Category: திவிக

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் எடுத்த பெரியார் விழா

பெரியார் 138ஆவது பிறந்த நாளை செப்.17 அன்று தமிழகம் முழுதும் கழகத்தினர் எழுச்சியுடன் கொண்டாடினர். சேலத்தில் : சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 அன்று தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழகக் கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழகத் தலைவர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூர் சுந்தரம், செ.செ.காட்டுவளவு சின்ராசு, கண்ணாமூச்சி மாரியப்பன், மூலக்கடை இராசேந்திரன், காந்தி நகர் சரசுவதி ஆகியோர் கழகக் கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடை இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.   கொளத்தூரில் :...

மாற்று பாலினத்தோர் உரிமை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மாற்று பாலினத்தோர் உரிமை பாதுகாப்பு மசோதா 2016 யை எதிர்த்து திருநங்கையர்கள் சமிதி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி, விடுதலை சிறுத்தைக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட தோழமை அமைப்புகளும் திருநங்கை தோழர்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம்: ஈழம்… தொடரும் துயரமும்; நமது கடமையும்!

நாள் 25-09-2016 ஞாயிறு மாலை 5 மணி இடம்: கவிக்கோ மன்றம், சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை. தலைமை: பேராசிரியர் சரசுவதி, கருத்தாளர்கள்: பேராசிரியர் மணிவண்ணன், அருட்தந்தை குழந்தைசாமி, விடுதலை இராசேந்திரன், தியாகு. சிறப்புரை: மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன். நன்றியுரை: த.தமிழினியன் நிகழ்ச்சித்தொகுப்பு: முகேஷ் தங்கவேல் நிகழ்ச்சி ஏற்பாடு: நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் தொடர்புக்கு: +91 9444145803, +91 9751524004 தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தமிழின எதிரி R.S.S. அலுவலகம் முற்றுகை சென்னை 20092016

கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய தமிழின எதிரி “ஆர்.எஸ்.எஸ்”சை கண்டித்து கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாள்கள், தோழர்கள் 500 பேர் கைது! இன்று 20.09.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் ன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தலைமை அலுவலகம் முற்றுகை. கைது செய்யப்பட்ட அரங்கில் காஞ்சி மக்கள் மன்ற தோழர்களின் எழுச்சியான புரட்சிகர கலை பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன    

தமிழர் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பேராவூரணி 20092016

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்  20092016 மாலை 4 மணி இடம்  பேராவூரணி அண்ணா சிலை அருகில்   தலைமை தோழர் சித. திருவேங்கடம், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திவிக கண்டன உரை தோழர் பால் பிரபாகரன் பரப்புரை ச் செயலாளர், தவிக தோழர் ஆறு. நீலகண்டன் கொள்கை பரப்புச் செயலாளர், தமபுக மற்றும் சனநாயக முற்போக்கு இயக்கத் தோழர்கள் தொடர்புக்கு 9865621895 9524428253

தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவிப்பு

தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாளான 17092016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்புள்ள பெரியார் சிலைக்கு கழக பரப்புரைச் செயலாளர் தோழர் பால் பிரபாகரன் தலைமையில் விளாத்திக்குளம் ஒன்றியச் செயலாளர் மாரிச்சாமி மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட அமைப்பாளர் பால் அறிவழகன், மாவட்ட துணைத்தலைவர் வே. பால்ராசு, தமிழ்நாடு மாணவர் கழகம் பிரபாகரன், திலீபன், அறிவழகன், செ.செல்லதுரை, செ.பால்துரை, கோஆ குமார், இ.குமாரசிங் மற்றும் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரை வாழ்த்தியும், ஜாதி ஒழிப்புக் குறித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது. தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்காக தூத்துக்குடி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன

