தேர்வாணையத்தை எதிர்த்து கழக ஆர்ப்பாட்டங்கள்
தமிழ் தெரியாதவர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் வேலை வாய்ப்புத் தேர்வுக்கு மனு செய்யலாம் என்ற தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறக் கோரி கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பாக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமையில் 05.12.207 அன்று மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வடநாட்டாருக்குத் தாரை வார்க்கும் அரசுத் தேர்வாணையத்தையும் தமிழக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், மாவட்டப் பொருளாளர் மஞ்சுகுமார், பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர் நீதியரசர், செயலாளர் ஜான்மதி, சூசையப்பா, ஸ்டெல்லா, ராஜேந்திரன், அருந்ததியர் காலனி ஆறுமுகம் , குமரேசன் (ஆதித் தமிழர் கட்சி) , சிவராஜ பூபதி (மக்கள் அதிகாரம்), வழக்கறிஞர்கள் மைக்கிள் ஜெரால்டு, சுதர்மன், சமூக ஆர்வலர் போஸ், புத்தோமணி, மணிகண்டன், விஷ்ணு, சந்தோஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
(01.12.2017 அன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமானது ஓகி புயல் காரணமாக 05.12.2017 அன்று நடைபெற்றது).
திருப்பூரில் : 04.12. 2017 திங்கட்கிழமை. மாலை 4 மணி. மாநகராட்சி அலுவலகம் அருகில் கழகப் பொருளாளர் துரைசாமி தலைமையில் தமிழக அரசுப் பணியாளர்களாக தமிழ் நாட்டினருக்கே வேலை வாய்ப்பை வழங்கக் கோரியும் கர்நாடகம், குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருப்பதைப்போல மண்ணின் மைந்தருக்கே வேலை என்ற புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்டத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவையில் : தமிழ்நாடு தேர்வாணை யத்தின் தமிழர் விரோத அறிவிப்பைக் கண்டித்து 07.12.2017 மாலை 3 மணிக்கு தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. தமிழகத்தில் 85 இலட்சம் தமிழக மாணவர்கள் வேலையில்லாத நிலையில் வெளி மாநிலத்தவருக்கு வேலையைத் தாரை வார்க்கும் தேர்வாணையத்தைக் கண்டித்தும், ஊடக அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கக் கோரியும் முழக்கமிட்டனர். திருப்பூர் துரைசாமி, தலைமையில் நேருதாஸ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சுசி கலையரசன் வி.சி.க, தோழர் வே.வெள்ளிங்கிரி திவிக, தினேசுகுமார் தமிழ்நாடு திராவிடர் கழகம், வினோத்குமார் தந்தைபெரியார் திக, பன்னீர்செல்வம் சமூகநீதிக் கட்சி, கார்க்கி சமத்துவக் கழகம், இளவேனில் தமிழ்ப்புலிகள் கட்சி, பெரோஸ்பாபு ஆர்.ஒய்.ஏம், பேரறிவாளன் ஆதித் தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி கண் மணி, எழுத்தாளர் நடராசன், தமிழ் நாடு மாணவர் கழகம் அஜித்குமார், போன்றோர் ஆர்ப்பாட்டத்தில் 60 பேர் கலந்து கொண் டனர். நன்றியுரை நிர்மல் குமார் கூறினார்.
பெரியார் முழக்கம் 14122017 இதழ்