இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன

“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.

“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது.

பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி

திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு… க்ருஹே கௌஹு… திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் – தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?)

மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும் விவேகானந்தர்

“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4)

“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக் கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக் கறி உணவை சமைத்தார்கள்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9)

“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) – தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை) – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏப்ரல் 2015

மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முதல் இடம்

காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டை ஆண்ட வரை மாட்டு இறைச்சியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது. பசுக்களைக் காப்பாற்று வதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உணவு உரிமையைத் தடை செய்யும் மோடி அரசு வந்த பிறகு உலக அளவில் முதல் இடத்தைப் பிடித் துள்ளது. 2014-2015இல், ஆண்டுக்கு 24 இலட்சம் டன் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது மோடி அரசு. மாட்டுக் கறி வணிகத்தில் உலகிலேயே முதல் இடம். நமது பண்பாட்டையும் உரிமையையும் பறிப்பதற்கு பசுப் பாது காப்பு நாடகம். (‘தி இந்து’, 10.8.2015)

மாட்டு இறைச்சிக்கு எதிரான பார்ப்பன அரசியலை முறியடிப்போம்!

பழந்தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம்!

ஆரிய சமாஜம் என்ற அமைப்பை உண்டாக்கியவர் தயானந்த சரஸ்வதி. மூலசங்கரன் என்ற இந்த குஜராத் பார்ப்பனர் தான் மாட்டு இறைச்சி எதிர்ப்பை ஒரு அரசியலாக்கியவர். 1882இல் கோ ரக்ஷினி சபை என்ற அமைப்பை ஏற்படுத்தி, இஸ்லாமியர் களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக அப்பாவி மக்களைத் திரட்டு வதற்காக பசுப் பாதுகாப்பு என்ற அரசியலைத் தொடங்கினார். 1920க்குப் பிறகு இந்து மகாசபாவும், 1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்.சும் இந்தியாவின் அடித்தட்டு மக்களின் பண்பாடாகவும், அத்தியாவசியமான உணவாகவும் இருந்த மாட்டிறைச்சி உணவை எதிர்த்த மதவாத அரசியலை நடத்தி வருகின்றனர்.

இந்து மத வேதங்களோ, சாஸ்திரங் களோ, சங்கத் தமிழ் இலக்கியங்களோ, பழந்தமிழர் பண்பாடோ மாட்டு இறைச்சியைத் தடுக்கவே இல்லை. வரவேற்கவே செய்துள்ளன. தமிழர் களின் பண்பாட்டில் முக்கிய அடை யாளம் மாட்டிறைச்சி தான். ஏறு தழுவலில் தமிழர்களின் உரிமையைக் காக்க வேண்டும் என்று களம் கண்ட தமிழர்களே! நமது தொன்மை மிக்க பண்பாட்டு அடையாளமான மாட்டு இறைச்சி உணவு என்ற உரிமையை மீட்கவும் களம் காண்போம் என அழைக்கிறது – திராவிடர் விடுதலைக் கழகம்

திராவிடர் விடுதலைக் கழகம், கொளத்தூர், சேலம் மாவட்டம்

பெரியார் முழக்கம் 20042017 இதழ்

17903740_1884244218521933_475866850448865314_n 17951671_10209219137783174_1220162401530138760_n

You may also like...