வினாக்கள்… விடைகள்…!

ஆடம்பர விழாக்களில் மீத மாகும் உணவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டுவதைப் பார்த்தால் கோபம் வருகிறது. – ‘தினமணி’ கட்டுரை
இதே கோபம் – சிலைகளுக்கு ‘பாலாபிஷேகம்’ யாகங்களில் உணவுப் பொருள்கள் எரிப்பு நடக்கும்போதும் ஏன் வர மறுக்கிறது என்பதை நினைத் தால் இரட்டிப்பு கோபம் வருகிறது.

சமூகத்தில் சமத்துவமின்மை நீடிக்கும் வரை இடஒதுக்கீடு முறை தேவை. – ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத்
அப்படி, சமத்துவம் உருவாகும் காலம் வரை மத ஒதுக்குதல் முறையும் தேவை என்பதையும் சேர்த்துச் சொல்லுங்க!

சென்னையில் ஊர்வலத்தில் விநாயகர் சிலை முன்பு போதையில் நடனமாடிய போலீஸ்காரர் மீது நட வடிக்கை. – செய்தி
‘நேர்த்திக் கடனாக’ இருந்தா லும் இருக்கும். அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துடாதீங்க!

பெங்களூரு மருத்துவமனை யில் உச்சநீதிமன்ற ஆணைப் படி நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை நடந்தது. – செய்தி
வேறு வழி இல்லை சுவாமி! ‘காயமே (உடலே) இது பொய்யடா’ என்று சொன் னால், உச்சநீதி மன்றம் ஏற்காது ‘சாமி’; உடனே ‘அவமதிப்பு’ நடவடிக்கை எடுத்து, உள்ளே தள்ளிடுவாங்க!

பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் வேலகவுளம்பட்டி காவல் நிலையத்தில் போலீசார் ஆடு, கோழிகளை பலியிட்டு இரத்தத்தைத் தெளித்து பரிகாரம் செய்தனர். – செய்தி
ஆடு, கோழிகளை தலை கீழாகக் கட்டி தொங்கவிட்டு, கண்களில் மிளகாய் பொடி தூவி, கால்களில் லத்தியால் அடித்து, ‘பலி’ போட்டிருப்பார்களே!

செப். 8, சர்வதேச எழுத்தறிவு நாள். – செய்தி
இப்படி சொன்னா எப்படி? ‘லோக சரஸ்வதி உத்ஸவ’ என்று புரியும்படி சொல்லுங்க!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நான் சந்திக்கவே இல்லை. – சி.பி.அய். இயக்குநர்
இது போதாது! சி.பி.அய். விசாரணையையும் சந்திக்கத் தயார்ன்னு, சவால் விடுங்க, சார்…

பெரியார் முழக்கம் 11092014 இதழ்

You may also like...

Leave a Reply