பெரியார் பிறந்தநாள் விழா ஆனைமலை

தலைவர்பெரியாரின் 138-வதுபிறந்தநாள் விழா ஆனைமலையில் கழகதோழர்களால் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் சமத்துவபுரத்தில் பெரியார்சிலைக்கு மாலைஅணிவித்தனர். கழககொடியை புனிதா, கீதாஆகிய தோழர்கள்ஏற்றி வைத்தனர். பின்பு பெரியார்படத்திறப்பு நிகழ்வு நடந்தது. விழாவில்பெரியார் திராவிடர்கழக ஒருங்கிணைப்பாளர் காசு.நாகராசு. அம்பேத்கர்இளைஞர் முன்னணி தலைவர்   கவி.மணிமாறன் மற்றும்கழகத்தோழர்கள் வே.வெள்ளிங்கி, ராசேந்திரன், அப்பாதுரை, அரிதாசு, மணிமொழி, ஆனந்த், கணேசு, முருகேசன் உள்படதோழர்கள் 75பேர்கலந்து   கொண்டனர். மதியம் மாட்டுக்கறி விருந்தில் பொதுமக்கள்என 200பேர்பங்கேற்றனர்

பெரியார் 138 பிறந்தநாள் விழா கோபி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி களின் சார்பாக பேரணி நடைபெற்றது.பேரணி கோபி சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம், கடைவீதி வழியாக அய்யா சிலைக்கு வந்தடைந்த்து. அய்யா சிலைக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில. கலந்து கொண்ட அனைவரும் பெரியாரியல் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் அய்யாவுடைய கருத்துக்களை  வலியுறுத்தி ஒவ்வொரு அமைப்பின் பொறுப்பாளர்களும் உரையாற்றிய பின் பொதுமக்கள் அனைவர்க்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இப்பேரணியில் திக,திவிக, தபெதிக,திமுக, மதிமுக, நாம்தமிழர்,விடுதலை சிறுத்தைகள், தமிழர் தேசிய முன்னணி,காந்தி மன்றம், தமிழ்வட்டம் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் செய்தி தோழர்நிவாசு மனோகரன்

நாமக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில்… நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமையில்,காவேரி நாகரிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியில் சென்று நகரின் எட்டு இடங்களில் கழகக் கொடியேற்றப்பட்டது மற்றும் பெரியாரின் பொன்மொழி வாசகப் பலகை திறக்கப்பட்டது,பல்வேறு இடங்களில் பெண் தோழர்கள் கொடியேற்றினர்,இறுதியாக கத்தேரி சமத்துவபுரத்தில் வாகனப் பேரணி முடிவடைந்த்து,பின்பு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தோழர்களுக்கு மதிய உணவு வழங்கினர்,இந்நிகழ்வில் மாவட்டத்தின் அனைத்து பகுதி தோழர்களும் பங்கேற்றனர். திருச்செங்கோட்டில்… நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,நகரின் இரு பகுதிகளில் கழகத் தோழர்கள் வை.தனலட்சுமி,ச.ராஜலட்சுமி ஆகியோர் கழகக் கொடியேற்றினர்,பின்பு பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் கழகத் தோழர்கள்,ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில்… நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமையில்,பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர்...

பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்ட அய்யாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி,நகரத் தலைவர் பிரகாசு,நகர செயலாளர் சரவணன்,நகர பொருளாளர் கோபி ,நகர இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் மற்றும் குப்புசாமி, சங்கர்,தம்பிதுரை, தங்கராஜ், வேணுகோபால்,பிரகாசு,பாலண்,சங்கர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

குமரி மாவட்ட தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

குமரி மாவட்டத்தில் அறிவுலகத் தலைவர் தந்தை பெரியாரின் 138 வது பிறந்த நாள் விழா குமரி மாவட்ட கழகம் சார்பாக மார்த்தாண்டம் ம.தி.மு.க அலுவலகத்தில் வைத்து கழகத் தோழர். சூசையப்பா தலைமையில் நடைப்பெற்றது. பொருளாளர் தோழர். மஞ்சுகுமார் வரவேற்புரையாற்றினார்.செயலாளர்.தோழர்.தமிழ் மதி ’பெரியாரியல் பற்றி கருத்துரையாற்றினார். கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெ.தொ.க தலைவர்.நீதி அரசர் நன்றி கூறி முடித்தார்.  

கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா !

