Category: ஈரோடு வடக்கு

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணம்

பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து ஒன்றியப் பகுதியில் தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் செய்வது என மாவட்ட கலந் துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 23.09.2018 ஞாயிறு அன்று அந்தியூர் ஒன்றியம் அத்தாணி பகுதியில் பரப்புரைப் பயணம் துவங்கியது. அத்தாணி பகுதியில் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், யாழ்மதி ஆகி யோரின் பாடல்களுடன் பரப்புரைப் பயணம் துவங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணு கோபால், நம்பியூர் இரமேசு, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழ்நாடு அறிவியல் மன்றம்  சுந்தரம் நன்றி கூறினார். அடுத்து பயணம்  கீழ்வானி பகுதிக்குச் சென்று அடைந்தது. கீழ்வானி பகுதியில்  வீரா கார்த்திக்,  இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். கீழ்வானி இந்திரா நகரில் அமைந்துள்ள கழகக் கொடிக் கம்பத்தில் ...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

ஈரோடு தெற்கு : 17.09.2018 பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. காலை, ஈரோடு ப.செ. பூங்கா பெரியார் சிலை வளாகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின் தி.க., த.பெ.தி.க., தி.வி.க. அமைப்புகளின் சார்பாக நூற்றுக்கணக்கான தோழர்கள் ஊர்வலமாக பெரியாரின் இல்லத்தை அடைந்து அங்கும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தி.வி.க. ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இரு சக்கர வாகன ஊர்வலத்தில் கருஞ்சட்டை தோழர்கள் பெரியாரை வாழ்த்தி முழக்கமிட்டபடி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இறுதியாக சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாகன பேரணியை நிறைவு செய்தனர். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களும்...

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

கொளத்தூரில் பறை பயிற்சிப் பட்டறை

15.09.2018 அன்று கழகத் தலைவர்  கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற தமிழர் கல்வி உரிமை மீட்புப் பயணம் குறித்த தலைமைக் குழு – பயண ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் –  இயக்கக் கொள்கைப் பரப்புரைக்கும்,  மக்களிடையே கருத்துகளை எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கும் கலைக்குழுக்களின் தேவை குறித்து விரிவாக  விவாதிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் முதல் முன்னெடுப்பாக தமிழ்நாடு மாணவர் கழகமும், மாற்றம் பகுத்தறிவு கலைக் குழுவும் இணைந்து சேலம் மாவட்டம் கொளத்தூர், உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் இரண்டு நாள் பறை பயிற்சிப் பட்டறையை எதிர்வரும் 3.11.2018,  4.11.2018 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுக்கு மட்டும் நுழைவுக் கட்டணமாக ரூ.500 (பயிற்சி, உணவு செலவுகள் உட்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான பயிற்சிக் கட்டணம்  ரூ.1200 ஆகும். பயிற்சி பெற விரும்பும்  கழகத் தோழர்கள் கீழ்க்கண்ட கைபேசி எண்களுக்குத்...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

குமரி மாவட்டம் : திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் நடத்திய பெரியார்140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு, விண்ணரசு வித்யா கேந்திரா, அழகிய மண்டபத்தில் தக்கலை எஸ்.கே.அகமது (பெரியாரியலாளர்) தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஷ்ணு “பெரியார் பார்வையில் கடவுள் மறுப்பு” என்னும் தலைப்பிலும், நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழகம், மாவட்டத் தலைவர்) “பெரியார் பார்வையில் இடஒதுக்கீடு” என்னும் தலைப்பிலும், தமிழ் மதி (மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) “பெரியார் பார்வையில் நீட்” என்னும் தலைப்பிலும், போஸ் (மார்க்சியலாளர்) “பெரியார் பார்வையில் பொதுவுடைமை” என்னும் தலைப்பி லும், மகிழ்ச்சி (ஒருங்கிணைப்பாளர், பொது வுடைமை தொழிலாளர் கட்சி) “இளைஞர்கள் எதை நோக்கி பயணிப்பது” என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். பின்பு கலந்துக்கொண்ட அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சூசையப்பா (முன்னாள்மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) நன்றி கூறமுடிவுற்றது. கூட்டத்தில் மஞ்சு குமார் (மாவட்டப்...

தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம் ஈரோடு 15092018

தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம் ஈரோடு 15092018

”தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரை பயணக்குழு கருத்துக் கேட்புக் கூட்டம்” இடம்: KKSK மகால்,பவானி ரோடு,ஈரோடு நாள்: 15.9.18,சனி, காலை 10 மணி *தலைமை:* தோழர்.கொளத்தூர்மணி *முன்னிலை:* தோழர்.விடுதலை இராசேந்திரன் *நிகழ்ச்சி ஏற்பாடு:* தோழர்.இரத்தினசாமி *தொடர்புக்கு:* தோழர்.வேணுகோபால் 97883 64964 தோழர்.சண்முகப்பிரியன் 99444 08677

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! 15092018

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! 15092018

ஈரோட்டில் ‘பெரியார் கைத்தடி ஊர்வலம்’ ! கழகத்தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைமையில்…. மதத்தை அரசியலாக்காதே ! மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து ”பெரியார் கைத்தடி ஊர்வலம்” நாள் : 15.09.2018,சனிக்கிழமை நேரம் : மாலை 4.00 மணி இடம் : தந்தை பெரியார் சிலை வளாகம் (ப.செ.பூங்கா), ஈரோடு. பேரணியை துவக்கி வைப்பவர் : தோழர் விடுதலை ராசேந்திரன்,பொதுச்செயலாளர், தி.வி.க. தோழமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

ஈரோடு வடக்கு – ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 02.09.2018 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக பேச்சாளர் வேலுச்சாமி  தலைமையில் மாவட்ட செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.  கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் விழாவை கோபியில் அனைத்து இயக்கங்களும் இணைந்து ஊர்வலம் நடத்துவது எனவும், மாவட்ட முழுவதும் அய்யா பிறந்த நாள் விழாவினை தமிழர் கல்வி மீட்பு பரப்புரை பயணமாக வாரந்தோறும் ஞாயிறன்று ஒவ்வொரு ஒன்றியங்களாக நடத்துவது எனவும், பரப்புரை பயணத் தொடக்க நிகழ்வாக செப்டம்பர் 23 அன்று குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட கலந்துரையாடல் 02.09.2018 அன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி மாவட்ட...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

சென்னை, ஈரோட்டில்  காமராஜர் பிறந்தநாள் விழா

சென்னை, ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் ந.விவேக் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக ‘யாழ்’ பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். ந. அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுந்தரவள்ளி, காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரம்பலூர் துரை தாமோதரனின் ‘மந்திரமல்ல.! தந்திரமே!’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். பகுதிவாழ் பெண்கள் பெருமளவில் திரண்டு, முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டனர். இறுதியாக...

காமராஜர் பிறந்தநாள் விழா – ஈரோடு !

காமராஜர் பிறந்தநாள் விழா – ஈரோடு !

காமராஜர் பிறந்தநாள் விழா – ஈரோடு ! ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 15.07.2018 ஞாயிறு மாலை 6:30 மணியளவில் சித்தோடு கொங்கம்பாளையத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. இவ்விழா சண்முகப் பிரியன் தலைமையில், தோழர் இளங்கோ முன்னிலையிலும் நடைபெற்றது.  மாநகரத் தலைவர் திருமுருகன் வரவேற்புரையாற்ற , தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் வீரா கார்த்தி மந்திரமல்ல தந்திரமே என்னும் அறிவியல் நிகழ்ச்சி நடத்துக் காட்டினார். இறுதியாக கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். தோழர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை கூறினார். நிகழ்வில் கலந்துகொண்ட தோழர்கள் அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, குமார், இசைக்கதிர், பிரபு சி.எம். நகர், கிருஷ்ணன், பிரபு ரங்கம்பாளையம், சவுந்தர், கௌதம், ஜெயபாரதி,ஜெகன் கோபி, கமலக்கண்ணன், யாழ் எழிலன்

உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

உரிமை முழக்க ஊர்திப் பேரணி வெற்றிக்கு உழைத்த தோழர்கள்

ஊர்திப் பயணத் தில் முழுமையாகப் பங்கேற்றத் தோழர்கள் : இரண்யா, கனலி, பரத், விஜி, மாரி அண்ணன், கொளத்தூர் குமார், புகழேந்தி, பாலு துரை, சரஸ்வதி, சுதா, கிருஷ் ணன், பிரபாகரன், கனல் மதி, சாமிநாதன், சங்கர், செல்வேந்திரன், இராசேந்திரன், தம்பி துரை, பிரதாப், பென்னட், அண்ணா துரை, சிவகாமி, முத்துக் குமார், செல்வம், அம்ஜத் கான், மலர், சங்கீதா, யாழிசை, யாழினி, மீனா, முத்துப்பாண்டி, சஜினா, சௌந்தர், சுசீந்திரன், திலீபன், ஜென்னி, மதிவதனி, கதிரவன், இளமதி, யாழினி, சூலூர் பன்னீர் செல்வம், ஜோதி, தமிழ்ச் செல்வன், அறிவுமதி, இராமச்சந்திரன், யுவராஜ், சத்தியராஜ், வேணுகோபால், கதிர்வேல், இரத்தினசாமி, விக்னேஷ், குமரேசன், பால் பிரபாகரன், துரைசாமி, கண்ணன், அய்யப் பன், சக்திவேல், கார்த்திக், சந்திரசேகர், தினேஷ், விஜயகுமார், கோபி, கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், . பறைக்குழுத் தோழர்கள் (மேட்டூர் காவேரிகிராஸ் பகுதி) : சக்திவேல், கார்த்திக், சந்துரு, விக்னேஷ், ஆர்.எஸ். விவேக்,...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்

திருப்பூரில் : திருப்பூர் 02-05 2018 புதன்கிழமை காலை 11 மணி அளவில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சியின் முன்பு நடைபெற்றது. 1)            தமிழக அரசு இயற்றிய ‘நீட்’ விலக்கு தொடர்பான சட்ட மசோதாவுக்கு இசைவு கோரியும், 2)            கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், 3)            பட்டியலின பழங்குடி மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51,52 யை இரத்து செய்து முன்பு இருந்ததுபோல அரசாணை92 ஐ நடைமுறைப்படுத்தக்  கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. நிகழ்வில்  தேன்மொழி (மாவட்ட அமைப்பாளர் – டி.எஸ்.எப்.),  தமிழ் செழியன் (டி.எஸ்.எப்.), மதுலதா (டி.எஸ்.எப்.) ஆகியோர் உரையாற்றினர். வீ. சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), முகில் இராசு (மாவட்ட தலைவர்...

மதவெறி, ஆணாதிக்க சிந்தனைகளை அழித்தொழிக்க கோபி கழக மகளிர் மாநாடு அறைகூவல்

மதவெறி, ஆணாதிக்க சிந்தனைகளை அழித்தொழிக்க கோபி கழக மகளிர் மாநாடு அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபிசெட்டிபாளையத் தில்15.04.2018 ஞாயிறு அன்று ‘பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு’ மகளிர் தின மாவட்ட மாநாடு பெரியார் திடலில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவை இசைமதி மற்றும் திருப்பூர் பெரியார் பிஞ்சு யாழினி ஆகியோர் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிந்தனைப் பாடல்களைப் பாடினார்கள். அதனைத் தொடந்து பெண்கள் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது. அதில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறு அடிமைப்படுத்தப்படு கிறார்கள் என்பது பற்றியும் அதற்கான தீர்வு குறித்தும் வழக்காடு மன்றம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் பொதுக் கூட்டம் தொடங்கியது. நிகழ்விற்கு மணிமொழி தலைமை ஏற்க கோமதி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து சிவகாமி மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார். ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி, தமிழ்நாடு அறிவியல் மன்ற  ஒருங்கிணைப்பாளர்  சிவகாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டு...

மகளிர் தின மாநாடு – கோபி 15042018

மகளிர் தின மாநாடு – கோபி 15042018

மகளிர் தின மாநாடு – கோபி – 15.04.2018. திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக கோபிசெட்டிபாளையத்தில் 15.04.2018 ஞாயிறு அன்று பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு மகளிர் தின மாவட்ட மாநாடு பெரியார் திடலில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்வாக நிமிர்வு கலைகுழவினரின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவை இசைமதி மற்றும் திருப்பூர் பெரியார் பிஞ்சு யாழினி ஆகியோர் பெரியார் மற்றும் அம்பேத்கர் பாடல்களை பாடினார்கள். அதனை தொடந்து பெண்கள் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது. அதில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் எவ்வாறு அடிமைபடுத்த படுகிறார்கள் என்பது பற்றியும் அதற்கான தீர்வு குறித்தும் வழக்காடு மன்றம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் பொதுகூட்ட மேடை நிகழ்வு தொடங்கியது. நிகழ்விற்கு தோழர் மணிமொழி அவர்கள் தலைமை ஏற்க தோழர் கோமதி வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தோழர் சிவகாமி அவர்கள் மாநாடு தீர்மானத்தை வாசித்தார். அதனை தொடர்ந்து...

