வினாக்கள்… விடைகள்…!

இந்து ஆலயங்கள், திருமடங்களுக்கு தமிழக அரசும் காவல் துறையும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். – இராமகோபாலன்
அப்படின்னா, மத பிரச்சினைகளில் ஆட்சி தலையிடக் கூடாதுன்னு சொல்வீங்களே… அந்தக் கொள்கையை கை விட்டாச்சா?

பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை ஏற்படுத்த வேண்டும். – மருத்துவர் இராமதாசு
ஒரு சந்தேகம்…. ஜாதி மாறி திருமணம் செய்யும் பெண் களுக்கும் இது பொருந்துங் களா?

சங்கர்ராமன் கொலை வழக்கு: விடுதலையான ஜெயேந்திரனை எதிர்த்து மேல் முறை யீடு இல்லை. – மத்திய அரசு வழக்கறிஞர்
அரும்பாடுபட்டு சுவாமிகள் சங்கர்ராமனை ‘மேல் உலகம்’ அனுப்பியிருக்காரு; இதைப் பாராட்டாமல் மேல்முறையீடு செய்வது ‘அதர்மம்’!

சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கங்களை முந்தைய பா.ஜ.க. ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி இரண்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. – உச்ச நீதிமன்றம்
அப்பாடா… இனிவரும் நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் அமளிகள், மைக் உடைப்புகள், ஒத்தி வைப்புகள் எதுவுமே இருக்காது!

விநாயகன் சிலைகளை நிறுவுதில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை. – காவல்துறை எச்சரிக்கை
ஆமாம! தெருவில் நிற்கும் விநாயகன்கள் ஆகம விதி களுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல; காவல்துறை விதி களுக்குத்தான் அடங்கி நடக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 37,032 அரசு பள்ளிகளில் 7837 பள்ளி களில் கழிப்பறை வசதியே கிடையாது. – செய்தி
என்னது…? அப்படின்னா வாஸ்து சாஸ்திரப்படி செயல் படுவது இந்த 7837 பள்ளிகள் மட்டும் தானா?

ராமன் கோயில் பிரச்சினையை அடுத்த மாதம் கிளப்புவோம். – விசுவ இந்து பரிஷத்
எதுக்கு பிரச்சினை கிளப் பனும்? ‘ஸ்ரீ ராமஜெயம்’ எழுதி கிட்டே இருங்க! ‘ஜெயம்’ ராமனுக்குத் தான்!

பெரியார் முழக்கம் 28082014 இதழ்

You may also like...

Leave a Reply