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் கு.சூரியகுமார் தலைமையில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொளத்தூர் சோதனைச்சாவடியில் கோவிந்தராசு, பேருந்து நிலையத்தில் ஆட்டோ செல்வம், வடக்கு ராஜா வீதி ஓவியர் மூர்த்தி, திருவள்ளுவர் நகரில் காயத்திரிசீமா, உக்கம்பருத்திக்காட்டில் லக்கம்பட்டி சக்தி, தார்காடு விஜயகுமார், லக்கம்பட்டியில் பெரியசாமி, நீதிபுரம் டைகர் பாலன் ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். தோழர்களுக்கு மதிய உணவு தார்காடு தர்மலிங்கம் இல்லத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் 20 இருசக்கர வாகனங்களில் 35 தோழர்கள் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழக தலைவர் தோழர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூரில் தோழர் சுந்தரமும், செ.செ.காட்டுவளவில் தோழர் சின்ராசு, கண்ணாமூச்சியில் தோழர் மாரியப்பன், மூலக்கடையில் தோழர் இராசேந்திரன், காந்தி நகரில் தோழர் சரசுவதி ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடையில் தோழர் இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.”

கோவையில் குலக்கல்வியை மீண்டும் திணிக்கும் “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு.” கழக தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார். நாள் : 18.09.2016 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: நல்லாயன் திருமண மண்டபம், டவுன் ஹால், கோவை.

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய,கர்நாடக அரசுகளை கண்டித்தும்.. தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவும்

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பிரச்சார கூட்டம். 17.09.2016 மாலை 6மணிக்கு பெரியார் சிலை அருகில் மன்னார்குடி தலைமை : இரா.காளிதாசு மாவட்டசெயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். சேரன்குளம் சு.செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் …………………………………………………… சிறப்புரை ………………… தஞ்சை விடுதலைவேந்தன் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை கழக பேச்சாளர் திராவிடர் விடுதலைக் கழகம்… ………………………………………………………… திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

நுகும்பல் தோழர்கள் ஜானகி – இளையராஜா இணை ஏற்பு விழா காஞ்சி – 04092016

தமிழ்நாடு மாணவர் இயக்கத் ( CP ML மக்கள் விடுதலை மாணவர்  அமைப்பு ) தலைவர் தோழர் இளையராஜா திருமணம். விழுப்புரம் மாவட்டம், நுகும்பல், போரூரில் 4-9-2016 அன்று மாலை 7-00 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்திவைத்தார். தோழர்கள் மீ.தா.பாண்டியன், சி பி எம் எல் மக்கள் விடுதலைப்  பொதுச்செயலாளர் பாலன், திருநங்கை பானு, மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எழுத்தாளர் பிரேமா ரேவதி, தமிழ்த்தேச குடியசு கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

சடங்குகளை மறுத்து பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் ஆணுக்கும் தாலி அணிவித்து சீர்திருத்த திருமணம்.. தோழர் நிரஞ்சன்குமார்

5-9-2016 அன்று காலை, சென்னை, பழையவண்ணாரப்பேட்டை, ஏழாயிரம் பண்ணை நாடார்கள் திருமண மண்டபத்தில் ஈழத்தின் புகைப்படக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனரும், பெரியாரியல் சிந்தனையாளரும் மக்கள் மன்றத்  தோழர் நிரஞ்சன் -தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினித்துறைப் பொறியாளர்  இராசலட்சுமி ஆகியோரின் ஜாதிமறுப்பு, தாலிமறுப்பு வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா இயக்குனர் களஞ்சியம் தலைமையில் சென்னையில் நடந்தேறியது. மணமக்கள் இருவரும் உறுதி மொழிக் கூறியும், இருவரும் ஒருவருக்கு மற்றவர் தங்க  சங்கிலியையும்,மாலையையும் அணிவித்தும் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டனர். விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், ராஷ்ட்ரீய ஜனதாக் கட்சித் தலைவர், மக்கள் மன்றம் மகேஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மக்கள் மன்றத் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். புகைப்படங்கள் ணை

ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பத்து ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை மதபேதம், இனபேதம் பார்க்காமல் விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாள் 09092016 வெள்ளி மாலை 3 மணி இடம் சேப்பாக்கம் சென்னை தோழர் கொளத்தூர் மணி உரை தொடர்புக்கு 7200439952

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு வடக்கு 04092016

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஈரோடு வடக்கு 04092016

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் மாதந்திர கலந்துரையாடல் கூட்டம் 04092016 ஞாயிறு அன்று கோபியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பவானி ஒன்றிய பொறுப்பாளர் வினோத் தலைமை ஏற்க மாநில வெளீயிட்டு செயலாளர் இராம.இளங்கோவன், மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் 138 ஆவது பிறந்த நாள் அன்று கோபியின் அனைத்து முற்போக்கு இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஊர்வலம் நடத்துவது எனவும்,  செப்டம்பர் 20 ஆம் தேதி கோபி ஒன்றியம் முழுதும் இருசக்கர வாகன ஊர்வலம் மூலம் கழக கொடிகம்பங்களில் கொடி ஏற்றுவது எனவும், தொடர்ந்து மற்ற ஒன்றியங்களில் அச்சம் போக்கும் அறிவியல் பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மறைந்த  நம் கழக ஆதரவாளர் பரசுராம் அவர்களின் தந்தையார் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கழக பொறுப்பாளர்கள், தமிழ் நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர்கள்,...

விநாயகர் ஊர்வலம்காவல்துறைக்கு கழகம் நேரில் மனு

விநாயகன் அரசியல் ஊர்வலங்களில் சட்டமீறல் விதிமுறைகளை அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட இரசாயன பூச்சு பூசப்பட்ட, பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறிந்து பறிமுதல் செய்யவேண்டும்; சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கழகப் பொருளாளர்  துரைசாமி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். ஆனைமலை : பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும்...

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 01092016

1-9-2016 அன்று பிற்பகல் 2-00 மணிக்கு மதுரை ஓபுலா படித்துறையில், மக்கள் உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில், மனித உரிமைக் காப்பாளர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கைப் பதிவு செய்த காவல்துறையைக் கண்டித்தும்,  வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம், மொட்டமலையைச் சேர்ந்த அலைகுடிகளான குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூலிவேலை செய்துவந்தவர்களை சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்து, 63 நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்துவருவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர் தோழர் ஹென்றி திபேனும், உதவும் குரல் அமைப்பினரும். தொடர்ந்து சட்ட்விரோதமாகக் காவலில் வைத்ததோடு, சித்திரவதை செய்தும், பெண்களைப் பாலியல் துன்புறுத்தலும் செய்த காவல்துறையின்ர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தக்கலையிலும், மதுரையிலும் அர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவ்வார்ப்பட்டத்தின்போது காவல்துறையினரை மிரட்டியதாக, பிணையில் வர முடியாத பிரிவுகளில் எட்டு நாட்கள் கழித்து தோழர் ஹென்றி திபேன் மீது பொய்வழக்கில் புனைந்ததைக் கண்டித்து...

பாலத்தின் நடைபாதையில் உணவருந்திய தூத்துக்குடி கொள்கைத் தோழர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் பேராதரவோடு எழுச்சியுடன் நடைபெற்ற நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் 27082016 அன்று மாவட்டமெங்கும் நடைபெற்றது. பயணத்தில் ஓரிடத்தில் தோழர்கள் உணவருந்த இடமில்லாத காரணத்தால் அங்கே இருந்த பாலத்தில் வரிசையாக தரையில் அமர்ந்து உணவருந்திய காட்சிகள் இயக்கத்தின் மீது மாளாத பற்றும் கொள்கையின் பால் கொண்ட உறுதியும் நெகிழ்ச்சியுற செய்கிறது