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் !

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் !

கோபி மகளிர் மாநாட்டு தீர்மானங்கள் ! 15-4-2018 ஞாயிறு அன்று,ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்.: தீர்மானம்: 1 அ) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு ஆதாரமாகவும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரிநீரை, (அளவில் குறைவாக இருப்பினும்,) கர்நாடக அரசிடம் இருந்து நிரந்தரமாகக் கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட; உச்சநீதிமன்றத்தின் தீர்;ப்புக்குப் பின்னரும் சொந்த அரசியல் லாபங்களுக்காக காவிரி மேலண்மைவாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசுக்கு இம்மாநாடு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.. மத்திய அரசு மேலும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக கவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஆ) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திப் போராடிய அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், கலைத் துறையினருக்கும் இம்மாநாடு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள்மீது புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும்...

தினமலர் நாளிதழ் எரிப்பு !

தினமலர் நாளிதழ் எரிப்பு !

தினமலர் நாளிதழ் எரிப்பு ! தமிழை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை 05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நங்க வள்ளியில் கழகத்தோழர் எரித்து தினமலரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

கோபியில், மகளிர் தின விழா மாவட்ட மாநாடு ! 15042018

கோபியில், மகளிர் தின விழா மாவட்ட மாநாடு ! 15042018

பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு எனும் முழக்கத்துடன்……….. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……… நாள் : 15.04.2018 ஞாயிறு நேரம் : மாலை 6.00 மணி இடம் : பெரியார் திடல்,கோபி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் கவுசல்யா, ஜாதி ஒழிப்புப்போராளி, தோழர் திவ்யபாரதி, கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர். தோழர் வளர்மதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம். தோழர் சிவகாமி, தலைவர்,தமிழ்நாடு அறிவியல் மன்றம். ”நிமிர்வு” கலைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

எச்ச ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோபி

எச்ச ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கோபி

கோபிசெட்டிபாளையத்தில் 08/03/2018 அன்று அனைத்து கட்சி சார்பில் எச்ச ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன.

ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! ஈரோடு அக்கிரஹாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலையை அகற்ற வேன்டும் என கூறிய பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து 08.03.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

கோபி, கோவையில் பெரியார் நினைவு நாள்

பெரியார் நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ், அருளானந்தம், சுப்பிரமணி, ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர், மாணவர் கழக தோழர் அறிவுமதி, பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை : கோவை நகரில் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் 44ஆவது நினைவுநாளை மிகச்சிறப்பாக நடத்தியது. மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் சிலைக்கு மாலையிட்டு, பெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நன்றி உணர்வுடன்  முழக்கமிட்டனர்.  மாணவர் கழகப் பொறுப்பாளர் வைதீஸ்வரி உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012018 இதழ்

பெரியாரைப் படி; அதுவே விடுதலைக்கு முதல் அடி

ஈரோட்டில் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் மணிமேகலை நிகழ்த்திய தலைமையுரை: விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்த  எம் தந்தையும், இவ்வுலகில் தோன்றிய அத்துணைப் புரட்சிக்காரர் களையும் விட, பெண்ணுரிமைக்கும் அவர்தம் விடுதலைக்கும் பெரியதாய் சிந்தித்த… குரல் கொடுத்த… போரிட்டக் கலகக்காரரான எங்கள் அய்யாவை பெரியாரை நன்றியோடு கைகூப்பி வணங்குகிறேன். இப்பெண்கள் சுயமரியாதை மாநாட்டின் நோக்கத்தையும் தற்காலப் பெண்களின் நிலையையும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் அவல நிலையில் வாழ்கிறார்கள் என்பதை இங்கு வந்திருக்கிற ஆளுமைகள், விசாலமாக வும், விசாரணையுடனும், பெரும் தரவு களோடும் எடுத்துரைக்க இருப்பதால், நான் சிறியத் தகவல் ஒன்றோடு என் தலைமை உரையை முடித்துக் கொள்ள நினைக்கிறேன். நாங்கள் களப்பணிக்கு சென்ற போதெல்லாம் மக்களின் எண்ணங்கள், குறிப்பாக பெண்களின் மத்தியில் பெரியார் பற்றிய உருவகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். பெரியார் என்பவர் கடவுளை மறுப்பவர்! பெரியார் என்பவர்...

இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு ஈரோடு 07012018

இரண்டாம் கட்ட மாணவர் சந்திப்பு… நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில், ஈரோட்டில் பெரியார் JCB என்ற இடத்தில் இன்று(07.01.2018) காலை 11 மணிக்கு தோழர் இனியவன் தலைமை வகிக்க, தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்) முன்னிலையில், மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. நிகழ்விற்கு, வெப்படை, பூந்துறை, மல்லசமுத்திரம், சென்னிமலை, திருச்செங்கோடு போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், புதிய மாணவர்கள் கலந்து கொண்டதால், மாணவர்களின் சமகால ப்ரச்சனைகளான, நீட் தேர்வு, TNPSC-ன் தமிழக மாணவர்களுக்கு எதிரான அறிவிப்பு, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி  தோழர் ரத்தினசாமி(மாநில அமைப்புச் செயலாளர்), தோழர் வைரவேல்(நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்), தோழர் வேனுகோபால்(ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்) ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். அதன்பின், மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், முதல் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்நிகழ்விலும் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவதாக ஈரோடு மண்டலம் சார்பாக ஈரோட்டில் மாணவர்கள் மாநாடு நடத்துவது, என்ற...

தந்தை பெரியார் நினைவு நாள் – ஈரோடு வடக்கு மாவட்டம் 24122017

தந்தை பெரியார் நினைவு நாள் – ஈரோடு வடக்கு மாவட்டம். தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு 24.12.2017 அன்று காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கழகத்தின் சார்பில் கோபி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு அறிவியல் மன்ற தோழர் கற்பகம் மற்றும் மணிமொழி ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்வில் மாநில வெளியீட்டு செயலர் இராம.இளங்கோவன்,நிவாஸ்,அருளானந்தம், சுப்பிரமணி,ரகுநாதன் மற்றும் அறிவியல் மன்ற தோழர்கள் ஆசைத்தம்பி, விசயசங்கர் மாணவர் கழக தோழர் அறிவுமதி,பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி கூடிய தலைமைக் குழு தீர்மானங்களை செயல்படுத்த உடனடியாக களமிறங்கினர். நாமக்கல் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில்  மாணவர்கள் சந்திப்பு, திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 31.12.2017 அன்று காலை 11:30 மணிக்கு தொடங் கியது. நிகழ்வில், ராசிபுரம், மல்லசமுத்திரம், பவானி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மனோஜ் தலைமை வகிக்க, தோழர்கள் வே.ஜீவிதா மற்றும் நித்யா முன்னிலை வகிக்க மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. மாணவர்களிடையே, நீட், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தமிழர் விரோத போக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்ட புதிய மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். கலந்துரையாடலுக்குப் பின்,  சமூக வலைதளங்களில் மாணவர்கள் பிரச்சனைகளை பரப்புதல், கல்லூரி நுழைவாயிலில் காலை நேரங்களில் (வாய்ப்பைப் பொறுத்து) துண்டறிக்கைகளை கொடுத்தல், துறை சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு துண்டறிக்கைகளை...

ஈரோடு மாநாடு பெண்களுக்கு அழைப்பு சுயமரியாதைக்குப் போராடுங்கள்!

‘பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன் வரவேண்டும்’ என்று ஈரோடடில் நடந்த சுய மரியாதை மாநாடு பெண்களுக்கு அறைகூவலை விடுத்தது. அரங்குகளில் மண்டபங்களில் மட்டுமே ஒலித்து வந்த பெண்ணுரிமைக் கருத்துகளை திறந்தவெளி மாநாடாக நடத்தி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். சென்னையில் ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்தது பெண்கள் மாநாடு. ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளது. ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெண்கள் சுயமரியாதை மாநாடு டிசம்பர் 16 மாலை, வீரப்பன் சத்திரம் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கோவை, சேலம், மேட்டூர், திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள், தோழியர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின.  தொடர்ந்து பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகளைக் கொண்டு பாடல்களையும், இசை நாடகங்களையும் நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தன. பெரியார் படத்துடன்...

பெண்கள் சுயமரியாதை மாநாட்டிற்காக சுவரொட்டி ஒட்டும் பணியில் கழகத்தோழர்கள்

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் டிசம்பர் 16 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ”பெண்கள் சுயமரியாதை மாநாட்டிற்காக சுவரொட்டி ஒட்டும் பணியில் கழகத்தோழர்கள் !

