வினாக்கள்… விடைகள்…!

மயிலை கபாலீசுவரன் கோயிலில் பக்தர்கள் பயன் பாட்டுக்காக ஏற்படுத்தப் பட்ட கழிப்பறைகளை கோயில் ஊழியர்கள் மக்களுக்கு அனுமதிக்காமல், தங்கள் கட்டுப்பாட்டி லேயே வைத்துள்ளனர்.
– ‘தினத்தந்தி’ செய்தி
கோயில் கர்ப்பக்கிரகம் – அர்ச்சகப் பார்ப்பனர் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, கழிப்பறைகளாவது தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல!

வேதங்களில் கூறப்படும் ‘சரஸ்வதி’ நதி, பூமிக்கடியில் ஓடிக் கொண் டிருக்கிறதா என்பதை மத்திய நிலத்தடி நீர் வாரியம் கண்டறியும். – அமைச்சர் உமாபாரதி
நடிகர் வடிவேலு கிணற்றைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தார்! உமா பாரதி ஆற்றையே தேடு கிறார்!

‘இராமர்’ பாலத்தை இடிக்கா மல், சேது சமுத்திரத் திட்டம் நிறை வேற்றப்படும். – மத்திய அமைச்சர் கட்காரி
இதேபோல, பாபர் மசூதியை இடிக்காம, இராமன் கோயிலைக் கட்டுவோம்னு சொன்னீங்களா?

எனக்கே தெரியாமல் என் பெயரில் ‘மேனன்’ பட்டத்தை சேர்த்து விட் டார்கள். என் பெயர், இனி பார்வதிதான். – நடிகை பார்வதி (மேனன்)
ஜாதிப் பட்டதைவிட வேண்டும் என்று இளம் நடிகைக்கு இருக்கும் இந்த உணர்வுகூட ‘புரட்சிகர’ இயக்கங்களின் மூத்த தலைவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே!

என் பேத்தி தியாவுக்கு (நடிகர் சூர்யா குழந்தை) வீட்டுல வச்சு மொட்டைப் போட்டப்ப, அழுத பாப்பாவை முரட்டுத்தனமா தலையை அமுக்கி கதறக் கதற மொட்டை அடிச் சாங்க; மொட்டையடிக்கிற கலாச் சாரத்தை எவன்டா கொண்டு வந்தான்னு? கத்திட்டேன்.
– ‘ஆனந்தவிகடனில்’ நடிகர் சிவக்குமார்
இந்த நியாயமான குமுறலை குடும்பத்துக்கு வந்தால் மட்டும் வெளிப்படுத்தி சமூகத்துக்கு கூறாமல் ஒதுங்குவது நியாயம் தானா, சார்?

பெரியார் முழக்கம் 21082014 இதழ்

You may also like...

Leave a Reply