சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ! கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களில் கழகம் களமிறங்கியது

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !

அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது.

ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன.

சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி,  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களிம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்படுகிறது

கோவை
26092017 காலை மாவட்ட ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் வைக்க கூடாது.சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை போன்ற மதப்பண்டிகைகள் கொண்டாடக்கூடாது என்ற அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தகோரி மனு வழங்கப்பட்டது..

குறிப்பு:
அரசு ஆணையை மீறும் காவல் நிலையங்கள் மீது வழக்கு போடப்படும் என்ற எச்சரிக்கையோடு மனு வழங்கப்பட்டது

kovai

குமரி

தோழர்.வழக்குரைஞர்.வே.சதா ,தோழர்.கலை ராஜன்அவர்களால் 26-09-17, செவ்வாய்க் கிழமை காலை 10.00மணிக்கு மனு வழங்கப்பட்டது.

%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf

திருப்பூர்

பொருளாளர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் முகில் இராசு , மாநகர செயளாளர் மாதவன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் அரிசுகுமார், தோழர் சத்தியமூர்த்தி ஆகியோர் 27092017 அன்று மனு அளித்தனர்

tirupur

You may also like...