டிசம்பர் 16இல்  ”ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு”

டிசம்பர் 16இல் ”ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதை மாநாடு” இடம் : வீரப்பன் சத்திரம், ஈரோடு நேரம் : மாலை 5 மணி. வரவேற்புரை : கவிப்பிரியா தலைமை : மணிமேகலை முன்னிலை : சங்கீதா, முத்துலட்சுமி. உரை : சுப்புலட்சுமி ஜெகதீசன் (முன்னாள் மத்திய இணை அமைச்சர்-தி.மு.க.) பால பாரதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஓவியா (பெண்ணிய செயல்பாட்டாளர்) திவ்ய பாரதி (ஆவணப்பட இயக்குனர்) ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) நிறைவுரை : கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன். நன்றியுரை : சுமதி. காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள், பறையிசையோடு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், ஈரோடு மாவட்டம் (தெற்கு) தோழர்களே! மாநாட்டுக்கு திரண்டு வாரீர்!

கழகம் களமிறங்கியது – அரசு பள்ளியில் கணபதி ஹோமம் – ஈரோடு 25092017

முதல்வர் திறந்து வைத்த கட்டிடத்திற்கு “கணபதி ஹோமம்” .. திராவிடர் விடுதலைக் கழகம் கண்டிப்பு.. கோபி வட்டம் நம்பியூர் ஒன்றியம் பட்டிமணியக்காரன் பாளையம் பகுதியில் உள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை, கடந்த மாதம் தமிழக முதல்வர் ஈரோடு வந்த போது, காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்த பிறகும் அப்பள்ளியைத் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல், கணபதி ஹோமம் நடத்திய பிறகுதான் திறக்கப்படும் என்று அப்பள்ளி தலைமையாசிரியை திருமதி.மங்கையர்க்கரசி கணபதி ஹோமம் நடத்துவதாக அறிவித்துள்ளார். எனவே, முதலைமைச்சர் அவர்கள் திறந்து வைத்த பிறகும் கூட, கணபதி ஹோமம் நடத்த முயற்சிக்கும் செயலை தடுத்து நிறுத்தக் கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போதே சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்த ஆட்சியர் இச்செயலை தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.. நிகழ்வில், இரத்தினசாமி,ராம.இளங்கோவன்,சண்முகப்பிரியன்,சிவக்குமார்,வேணுகோபால்,குமார், சத்தியராசு, சி.என்.சி சிவக்குமார், விஜயசங்கர் ஆகியோர் கலந்து...

சட்ட விரோத ஆயுத பூஜையைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஈரோடு 25092017

அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மதம் தொடர்பான கடவுளர் படங்கள் இடம் பெறக் கூடாது. குறிப்பிட்ட மதம் தொடர்பான விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று அரசாணை உள்ளது.. ஆனால், அரசாணையை மீறி அரசாணைக்கு முரணாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் காவல்நிலையங்களிலும் “சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை விழாக்கள்” கொண்டாடப் படுகின்றன.. சட்டவிரோத இந்த பூஜையை தடுத்து நிறுத்தக்கோரி, ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.. தோழர்.இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.ராம. இளங்கோவன், வெளியீட்டுச்செயலாளர் ஆசிரியர்.சிவக்குமார் தோழர்.சண்முகப்பிரியன், தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர்.வேணுகோபால்,வடக்கு மாவட்டச் செயலாளர் தோழர்.சத்தியராசு,தோழர்.கோபி விஜயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்

பெரியார் சிலை முன் நடந்த சுயமரியாதை திருமணம்

செப்டம்பர்-17 தந்தை பெரியாரின் 139 –வது பிறந்தநாள் விழா அன்று கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு அளுக்குளி சேர்ந்த விஜய சாரதிக்கும் கொளப்பலூர் பகுதியை சார்ந்த அபிராமிக்கும், சாதிமறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மாநில வெளியிட்டு செயலாளர் இராம.இளங்கோவன் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை வாசிக்க மணமக்கள் இருவரும் அவ்வுறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் மாலை மாற்றிக்கொண்டனர். இவ்வாறு நடந்த எளிமையான நடந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வியப்புடன் பார்த்தனர். திருமணத்திற்காண ஏற்பாடுகளை அளுக்குளி கிளைக்கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

கீழ்வானி இந்திராநகரில் பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அந்தியூர் ஒன்றியம் கீழ்வானி இந்திராநகரில் அமைக்கப்பட்டு இருந்த கழக கொடிகம்பத்தில் கழக கொடியினை மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் கழக துண்டறிக்கைகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் ஆசிரியர் மற்றும் கிளை கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குருவரெட்டியூர்

