வினாக்கள்… விடைகள்…!

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலிருந்து கூண்டோடு வெளியேற்றம். – செய்தி
சட்டசபைக்குள் இவர்கள் கூண்டுக் குள்தான் வைக்கப்பட்டிருந் தார்களா, சொல்லவேயில்லை!

மோடி அலையால்தான் பா.ஜ.க. வெற்றி என்று பா.ஜ.க. கூறுவது தவறு. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் தான் பா.ஜ.க. வெற்றி பெற்றது. – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
ஆக, பா.ஜ.க.வின் ‘இந்துத்துவா’ கொள்கையை ஏற்று, மக்கள் வெற்றி பெற வைக்கவில்லை என்ற உண்மையை, இரண்டு பேருமே ஒப்புக் கொள்றீங்க!

உச்சநீதிமன்ற தீர்ப்பையேற்று, 900 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் பண்டரிபுரம் கோயிலில் பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சார்ந்த இரண்டு பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தது கோயில் நிர்வாகம். – செய்தி
அனைத்துக் கோயில்களும் பண்டரிபுரங்களாக மாறட்டும் என வாழ்த்துவோம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்த் திருவிழாவை யொட்டி மாவட்ட நிர்வாகம், விழாப் பகுதியில் தற்காலிக டாஸ்மாக் கடை திறப்பு. – ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தி
அதுல என்னங்க தப்பு? பகவான் பவனி வரும் தேர் தள்ளாடி விழாம, இழுக்கனும்ல!

ஆகஸ்ட் 10 ஆவணி அவிட்டம்; இந்தியா முழுதும் ‘பிராமணர்கள்’ காயத்ரி மந்திரம் ஓதி, புதுப் பூணூல் களை மாற்றிக் கொண்டனர். – செய்தி
‘சமஸ்கிருத’ விழாவை மட்டும் எல் லோரும் கொண்டானும்னு சொல் வீங்க. ஆனா, காயத்ரி ஓதுவது ‘பிராமணர்’களுக்கு மட்டும் தானா? இது என்னங்க நியாயம்?

ஆந்திர முதல்வர் உத்தரவை ஏற்று – திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவி விலக மறுப்பு. – செய்தி
அதெப்படி விலகுவது? சந்திரபாபு நாயுடு கனவிலேயோ, தேவஸ்தான தலைவர் கனவிலேயோ ஏழுமலை யான் வந்து அப்படி சொன்னாரா? எதைச் செய்தாலும் அதுக்கு ஒரு நியாயம் வேணும்ல!

ஜெயேந்திரனின் 80 ஆவது பிறந்த நாள் காஞ்சி சங்கர மடத்தில் கொண்டாடப்பட்டது. – செய்தி
‘முக்தி-மோட்ச’த்தை எல்லாம் முறியடிச்சு, பூலோகத்தில் வாழத் துடிக்கிறார், சாமிஜி! வாழ்த்துக்கள்!

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர் கள் காணிக்கை செய்த முடியை ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு. – செய்தி
அப்ப, முடி காணிக்கைக்கும், ‘ஆன் லைன்’ வழியாக ஏற்பாடு செய்வீங்களா?

பெரியார் முழக்கம் 14082014 இதழ்

You may also like...

Leave a Reply