வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கழக தலைவர் பாராட்டு

சேலம் மாவட்டம் கொளத்தூர் கழக குடும்பத்தை சார்ந்த கொளத்தூர் குமார் – தமிழரசி ஆகியோரது மகன் இனியன், காவலாண்டியூர் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரது மகன் வளவன், காவை இளவரசன் – மாதவி ஆகியோரது மகன் எழிலரசு ஆகியோர்  23.4.17 ஞாயிறு அன்று நடைபெற்ற Dr.B.R. AMBEDKAR SPORTS FOUNDATION திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் இனியன் தங்க பதக்கம் பெற்றார்.

10 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் வளவன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியன்  பிரிவில் எழிலரசு வெள்ளி பதக்கம் பெற்றார். இதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி திரு.புண்ணியமூர்த்தி அவர்கள் வழங்கினார். வெற்றிபெற்ற வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார்.

1 2 3 img_2887 img_2889 img_2890 img_2893

You may also like...