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் திவிக, திக தோழர்கள் இணைந்து பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலமாக சென்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஈரோடு வடக்கு

தி.வி க ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக கோபி சத்தி அந்தியூர் நம்பியூர் ஆகிய ஒன்றியங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது அய்யா தந்தை பெரியார் அவர்களின் 139 வது பிறந்த நாள் விழாவையொட்டி எதிர்வரும் 24.09.2017 அன்று கோபி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் கொண்டாடப்படவுள்ளது அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம் இங்கனம் தி.வி.க ஈரோடு வடக்கு மாவட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்தியூர் ஓன்றியம் சார் பாக தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது பிறந்தநாள்வினை முன்னிட்டு செப்டம்பர் 17 ந் தேதி காலை கீழ்வானி இந்திரா நகர பகுதியில் கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை மாவட்ட செயலாளர்  வேணுகோபால் ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் கழகத்தின் சார் பாக துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் மற்றும் கிளை கழகத்...

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெரியார் பிறந்தநாள் விழா தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 10.09.2017 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற்றது. மாநில வெளியீட்டு செயலாளர் இளங்கோவன் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற 17 அய்யா பிறந்தநாள் விழாவை மாவட்ட கழகத்தால் சிறப்பாக சத்தியமங்கலத்தில் துவங்கி மாவட்ட முழுவதற்கும் அனைத்து பகுதியில் கழக கொடியினை ஏற்றுவது எனவும், கோபி நகர,ஒன்றிய கழகத்தின் சார் பாக 24.09.2017 அன்று கொடியேற்று விழா நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா செலவிற்காக மாவட்ட அமைப்பாளர் நிவாஸ் அவர்களது மகன் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் அவர்கள் தனது உண்டியல் சேமிப்பு தொகையாக ரூபாய் 750/_ ஐ மாவட்ட செயலாளர் வேணுகோபால் அவர்களிடத்தில் வழங்கினார். கலந்துரையாடலில் மாவட்ட கழகத்தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு பெரியார் சிலை முன் கழக தோழர்கள் நீட் தேர்விற்கு எதிரான உறுதிமொழி 03092017

திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட தோழர்கள் 03092017 மாலை ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையத்தில் கல்வி உரிமை போராளி டாக்டர் அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் பன்னீர் செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து 60க்கும் மேற்பட்ட தோழர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பெரியாரிய வழியில் போராட்டம் நடைபெறும், ஓயமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர். நீட் தேர்வுக்கு எதிரான உறுதிமொழியை தோழர் கனல்மதி படிக்க அனைத்து தோழர்களும் உடன் சேர்ந்து உறுதியேற்றனர். தேர்வு உள்ளிட்ட தகுதி, திறமை என்று சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறிக்கும் எல்லாவித நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிப்போம், தமிழக மக்களின் கல்வி நலம் காப்போம் மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள்...

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு 03092017

ஈரோட்டில், “கல்வி உரிமைப்போராளி ” அரியலூர் அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம். திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு , 03.09.2017 அன்று மாலை 3 மணிக்கு ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய மாநிலை அரசுகளைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார்.. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் வேணுகோபால், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், ஆசிரியர் சிவகாமி, சங்கீதா, இணையதளப் பொறுப்பாளர் தோழர் விஜய்குமார், அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார்

தோழர்.தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா ஈரோடு 03092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் மகன் தோழர் தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழா , 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “EKM முகமது தாஜ்”, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் தோழர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன், திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல்...

ஈரோடு, திருப்பூரில் இணைய தள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஒருங்கிணைப்பில் ஆக.20 அன்று சூரம்பட்டி வலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. இரத்தினசாமி அறிமுக உரை நிகழ்த்தினார். முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தற்போதைய சூழலில் பெரியாரியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். முகநூலில் கழகத் தோழர்கள் எப்படி தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார். கழக இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து திருச்செங்கோடு பூபதி மீம்ஸ் பதிவிடுதல் குறித்து விளக்கினார். 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது....

