வடமாநிலத்துக்கு போகிறதாம் கோவை மத்திய அரசு அச்சகம் மூடல்!
கோவையில் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபத்தில், அதிக உற்பத்தித் திறனுடன் இயங்கும் அரசு அச்சகத்தை, வட மாநில அச்சகங்களுடன் இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந் துள்ளன. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியில், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் 1964-ல் அரசு அச்சகம் தொடங்கப்பட்டது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆகியோரது முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த அச்சகம், 132.7 ஏக்கரில் அமைந்தது. சுமார் 25 ஏக்கரில் தொழிற்சாலையும், மீதமுள்ள பகுதியில் 463 குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கிய இந்த அச்சகத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து, தற்போது 66 தொழிலாளர் களுடன் இயங்குகிறது. ஆனாலும் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அஞ்சல்துறை, பார்ம் ஸ்டோர்ஸ், விமானப் படை ஆகிய வற்றுக்கான ஆவணங்களை இந்த அச்சகம் தயாரித்து வழங்கி...