போதும் அப்போட்டியை புறக்கணிக்கக் கோரி இளை யோர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ஈழத்தமிழர் என்று கூறும் “லைக்காவின் அல்லிராஜா” அப்போது ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கண்டுகொள்ள வில்லை.
நான்காவது: சிங்கள பயங்கரவாத அரசின் அதிபர் ராஜபக்சேவின் கட்சியில் எம்.பியாக இருக்கும் “ஜெயசூர்யா”தான் இவர்களின் நேரடி கூட்டாளி. அவரை பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அழைத்து வந்தது லைக்கா நிறுவனம். இதே ஜெயசூர்யா முள்ளிவாய்க்கால் இனப்படு கொலை நாளை வெற்றி விழாவாக கொண்டாடும் சிங்கள அரசின் ஏற்பாடுகளை இனப்படு கொலை காரனான கோத்தபயாவுடன் சேர்ந்து நடத்தியவர் களில் ஒருவர் ஆவார். அது மட்டுமல்லாது கோத்தபயாவுடன் சேர்ந்து வெற்றி விழாவில் சிங்கள பயங்கரவாத இராணுவம் வழங்கிய மரியாதையையும் ஏற்றுக்கொண்டவர். ‘முத்தையா முரளிதரனை’ (கிரிக்கெட் விளையாட்டு வீரர்) இனப்படுகொலைக் காரன் இராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசியதற்காக தமிழ்நாட்டில் நுழைவதற்கு எச்சரிக்கை விடப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். ஆனால் எமது இனத்தின் சடலங்களில் வெற்றி விழா கொண்டாடும் ஜெயசூர்யாவை தனது முக்கிய கூட்டாளியாக கொண்டுள்ள லைக்கா நிறுவன அதிபர் எப்படி ஒரு ஈழத் தமிழனாக இருக்க முடியும்.
ஐந்தாவது: பிரித்தானியாவில் “கார்டிப்” எனும் பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கு சிங்கள அணிக்கு ப° வசதிகளை ஒழுங்கு செய்ததும் இந்த லைக்கா நிறுவனம்தான். அப்போட்டி நடைபெற்ற அவ்விடத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டு சிங்கள அணிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதோடு மைதானத்திற்குள் நுழைந்தும் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தி யிருந்தார்கள். ஆனால் இப்போது ஈழத் தமிழர்கள் எனக்கூறும் லைக்கா சிங்களவர்களுடன் நின்றது.
ஆறாவது: மகிந்தவுக்கு ஆதரவாக பேசியும் ஆதரவும் அளித்து வரும் முத்தையா முரளிதரனை (கிரிக்கெட் வீரர்) தனது விளம்பரங்களுக்கு ஒப்பந்தம் போட்டு பெரும் தொகையை வழங்கியுள்ளது லைக்கா நிறுவனம். இப்படி தேடித் தேடித் தமிழர்களுக்கு எதிரானவர் களுடன் கூட்டு வைத்து தமிழர்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடு களையும் செய்துவிட்டு இப்பொழுது தானும் ஈழத் தமிழன் என தமிழ்நாட்டு பத்திரிக்கைகளுக்கு தனது ஆதரவாளர்கள் மூலம் பேட்டி கொடுத்து வருகின்றது லைக்கா நிறுவனம்.
இதையெல்லாம் மறைப்பதற்கு தாம் இலங்கையிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு உதவிகள் செய்வதாக தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தி வருகின்றது.தனது இனத்திற்கு உதவிகளை செய்வதை தம்பட்டம் அடித்து அதையும் விளம்பரமாக மாற்றி லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிறவிகள்தான் இந்த நிறுவனத்தினர். அதுவும் போரில் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவிகள் செய்துவிட்டு விளம்பரங்கள் தேடுகின்றது லைக்கா. அப்படிப் பார்த்தால் புலம்பெயர் மக்கள் சிலரிடம் கடனாக பணம் பெற்று கொடுஞ்சிறையிலும், சித்திரவதை முள்வேலி முகாம்களிலும் வாடிய தனது உறவுகளை கருணாவுக்கும் ஈழத்தமிழின துரோகி பாண்டிபசார் கொலைக்காரன் “டக்கலசு”க்கும் பணம் கொடுத்து வெளியில் எடுத்தார்கள். அப்படியென்றால் கருணாவும் டக்கலசும் “ஈழத் தமிழர்கள்”தான் அவர்களும் மிகவும் நல்லவர்களா ? இதே வகைதான் லைக்காவும், புலம்பெயர் மக்களிடம் பணம் பெற்று அதை தாயக மக்களிடம் வழங்கிவிட்டு முழுக்க முழுக்கத் தன்னுடைய பணத்தை வழங்கியது போல் விளம்பரம் செய்கின்றது. இப்போது கூறுங்கள் லைக்கா நிறுவனத்தை தமிழகத்தை விட்டு ஓட வைக்க வேண்டுமா இல்லையா?
கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களுள் “சிங்கள இனப்படுகொலை அரசு மீதான பொருளாதார தடை விதிப்பது” என்பதும் ஒன்று.
“திட்டமிட்ட இனப்படுகொலை” மூலம் மூன்றரை இலட்சம் ஈழத் தமிழ் உறவுகளை கொன்று குவித்த சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் கொடுங்கோல் அரசுக்கு முதுகு எலும்பாக இருந்து பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருப்பது “மற்றுமொரு கருணா”, ”சிங்கள எடுபிடி” அல்லி ராஜாவின் “lyca” நிறுவனம். (சிங்கள பேரினவாத அரசின் குடியரசு-சுதந்திர தின விழாக்களுக்கு பெருமளவு பொருள் உதவி செய்தும், இனவெறியின் ஊற்றுக்கண்ணாக திகழும் சிங்கள புத்தப்பிக்கு களுக்கு சேவகம் செய்தும் “இனப்படு கொலைக் காரன் இராசபக்சே”யின் ஆதரவை பெற்றவர் அல்லிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.)
இலங்கையின் கையாளாக இருக்கும் அல்லிராஜா ஈழத் தமிழர் என்ற போர்வையில் தன்னுடைய “lyca நிறுவனம்” மூலம் சிங்களத்தின் பொருளாதார அடித்தளமாக தமிழகத்தை மாற்ற திட்டமிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தமிழகத்தில் பொருளாதாரம் மூலமாக சிங்கள அரசு நுழைந்தால் தன்னுடைய ஆளுமையை மறைமுகமாக செலுத்த முடியும் என நம்பி பல முறை முயன்றது. முயற்சிகள் அனைத்திலும் தோல்வியை தழுவிய நிலையில் சிங்கள அரசு. தற்பொழுது “கத்தி”என்கிற தமிழ்த் திரைப்படம் மூலமாக கனவுத் தொழிற்சாலையான திரையுலகில் காலை பதிக்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழ் ஈழ மாணவர் ஆதரவு கூட்டமைப்பு இந்த அறிக்கையை விடுத்துள்ளது.
பெரியார் முழக்கம் 21082014 இதழ்