இணையேற்பு விழாவும் ! முற்போக்காளர்கள் கருத்துரைகளும் ! ஈரோடு 03092017

கழகத்தின் ஈரோடு மாவட்டச்செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் இல்ல இணையேற்பு விழா ! இணையர்கள் : தமிழ்ப்ரியன் ராஜநந்தினி நாள் : 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8.00 மணி முதல் 10 மணி வரை இடம் : கே.கே.எஸ்.கே.மஹால் திருமண மண்டபம், அசோக புரம்,ஈரோடு. கழகத்தலைவர்,கழகப் பொதுச்செயலாளர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கழக மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இணையதள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல் மற்றும் பயிற்சி ஈரோடு 20082017

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் தோழர் இரத்தினசாமி ஈரோடு அவர்களின் ஒருங்கிணைப்பில் 20082017 அன்று சூரம்பட்டிவலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தோழர் இரத்தினசாமி அவர்கள் இணையத்தில் செயல்படவேண்டிய முறைகள் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தோழர் பரிமளராசன் அவர்கள் தற்போதைய சூழலில் பெரியாரியியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளிடம் இருந்து இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக்கூறினார். மேலும் முகநூலில் கழக தோழர்கள் எங்ஙணம் தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார் தோழர் விஜய்குமார் கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் திருச்செங்கோடு தோழர் பூபதி மீம்ஸ் பற்றியும் விளக்கினர் 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு தோழர் வைரவேல், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது. அடுத்த பயிற்சி வகுப்பு...

காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அந்தியூர் 20072017

ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் தவுட்டுபாளையத்தில் 20072017 அன்று காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும் – பொதுக்கூட்டம் பவானி 19052017

19/05/2017 வெள்ளி மாலை 6.00 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் “மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமைகளும்” என்ற தலைப்பில் கொடியேற்ற நிகழ்வுடனும் T.K.R பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. நிகழ்வுக்கு முன்னதாக பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்திலும், அந்தியூர் பிரிவில் உள்ள கொடிக்கம்பத்திலும் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி ஏற்றினார். தொடக்கத்தில் பகுத்தறிவு பறை இசை,  பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டன. தோழர் வேல்முருகன் வரவேற்புரையாற்ற மாவட்ட செயாலாளர் வேணுகோபால் கூட்டத்துக்குத் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி தலைமை கழக பேச்சாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் சுந்தரம், மாநில அமைப்புச் செயாலாளர்  இரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயாலாளர் இராம. இளங்கோவன் அவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் பெரியாரியமும், அம்பேத்கரியமும் மட்டுமல்லாமல்...

மாடுகள் விற்பனை தடை, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே ! மாடுகள் விற்பனை தடைச்சட்டத்தை திரும்பபெறு ! தமிழக அரசே, திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக திரும்ப பெறு ! கைது செய்யப்பட்டுள்ள மீதேன் திட்ட எதிர்ப்புத்தலைவர் பேராசிரியர் செயராமன் உள்ளிட்ட 11 பேரை உடனடியாக விடுதலை செய் ! சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆய்வு மாணவர் சூரஜ் மீது தாக்குதல் தொடுத்த இந்துத்துவ வன்முறையாளர்கள் அனைவரையும் கைது செய் ! என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே 09062017 வெள்ளி அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : மாவட்ட மக்கள் சிவில் உரிமைக்கழகம்,ஈரோடு.

மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம் ஈரோடு 28052017

மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம் ஈரோடு 28052017

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தெருமுனைக் கூட்டம்…. ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் 28.05.2017 மாலை 6:30 மணிக்கு மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டம்.. ஆத்தூர் மகேந்திரனின் மந்திரமல்ல தந்திரமே அறிவியல் நிகழ்ச்சியும், இந்தி திணிப்பு சிறப்புரை தோழர் வீரா கார்த்தி ( தமிழ்நாடு அறிவியல் மன்றம்) தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி….. தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க அழைக்கிறோம்….  

மத்திய அரசும் , தமிழக மக்களின் உரிமைகளும் – கழக பொதுக்கூட்டம் பவானி 19052017

பவானியில், கழகப் பொதுக் கூட்டம் ! “மத்திய அரசும் , தமிழக மக்களின் உரிமைகளும்” எனும் தலைப்பில். நாள் : 19.05. 2017 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.00 மணி. இடம்: பாவடித்தெரு,அந்தியூர் பிரிவு, பவானி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். தோழர் ப.பா.மோகன், மூத்த வழக்கறிஞர், இந்திய கம்னியூஸ்டு கட்சி. மேட்டூர் T.K.R. இசைக்குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்.