சென்னை திவிக செயல்வீரர் செந்தில் அவர்களின் தந்தை மறைவு 05052017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.செந்தில் குமார் (FDL) அவர்களின் தந்தையார் இரா.இராமலிங்கம் இன்று (05.05.2017) காலை இயற்கை எய்தினார்…

மதச்சடங்குகளை தவிர்த்து தந்தையார் இரா.இராமலிங்கம் அவர்களின் உடலை பெண்களே மயானம் வரை சுமந்து சென்றனர்… திராவிடர் விடுதலை கழகத்தின் வீரவணக்கத்தின் முழக்கத்தோடு தந்தையாரின் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது….

இறுதி நிகழ்வில் சென்னை மாவட்ட செயலாளர்.தோழர்.உமாபதி அவர்கள் கழகத்தின் சார்பாக தந்தையார் இரா.இராமலிங்கம் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார்..

கழகத்தின் நிலைய செயற்குழு உறுப்பினர் தோழர்.அய்யனார் அவர்கள் இறுதி நிகழ்வில் மதச் சடங்குகளை தவிர்த்து பெண்களே ஏற்று நடத்திய தந்தையாரின் இறுதி நிகழ்வுக்கு பாராட்டையும் ….குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டார்.

18199490_198743670644278_4490834397704070569_n 18199554_198743993977579_8735998262229110083_n 18221691_198743617310950_1338057519843322808_n 18221742_198743463977632_227827598392852630_n 18222243_195517860966859_7996358255066244068_n 18222384_198744220644223_5418109939094161639_n

18300875_198504877334824_1503309689698528756_n

You may also like...