அறிவியல் பரப்புரை பயண திருப்பூர் அணியில் பயணத்தில்கலந்து கொண்டோர்

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு திவிக சார்பில் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் 5 நாட்கள் தமிழகமெங்கும் நடந்தது திருப்பூர் அணியில் கலந்துகொண்டு வழிநடத்தியவர்கள் தலைமை தோழர் திருப்பூர் சுதுரைசாமி பொருளாளர் திவிக பயணவிளக்கவுரை தோழர். கோபி வேலுச்சாமி தலைமைக் கழகப்பேச்சாளர் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கவுரை தோழர் காவை இளவரசன் பயணஒருங்கிணைப்பாளர் தோழர் சூலுர் பன்னிர் செல்வம்   அய்ந்து நாள் கலந்துகொண்டவர்கள் தோழர் நிர்மல்குமார் கோவை மாவட்டசெயலாளர்/வசூல் குழு தோழர் ஆனைமலை மணிமொழி தோழர் உக்கடம். கிருஷ்ணன் அவர்கள் /விடியோ புகைபடம் தோழர் திருப்பூர் நீதிராசன் மாநகர தலைவர் திருப்பூர் தோழர் பார்வதி   திருப்பூர் ,புத்தகவிற்பனை பொருப்பு தோழர் சங்கீதா  இயக்க பாடல்கள் இளம்தோழர் சங்கீதா மகள் யாழ் இசை தோழர் முத்துலட்சுமி அவர்கள் துண்டறிக்கை /புத்தகவிற்பனை தோழர் மாப்பிள்ளைசாமி அவர்கள் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் சக்தி அவர்கள் திருப்பூர் ராயபுரம்,...

அனைத்துலக காணாமல்போனோர் நாள் !

இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைத்த ஒன்று கூடலில் திராவிடர் விடுதலை கழகம்,தமிழ் தேசிய விடுதலை இயக்கம், சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை,தமிழ் தேச மக்கள் கட்சி,தமிழக மக்கள் முன்னணி,அம்பேத்கர் சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டு ஈழத்தில் காணாமல் செய்யப்பட்டோர் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டி ஐ.நா விற்கான கோரிக்கை மனு UNICEF அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,சென்னை மாவட்ட கழ்க செயலாளர் உமாபதி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் அமைப்பாளர் தோழர் தியாகு, தமிழ்தேச மக்கள் கட்சி பொது செயலாளர் தமிழ்நேயன், தமிழக மக்கள் முன்னணி தோழர்பாவேந்தன், பேராசிரியர் ராமு மணிவண்ணன் சிபிஎம்எல் கட்சி தோழர்கள் செல்வி தலைமை குழு உறுப்பினர், மற்றும் கண்ணன் தென்சென்னைமாவட்டகுழு உறுப்பினர் மற்றும் கழக தோழர்கள்,ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தோழர் செங்கொடி நினைவு நாள் !

மரண தண்டனைக்கு எதிராக 3 தமிழர் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தோழர் செங்கொடியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் 28.08.2016 அன்று காஞ்சிமக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக தலைவர்,கழக பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் வேல்முருகன்,இயக்குனர்கள் மு.களஞ்சியம்,ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கம்

”தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” சார்பாக நடைபெறும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கம் 27.08.2016 அன்று மாலை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் துவங்கியது.. இந்திய அரசு, இந்தியாவில் உள்ள தமிழீழ ஏதிலியருக்கு இடைக்கால குடியுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. தோழர் கோவை இராமகிருட்டிணன்,தோழர் வன்னியரசு, ஓவியர் தோழர் வீரசந்தானம்,தோழர் செந்தில்,தோழர் அருணபாரதி,தோழர் களஞ்சியம்,தோழர் பாரதி மற்றும் இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் , கழக தோழர்கள் கலந்து கொண்டனர். பொது மக்களும் ஏராளமானவர்கள் முன்வந்து கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.

திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அரசு துறைகளுக்கு மனு !

