எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்
“சனாதனத்தை வேரறுப்போம்” பொதுக் கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலை பி.எம்.தர்கா அருகில், 17.09.2022 அன்று மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பெரியார் படிப்பகத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடை வரை பறை இசை முழங்க ஊர்வலமாக தோழர்கள் சென்றனர். தொடர்ந்து, அண்மையில் மறைந்த திமுக பகுதி முன்னாள் அவைத் தலைவர், பகுத்தறிவாளர் க.வே செழியனின் படம் பொதுக் கூட்ட மேடையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறக்கப்பட்டது. பின், முடிவெய்திய லெனின் சுப்பையா அவர்களின் வழித் தோன்றல்களான புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவின் கருத்தாழமிக்க சாதி இந்துத்துவ எதிர்ப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த லெனின் சுப்பையா இணையர் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. 24 அர்ச்சகர்களும் பணி ஏற்று...
