வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதை எதிர்த்து விழுப்புரத்தில் கழகம் பிரச்சாரம்

தாழ்த்தப்பட்ட – பழங்குடி இன மக்களாக கருதப்படுகின்ற மக்களின் உரிமைக்கு ஆதரவாக உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்வடையச் செய்து அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கின்ற விதமாக  தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும்  2.7.2018 அன்று  திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் (இந்திய) கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சின்னசேலத்தில்  தொடர்வண்டி (இரயில்) மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக   விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக்  கழகத் தோழர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தளர்வடையச் செய்கின்ற புதிய சட்டத்திருத்தத்தால்  ஏற்படுகின்ற தீமைகள்  குறித்து கொசப்பாடி, பூட்டை, அரசம்பட்டு, செந்தமிழ்பட்டு, சங்கராபுரம், வன்னஞ்சூர், அத்தியூர், கொளத்தூர், அரியலூர், பாக்கம், தொழுவந்தாங்கள், கடுவனூர் ஆகிய பகுதி மக்களிடம் சென்று  விளக்கிக் கூறி பிரச்சாரம் செய்தனர்.

பெரியார் முழக்கம் 26072018 இதழ்

You may also like...