வருகிற விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட ரசாயண பூச்சு பூசப்பட்ட,பிளாஸ்ட் ஆப் பாரிசால் செய்யப்பட்ட ,சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறித்து பறிமுதல் செய்யவேண்டும்,சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,இந்து அறநிலையத்துறை ஆனையர்,மாநகராட்சி ஆனையர் ஆகியோரிடம் கழக பொருளாளர் துரைசாமி அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஹென்றி திபேன் மீதான பொய்வழக்கினை திரும்பபெறக் கோரி குரல் முழக்க தொடர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! கழக தலைவர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்! தமிழகத்தில் சமூக செயல்பாட்டாளர் மீது திட்டமிட்டு பதிவுசெய்யப்படும் பொய் வழக்குகள், தாக்குதல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தக்கோரியும், மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.09.2016 வியாழக்கிழமை. இடம் : ஒபுளா படித்துறை,மதுரை. நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.   உண்மையை பேசுவது போலீசுக்கு பிடிக்காது…! குமுறும் ஹென்றி டிபேன் விகடன் செய்தி படிக்க இங்கே சொடுக்கவும்

கண்டன ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 29082016

கண்டன ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 29082016

கடமையாற்றத்தவறும் கவுந்தப்பாடி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும், ஆள்கடத்தல் குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ! நாள் : 29.08.2016,திங்கட்கிழமை,காலை 10 மணிக்கு இடம் : கவுந்தப்பாடி நால்ரோடு. ஈரோடு மாவட்டம்,சலங்கப்பாளையம் திராவிடர் விடுதலைக் கழக தோழருடைய மனைவி தேஜாஶ்ரீ அவர்கள் கடத்தப்பட்ட சம்வத்தின் மீதான வழக்கில் மக்கள் கைப்பிடியாக பிடித்து கடத்தல் குற்றவாளிகளை காவல்துறையிடம் ஒப்படைத்தும் குற்றவாளிகள் மேல் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்காமலும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் இரண்டையும் பிடித்துக்கொடுத்தும் அவற்றை பறிமுதல் செய்யாமலும் கடமை ஆற்றாமல் மெத்தன போக்குடன் நடந்து கொள்ளும் கவுந்தப்பாடி காவல்நிலைய அதிகாரிகளை கண்டித்தும், ஆள்கடத்தல் குற்றவாளிகள் மீது உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இப்படிக்கு, திராவிடர் விடுதலைக் கழகம், ஜாதிமறுப்பு கூட்டியக்கம்.

நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் மற்றும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி 27082016

27082016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்களின் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை வினியோகித்து மக்களின் எழுச்சியை உருவாக்கினர் மேலும் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது. மேலும் செய்திகள் விரைவில்

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு கையெழுத்து இயக்கம்

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு சார்பாக 27.08.2016 அன்று மாலை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் , தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

நவீன சம்பூகர்களின்- வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்

27082016 “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் இனத்தினர் மீது இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, ‘நவீன சம்பூகர்களின்- வகுப்புரிமை மீட்பு பரப்புரை பயணம்” தூத்துக்குடி மாவட்ட “திராவிடர் விடுதலைக் கழகத்தின்” சார்பாக நடைபெற இருக்கிறது. இது நம் சந்ததியினருக்கான பயணம்.. சமூக நீதியை விரும்பும் அனைத்து தோழர்களையும் இந்த பரப்புரை பயணத்தில் பங்குகொள்ள அழைக்கிறோம்.. வாருங்கள்.. சமூகநீதியை வென்றெடுப்போம்..

விநாயகர் சிலை ஊர்வலம் – ஆனைமலை திவிக மனு

​பொள்ளாச்சி-ஆனைமலை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 5ம் தேதி இந்துமத வெறியர்களால் மற்ற சமூகத்தாரின் வன்மத்தை தூண்டுவது போல் சென்னை உயர் நீதி மன்றம் பிறப்பித்த விதிகளுக்கு மாறாக செயல்படுவதை கண்டித்தும் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துகின்ற நீர் நிலைகளில் கரைப்பதும் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் செல்வதும் காவல்துறைகளின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதை கண்டித்தும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் 20க்கும் மேற்பட்ட தோழர்களால் மனு வழங்கப்பட்டது  

தோழர் செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

மன்னார்குடி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.08.2016 மாலை 6 மணிக்கு பெரியார் சிலை அருகில் தோழர் செங்கொடியின் 5ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் தலைமை  இரா.காளிதாசு, மாவட்டச்செயலாளர் சிறப்புரை சேரன்குளம் செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நிகழ்ச்சி ஏற்பாடு திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

