கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம் – கழக தலைவர் நேரில் ஆய்வு
ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப்பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து சட்ட, மகாள் திரள் போராட்டங்கள் போன்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அத ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க பொதுச்செயலாளர் வி.பி.குணசேகரன் ஆகியோருடன் கனிராவுத்தர் குளப் பணிகளைப் பார்வையிட்டனர். கழக மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன் உள்ளிட்ட பல தோழர்கள் உடனிருந்தனர்.