ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 11-3 – 2022 அன்று புது ஆயக்குடி அரிசி ஆலை பகுதியில் உள்ள வ.பழனிச்சாமி நினைவுத் திடலில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு புது ஆயக்குடி பகுதி தோழர் வே.சங்கர் தலைமை வகித்தார். ஒட்டன்சந்திரம் தங்கவேல் முன்னிலை வகித்தார். நிகழ்வின்தொடக்கமாக ஆயக்குடி பகுதி பொறுப்பாளர் சு.அழகர்சாமி மந்திரமா? -தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தி, சாமியார்கள் செய்வது மந்திரமல்ல மக்களை ஏமாற்றும் தந்திரமே என்று செய்து காட்டினார்.

அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட தோழர் சண்முகம், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தொழில் முனைவோர் மோடியின் ஆட்சியில் சந்திக்கும் இடர்களை குறித்து விளக்கினார். தொடர்ந்து உரையாற்றிய கழக பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் படும் வேதனைகளையும், விளக்கினார். அடுத்து உரையாற்றிய அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஆயக்குடியின் அரசியல் பங்களிப்பையும் , இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற ஆயக்குடி மக்கள் நடத்திய போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு குறித்தும் விவரித்தார்.

நிறைவாக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் அவர்கள் தற்போதைய நிலையில் பாசிச பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் பெரியாரி யத்தின் தேவைகளையும் எடுத்து கூறினார். நிகழ்வில் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன், செயலாளர் சிவானந்தம், கரூர் மாவட்ட தோழர் வடிவேல் ராமசாமி, அரவக்குறிச்சி பகுதியை சார்ந்த குமரேசன், திருப்பூர் அய்யப்பன் மற்றும் ஆயக்குடி பகுதி கழகத் தோழர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்க வெளியீடுகள் ரூபாய் 1000 ற்கு விற்பனையானது.கொரான காலத்திற்கு பின்பு நடைபெற்ற பொதுக் கூட்டம் என்பதால் தோழர்கள் . பொதுக் கூட்ட ஏற்பாட்டை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

செய்தி : அய்யப்பன்

பெரியார் முழக்கம் 17032022 இதழ்

You may also like...