கோவை திவிக சார்பில் மனு

விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காமல் தடுக்க கோரி 25-08-2016 (வியாழக்கிழமை ) காலை 11:00 மணியளவில் கோவை மாநகர காவல்துறை ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிபாளர், இந்து சமய அறநிலையத்துறை, மசுகட்டுபாட்டு வாரியம், கோவை மாநகராட்சி, ஆகியோருக்கு கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மனுவாக வழங்க பட்டது. தோழர்நேருதாஸ் தலைமையில் , நிர்மல்குமார் செயலாளர், இராமச்சந்திரன் புறநகர் மாவட்ட தலைவர், சூலூர்பன்னீர்செல்வம் சூலூர் ஒன்றியம் , மாநகர அமைப்பாளர்ஜெயந்த், பொருளாளர் கிருஷ்ணன், வடவள்ளி ஸ்டாலின், விக்னேஷ், சித்தன், சங்கர்,  அன்ட்ரோஸ், கணேஷ், வெங்கட், விஜயபாரதி, கனி ஆகிய மாவட்டகழக பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர் திராவிடர் விடுதலைக் கழகம் கோவை மாவட்டம் பேச: 9677404315

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு – துண்டறிக்கை

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ்மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களாகிய நமக்குண்டு என்ற அடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகப் பின்வரும் கோரிக்கைகளை இந்திய அரசிடமும் தமிழக அரசிடமும் வலியுறுத்துகிறோம்: இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும். தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும். திபேத்து போன்ற பிறநாட்டு ஏதிலியரோடு ஒப்பிட்டால் தமிழீழ ஏதிலியர்க்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசு கைவிட வேண்டும். சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழக அரசு அம்முகாம்களைக்...

தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு -அறிமுகமும் நோக்கமும்

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் சமூகநீதிக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற இயக்கங்கள் தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) உரிமைக்காக ஒன்றுபட்டுள்ளோம். இலங்கை அரசுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய பல்வேறு பாதிப்புகளிலிருந்து தப்பி இலட்சக்கணக்கான ஈழ மக்கள் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் போராடுகிற நாம் நம் மண்ணில் திறந்த வெளி முகாம்களிலும் சிறப்பு முகாம்களிலும் வாழ்கிற அம்மக்களின் உரிமைகளுக்காகக் காத்திரமான மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கக் கடமைப் பட்டுள்ளோம். தமிழீழத்திற்காக நாம் நடத்துவது விடுதலைக்குத் துணை செய்யும் ஆதரவுப் போராட்டங்களே! ஆனால் இங்குள்ள தமிழீழ ஏதிலியர்கள் தமக்கான கோரிக்கைகளைத் தாமே முன்னெடுத்துச் செல்வதற்கான சனநாயக வெளி இல்லாது புழுக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். இறுக்கம் தளர்ந்து அவர்களுக்கான கோரிக்கைகளைப் பொதுச் சமூகத்திடம் முன்வைத்து பரந்த அளவில் மக்கள் கவனத்தைத் தம் பக்கம் திருப்பத் தமிழீழ ஏதிலியர்க்கு இந்நாட்டுக் குடியுரிமை வேண்டும். நாளை அவர்கள் தாயகம் திரும்பும் வாய்ப்புள்ளதாலும் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பில்...

கழக தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு ! விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை மனு

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் சிலைகளை கரைப்பது குறித்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்ட காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு கடிதங்கள் கொடுக்கப்பட உள்ளதை அறிவோம். அவ்விண்ணப்பங்களை தயாரிப்பதற்கான மாதிரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை தோழர்கள் தங்கள் பகுதிற்கேற்ப மாற்றியமைத்து அந்தந்த அலுவலங்களில் கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கோட்டாட்சியர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர், அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் ஆகியவற்றிலும் மேலும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்து அறநிலையத் துறை ஆகியவற்றிலும் கடிதங்கள் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வை பதிவு செய்து கழக தலைமைக்கு செய்தியாக அனுப்பவும். அந்தந்த பகுதி நாளிதழ்களில் இச்செய்தியை இடம் பெற செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும். சிலை கரைப்பு குறித்து 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்...

