கொளத்தூர் மணி 75ஆவது பிறந்த நாள் குடும்ப விழாவாக நடந்தது

கிராமப் பிரச்சாரங்கள், கழகத்  தோழர் சந்திப்புக் கூட்டங்களை அதிகரிக்க கழகத் தலைவர் வேண்டுகோள்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் குடும்ப விருந்து நிகழ்ச்சி மேட்டூர் தூய மரியன்னை சமுதாயக் கூடத்தில்  கொளத்தூர் மணி தலைமையில் தொடங்கியது.

கலந்துரையாடல் கூட்டத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக நகர, கிளைக் கழக, ஒன்றியப் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் கழகத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும், இயக்க வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

கலந்துரையாடல் கூட்ட இடைவேளையில் கழகத் தலைவருக்கு 75ஆவது பிறந்த நாள் விழா கேக் வெட்டப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்பு தலைவருக்கு சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ரூ.75,000/- வழங்கப்பட்டது. பிறகு குடும்ப விருந்து நிகழ்வு மதியம் 2.00 மணிக்கு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட 250க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

உணவு இடைவேளை முடிந்து மீண்டும் கலந்துரையாடல் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தோழர்களும், பொறுப்பாளர்களும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.குறிப்பாக ஏற்காடு தோழர் பெருமாள் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக புதிய பரப்புரை வாகனம் வாங்குவதைப் பற்றியும் அதன் உள் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் படங் களுடன் கழகத் தலைவர், பொறுப்பாளர்கள், தோழர்களுக்கு விளக்கினார்.

அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, திருப்பூரில் நடைபெற்ற தலைமைக் குழு எடுத்த தீர்மானங்களைப் பற்றி தோழர்களுக்கு விளக்கினார். அதனைத் தொடர்ந்து மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் இயக்க செயல்பாடுகள் குறித்தும், வேலைத் திட்டங்கள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

நிறைவாக கழகத் தலைவர் நிறைவுரை நிகழ்த்தினார். குறிப்பாக இயக்க நிகழ்ச்சிகள் கிராமப் பிரச்சாரங்களாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் கழகத் தோழர்களின் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமென்றும், இளைஞர் களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றியும், ஆரிய சூழ்ச்சிகளைப் பற்றியும் விளக்கிட வேண்டுமென்றும் எடுத்துக் கூறினார்.

பின்பு மேட்டூர் நகரம், குமரன் நகர் கிளைக் கழகம், மாணவரணி, இளைஞரணி அமைப்பாளர்களின் பொறுப்புகளுக்கு புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்.

மாவட்ட மாணவரணி பொறுப்பாளர்கள்:  அகிலன், மகிழன், இனியன்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள்:  சுசீந்திரன், திவாகர்

மேட்டூர் நகரப் பொறுப்பாளர்கள்:  நகரத் தலைவர் –

செ. மார்ட்டின், நகர செயலாளர் – சு.குமரப்பா

குமரன் நகர் கிளைக் கழகம் :  தலைவர் – தேவராசு, செயலாளர் – அ.சீனிவாசன்

நிறைவாக நகரச் செயலாளர் சு.குமரப்பா நன்றியுரையுடன் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

பெரியார் முழக்கம் 23062022 இதழ்

You may also like...