தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு – ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம் 30042017

“கழக செயல் வீரர் ” தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று…

ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்….

இன்று காலை (30.04.2017) 10 மணிக்கு ஆரம்பமானது.தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர்.வீ.சிவகாமி அவர்கள் வந்திருந்த அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கான சிறுகதை, விளையாட்டு பயிற்சி என பல்வேறு விதமாக கலந்துரையாடினார்….

வந்திருந்த சிறுவர், சிறுமிகளுக்கு குளிர்பானம் மதிய உணவுகளும் வழங்கப்பட்டது….

மதிய பொழுதில் சமூக கல்வி நிறுவனத்தின் தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்கள் சிறுவர், சிறுமிகளுக்கு ஓவியப்போட்டி, சிறுகதை என பல்வேறு பயிற்சிகளை அளித்து சிறுவர், சிறுமிகளுடன் பழகி கலந்துரையாடினார்கள்….

இறுதியாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் பழகு முகாமின் சிறுவர், சிறுமிகளை வழிநடத்திய தோழர்.சியாம் சுந்தர் மற்றும் தோழர்.மோகினி அவர்களுக்கு கழக மாத இதழ் நிமிர்வோம் புத்தகத்தை வழங்கினார். அதையடுத்து வந்திருந்து பழகு முகாமில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்

18157649_195837274268251_8185864624964981906_n 18194210_195836114268367_4906767219455445149_n 18194898_195836817601630_6076952617055295109_n 18195168_195836380935007_7698783254505256953_n 18198541_195836140935031_2366090050460776698_n

You may also like...