கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்
கீழ்வெண்மணி படுகொலையில் வரலாற்றில் மறைக்கப்படும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார் பசு. கவுதமன். ‘தடம்’ இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் முழுமையான வடிவம். 25.12.1968, மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு தினம். 44 மனித உயிர்கள், மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களாலேயே கொளுத்தப்பட்ட கொடும் கோரநாள். ஆயிற்று அய்ம்பது ஆண்டுகள் ! இந்த அய்ம்பது ஆண்டுகளிலும் எப்போதும் , எல்லோராலும் சொல்லப்பட்டது, “அரைப்படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக… ” இது கூலி உயர்வு மட்டுமேயான பிரச்சனையா? அல்லது அந்த மிகப்பெரிய அவலச் சம்பவத்தை – துயர விளைவை அப்படித்தான் குறுக்கி, சுருக்கிவிட முடியுமா? 62களின் இறுதிகளிலிருந்து நாகை தாலுக்காவில் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டச் சூழலில், ஆய்மழை தங்கவேலு , சிக்கல் பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன் ஆகியோர்களின் உயிர்பலி என்ற தொடர்ச்சியின் உச்சகட்ட வெளிப்பாடுதான் வெண்மணியின் 44 மனித உயிர்களை பலிகொண்ட தீயின் கங்குகள்.! “ மோதலுக்குக் காரணம் நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், இடது கம்யூனிஸ்ட்...