கக்கூஸ் ஆவணப்படம் சென்னை 01052017
மலக்குழியில் மனிதர்களை இறக்கும் இழிவிற்கு முடிவு கட்டுவோம்……
“கக்கூஸ் ஆவணப்படம்” திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவகத்தில் இன்று மாலை திரையிடப்பட்டது….
இதில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் தோழர்.அன்பு தனசேகரன் அவர்களின் தலைமையில் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது…
இதில் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தோழர்.தபசி குமரன், சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன் மற்றும் இயக்க தோழர்கள் வந்திருந்தனர்…
சென்னை மாவட்ட செயலாளர் தோழர்.உமாபதி அவர்கள் ஆவணப்படத்தின் திரையிடலை ஒருங்கிணைத்து நடத்தினார்..
திரையிடலுக்கு பிறகு பேசிய தோழர்.அன்பு தனசேகரன் அவர்கள் மனிதனின் மலத்தை மனிதனே அள்ளும் மடமையை பற்றியும், ஆவணத் திரைப்படத்தை பற்றியும் இயக்க தோழர்கள் இதற்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசி கலந்துரையாடலை முடித்தார்