விநாயகர் சிலை கரைப்பின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் – உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல் ! விநாயகர் சிலை கரைப்பின் போது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்து 2004 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல். கழக தோழர்கள்,விநாயகர் சதுர்த்தி நிகழ்சியில் சிலைகளை கரைப்பது குறித்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்ட காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு அளிக்கப்பட உள்ள கடிதங்களுடன் இத்தீர்ப்பின் நகலையும் இணைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கோரிக்கை மனு மாதிரிகள்

சென்னை மாநகர காவல்துறை ஆளுனரிடம் மனு

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பிளாஸ்டோ ஆப் பாரிஸ் வேதி பொருளில் செய்யப்படும் விநாயகர் சிலைகளை தடை செய்ய வேண்டும் என்றும் சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றிக்கொண்டு போக்குவரத்து விதிக்கு எதிராகவும் இடைஞ்சலாகவும் ஊர்வலம் வருவதை தடைசெய்யவும், ஒலிபெருக்கி விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற கோரியும் மனுவாக சென்னை மாநகர காவல்துறை ஆளுனரிடம் தரப்பட்டது. தோழர் தபசி குமரன் தலைமையில் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள் தடுத்து நிறுத்த கழகம் களமிறங்கும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 12.8.2016 அன்று மாலை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம்’ நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருப்பதைப் போலவே அதன் 51ஏ பிரிவின்படி அடிப்படை கடமைகளையும் வரையறுத்துள்ளது. அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்பதை குடிமக்கள் அனைவரின் அடிப்படை கடமை என்று உள்பிரிவு ‘எச்’ (h) வலியுறுத்துகின்றது. இதனை வலியுறுத்தியே “நம்புங்கள் அறிவியலை! நம்பாதீர்கள் சாமியார்களை!” எனும் முழக்கத்தோடு அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் திராவிடர் விடுதலைக் கழகம் மக்களின் பெரு வரவேற்போடும், ஆதரவோடும் நடத்தி முடித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் இப்பயணங்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கியும் வந்த சிறு இடையூறுகளைக்...

மத விழாவின் பெயரால் நடைபெறும் அத்துமீறல்கள் … சென்னை திவிக மனு

விநாயகர் சிலைகளை இயற்கை வளமான ஆறு, கிணறு, கடல் நீரை அசுத்தப்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிபொருள் கலவையை கொண்டு தயார் செய்வது மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்படுள்ளது . ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் தயாரிக்கப்படும் சிலைகளை பார்வைக்கு வைக்கப்படும் முன்பே தடைச்செய்ய வேண்டும் . சரக்கு வாகனங்களில் மனிதர்களை ஏற்றுவது போக்குவரத்து சட்டப்படி குற்றமாகும் . பக்தர்கள் என்ற போர்வையில் கூட்டம் கூட்டமாக சரக்கு வாகனங்களில் ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக போவதை தடைச் செய்வதோடு, அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அதன் போக்குவரத்து உரிமையை நீக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியை உபயோகப்படுத்துவது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு உபயோகப் படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். செப்டம்பர் 5 அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 19082016

தோழர்களே … திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் நடத்தும் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 19 : 08 : 2016 அன்று மாலை 5 :30 மணியளவில் தி.வி.க தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் 28, 29, 30, 31 : 08 : 16 தேதிகளில் நடைபெறவுள்ள பிரச்சார பயணம் , விநாயகர் ஊர்வல எதிர்ப்பு பெரியார் கைத்தடி ஊர்வலம், விநாயகர் ஊர்வல முறைகேடு பற்றி சமூக வளைதளங்களில் கவனம் ஈர்த்தல் மற்றும் காவல்துறையில் மனு அளித்தல், அய்யா பிறந்தநாள் நிகழ்வுகள் என அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பற்றி விரிவாக கலந்தாலோசிக்கப்படும். ஆகையால் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள் அவசியம் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் …