மாட்டுக்கறி அரசியல் – மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ! சேலம் 12052017

கருத்துரிமை உணவு உரிமைக்கு தடை போடும் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து இன்று 12052017 காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் தடையை மீறி மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள்.

போராட்டத்தின் போது தோழர் கொளத்தூர் மணி பேச்சு

போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது.

இப்போராட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட்,

சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைப்பாளர் டைகர் பாலன்,

நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்து பாண்டி,

திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு,மாநகர செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் மணி, அமைப்பாளர் கலைக்குழு சங்கீதா, மாநகர தலைவர் தனபால்,

கோவை மாவட்ட தலைவர் நேருதாஸ், மாவட்ட செயலாளர் நிர்மல்குமார்,

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் குமார், பிரபு உள்ளிட்ட 150 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

img_3094 img_3101 img_3102 img_3105 img_3110 img_3115 img_3125 img_3126 img_3127 img_3128 img_3133 img_3136 img_3138 img_3155 img_3164 img_3166 img_3177 img_3186 img_3192 img_3200

 

You may also like...